இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு
இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றியுள்ளது. 1857 ஆம் ஆண்டு பெருங்கலகத்துக்கு முன்பேகூட, பாஞ்சாலங்குறிச்சி கலகம் 1801 ஆம் ஆண்டு நடைபெற்ற மருது சகோதரர்கள் தலைமையேற்ற தென்னிந்திய கலகம், 1806 ம் ஆண்டு வேலூர் சிப்பாய் கலகம் போன்ற பிரிட்டிஷாருக்கு எதிரான இயக்கங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளன. தேசியப் போராட்ட காலத்தில், ஜி. சுப்ரமணிய அய்யர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய பாரதி சி. ராஜகோபாலாச்சாரி, தந்தை பெரியார், கு. காமராஜ் போன்ற தலைவர்களையும் தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் நடைபெற்றதுபோல, தமிழ்நாட்டிலும் தேசிய இயக்கம் எழுச்சியுடன் காணப்பட்டது.
தமிழ்நாட்டில் தேசிய இயக்கத்தின் தொடக்கம்
லட்சுமிநரசு செட்டி |
இந்திய தேசிய காங்கிரசின் நடவடிக்கைகளை சென்னை மகாஜன சங்கம் தீவிரமாக ஆதரித்தது. மேலும், சமூக சீர்திருத்தத்திலும் அது கவனம் செலுத்தியது, 1889 டிசம்பரில், ஜி. சுப்ரமணிய அய்யர் தனது விதவை மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். 1885 ஆம் ஆண்டு முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் முதலாவது தீர்மானத்தையும் இவர் கொண்டு வந்தார். ஆங்கிலத்தில் "தி இந்து", தமிழில் "சுதேசமித்திரன்" போன்ற தேசிய இதழ்களையும் இவர் தொடங்கினார்.
தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வசித்த மக்களை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் சென்னை மாகாண சங்கம் ஒன்று 1892ல் நிறுவப்பட்டது. 1887ல் பக்ருதீன் தயாப்ஜி என்பவரது தலைமையில் இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு சென்னையில் நடைபெற்றது. இத்தகைய மாநாடுகள் பல சென்னை நகரில் பின்னரும் நடைபெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு , இந்திய, தேசிய, வரலாறு, சென்னை, தமிழ்நாட்டின், இயக்கத்தில், சங்கம், ஆண்டு, பங்கு, சுப்ரமணிய, நிறுவப்பட்டது, கலகம், பின்னர், மகாஜன, ஒன்று, முதலாவது, இவர், காங்கிரசின், அய்யர், தமிழ்நாடு, இந்தியா, தமிழ்நாட்டில், பிள்ளை, செட்டி, லட்சுமிநரசு, சுதேசி