ஹரப்பா நாகரிகம் (The Harappan Civilization)
வேளாண்மை, தொழில், கைத்தொழில், வாணிகம் என அனைத்துவகை பொருளாதார நடவடிக்கைகளையும் ஹரப்பா பண்பாட்டில் காணமுடிகிறது. கோதுமையும், பார்லியும் முக்கிய விளைபொருட்களாகும். எள், கடுகு, பருத்தி போன்றவையும் பயிரிடப்பட்டன, மிகையான தானியங்கள் களஞ்சியங்களில் சேமித்து வைக்கப்பட்டன. வெள்ளாடுகள், செம்மறியாடுகள், எருதுகள் போன்றவை முக்கிய வளர்ப்பு விலங்குகளாகும். குதிரையின் பயன்பாடு பற்றி இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. மான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உணவுக்காக வேட்டையாடப்பட்டன.
மொகஞ்சாதாரோ |
இந்தியாவின் பிறபகுதிகளோடு பரவலான வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது. மெசபடோமியா, ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற பகுதிகளோடு அயல்நாட்டு வர்த்தகமும் நடைபெற்றது. தங்கம், செம்பு, ஈயம் மற்றும் அரிய வகை கற்கள் இறக்குமதி செய்யப்பட்டன. கோதுமை, பார்லி, பயிறுவகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. பருத்தியாடைகள், மண்பாண்டங்கள், மணிகள், சுடுமண் கலைப்பொருட்கள், தந்த வேலைப்பாடுகள் போன்றவையும் ஏற்றுமதிகளில் அடங்கும். சிந்துப்பகுதிக்கும், சுமேரியாவுக்கும் இடையே வாணிகத்தொடர்பு நிலவியதற்கு போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. மெசபடோமியாவில் சிந்துவெளியைச் சார்ந்த பல முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பண்டமாற்று வாணிகமே பரவலாக நடைபெற்றது. போக்குவரத்துக்கு காளை மற்றும் எருது பூட்டிய வண்டிகள் பயன்படுத்தப்பட்டன என்பதை சிந்துவெளியில் கிடைத்துள்ள முத்திரைகளும் கடுமண் பொம்மைகளும் உறுதிப்படுத்துகின்றன. ஆறுகள் மற்றும் கடல் போக்குவரத்துச்கு படகுகளும் கப்பல்களும் உதவின.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹரப்பா நாகரிகம் (The Harappan Civilization), வரலாறு, ஹரப்பா, இந்திய, செய்யப்பட்டன, பல்வேறு, நாகரிகம், மண்பாண்டங்கள், கண்டெடுக்கப்பட்டுள்ளன, கிடைத்துள்ளன, அரிய, நடைபெற்றது, இடங்களில், தங்கம், முக்கிய, பொருளாதார, போன்றவையும், இந்தியாவின், சுடுமண், இந்தியா