இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு
1935 ஆம் ஆண்டு சட்டப்படி 1937 ஆம் ஆண்டு தேர்தல்கள் நடந்தன. சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது. அவரது அமைச்சரவையில் ஒன்பது அமைச்சர்கள் இருந்தனர். 1937 ஜூலை முதல் 1939 அக்டோபர் வரை இந்த அமைச்சரவை பதவியில் நீடித்தது. இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்திபதைக் கண்டித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகியபோது ராஜகோபாலாச்சாரி அமைச்சரவையும் பதவி விலகியது.
![]() |
ஒ.பி.ராமசாமிரெட்டியார் |
பக்கிங்ஹாம் கர்னாடிக் ஆலை, துறைமுகப் பொறுப்புக் கழகம், டிராம்வே ஆகியவற்றின் தொழிலாளர்கள் என உழைக்கும் வர்க்கத்தினர் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். வடஆர்க்காடு, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பரவியது. ராஜபாளையம், காரைக்குடி, தேவகோட்டை ஆகிய இடங்களில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது. சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண், பெண் வீரர்கள் சேர்ந்து விடுதலைக்காக போராடினர்.
1947 ஆகஸ்டு 15ல் இந்தியா விடுதலையடைந்தபோது, ஒ.பி. ராமசாமி ரெட்டியார் தலைமையிலான சென்னை அரசாங்கம் இந்திய விடுதலைச் சட்டத்தைப் பாராட்டி தீர்மானத்தை இயற்றியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு , இந்திய, வரலாறு, தேசிய, வெள்ளையனே, வெளியேறு, இந்தியா, தமிழ்நாட்டின், இயக்கத்தில், பங்கு, இரண்டாம், உலகப், தொழிலாளர்கள், அமைச்சரவை, பதவி, இயக்கம், ஆண்டு, சென்னை, காங்கிரஸ், ராஜகோபாலாச்சாரி