டல்ஹவுசி பிரபு
வாரிசு இழக்கும் கொள்கை சட்டத்துக்கு புறம்பானது என்று கூற முடியாவிட்டாலும் அக்கொள்கையை டல்ஹவுசி நடைமுறைப்படுத்தியதே கவலையளிக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பாகும். சதாரா, ஜான்சி, நாக்பூர் இணைப்புகளால் பிரிட்டிஷாருக்கு பெருத்த நன்மை விளைந்தது, எனினும், வாரிசு இழக்கும் கொள்கையை தமது நாடிணைக்கும் கொள்கைக்கு ஒரு கருவியாக பயன்படுத்தியதற்கு டல்ஹவுசி மீது குற்றம் சாட்டப்பட்டது.
1857 ஆம் ஆண்டு பெரும் கலகத்திற்குப்பிறகு வாரிசு இழக்கும் கொள்கை திரும்பப் பெறப்பட்டது.
[1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்தின்போது இக்கொள்கையால் பாதிக்கப்பட்ட ஜான்சி ராணி லட்சுமிபாய் பிரிடிஷாருக்கு எதிராக தீவிரமாகப் போரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.]
அயோத்தி இணைப்பு
பிரிட்டிஷாருக்கும் அயோத்தி அரசுக்கும் இடையிலான உறவு 1765 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அலகாபாத் உடன்படிக்கையிலிருந்தே தொடங்குகிறது. வாரன் ஹேஸ்டிங்ஸ் தொடங்கி பல தலைமை ஆளுநர்கள் தனது நிர்வாகத்தை மேம்படுத்துமாறு அயோத்தி நவாப்பிடம் அவ்வப்போது கேட்டுக் கொண்டனர். ஆனால், அயோத்தியில் நிர்வாகம் மோசமானதாகவே இருந்து வந்தது. அயோத்தி நவாப் பிரிட்டிஷாருக்கு மிகவும் கடமைப்பட்டவராக இருந்தமையால் அயோத்தியை அவர்கள் இணைத்துக் கொள்ளாமல் இருந்தனர். 1851 ஆம் ஆண்டு, லக்னோவில் தூதுவராக இருந்த வில்லியம் சீலீமேன் தனது அறிக்கையில் 'மக்கள் படும் துன்பங்களையும் உணர்வுகளற்ற ஆட்சி சீர்கேடுகளும் அயோத்தியில் நிலவுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அயோத்தியை இணைக்கும் கொள்கைக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். அயோத்தியின் நிலைமையை ஆய்வு செய்த டல்ஹவுசி 1856ல் அதனை இணைத்துக் கொண்டார். நவாப் வாஜித் அலி என்பவருக்கு ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இணைக்கப்பட்ட பகுதி ஒரு முதன்மை ஆணையரின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
டல்ஹவுசி பிரபு , டல்ஹவுசி, வரலாறு, இணைத்துக், இழக்கும், வாரிசு, ஆண்டு, இந்திய, அயோத்தி, ஜான்சி, பிரபு, தனது, கொள்கைக்கு, பிரிட்டிஷாருக்கு, இந்தியா, அயோத்தியை, அயோத்தியில், கொள்கை, நவாப், முதன்மை, கொண்டார், கொள்கையை, பிரிட்டிஷ், நாக்பூர், கட்டுப்பாட்டில், சதாரா, வந்தது, ஆணையரின்