ஹரப்பா நாகரிகம் (The Harappan Civilization)
முக்கிய இடங்கள்
பல்வேறு இடங்களில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவற்றில் குறிப்பிடத்தக்கவை வருமாறு: சிந்துவிலுள்ள கோட் டிஜி, ராஜஸ்தானிலுள்ள காளிபங்கன், பஞ்சாபில் ரூபார், ஹரியானாவில் பினவாலி, குஜராத்திலுள்ள லோத்தல், கர்கோடாடா மற்றும் தோலவிரா. பெரிய நகரங்கள் பெரும்பாலும் நூறு ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டவையாகும். சிந்துவெளி நகரங்களிலேயே மிகப் பெரியது மொகஞ்சாதாரோ. இது சுமார் இருநூறு ஹெக்டேர் பரப்பைக் கொண்டது என மதிப்பிடப்படுகிறது.
தோற்றமும் வளர்ச்சியும்
கடந்த எண்பது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாய்வுகளின் பயனாக ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ஹரப்பா பண்பாட்டின் வளர்ச்சியை அறிந்துகொள்ள பயன்படுகின்றன. இதனை நான்கு முக்கிய நிலைகளாகப் பகுத்து அறியலாம்.
1 . ஹரப்பாவிற்கு முந்தைய நிலை
2 ஹரப்பா பண்பாட்டின் தொடக்க நிலை
3. ஹரப்பா பண்பாட்டின் முதிர்ந்த நிலை
4. ஹரப்பா பண்பாட்டின் இறுதி நிலை
ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய நிலையை கிழக்கு பலுச்சிஸ்தானத்தில் காணலாம். மொகஞ்சாதாரோவிற்கு வடமேற்கில் 150 மைல் தூரத்திலுள்ள மெகர்கார் என்ற இடத்தில் ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய கால மக்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் காணப்படுகின்றன. இக்காலத்தில், மக்கள் தங்களது நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு நிலையான வேளாண் வாழ்வைத் தொடங்கினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹரப்பா நாகரிகம் (The Harappan Civilization), ஹரப்பா, நாகரிகம், வரலாறு, இந்திய, பண்பாட்டின், நிலை, முந்தைய, சிந்து, மக்கள், ஹெக்டேர், பண்பாட்டிற்கு, அகழ்வாய்வுகளின், மொகஞ்சாதாரோ, இந்தியா, அகழ்வாய்வுகள், பயனாக, சிந்துவெளி, முக்கிய