டல்ஹவுசி பிரபு
1849 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது ஆங்கிலேய சீக்கியப்போரின் முடிவில் டல்ஹவுசி பஞ்சாபை இணைத்துக் கொண்டார். பஞ்சாபின் நிர்வாகத்தை அவர் திறமையான வகையில் சீரமைத்தார். அம்மாகாணம் சிறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. அவர்கள் துணை ஆணையர்கள் என அழைக்கப்பட்டனர். இந்த துணை ஆணையர்கள் தமது உதவியாளர்கள் மூலம் மக்களுடன் நெருங்கிய நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். வருவாய் மற்றும் நீதித்துறைகள் ஒன்றிணைக்கப்பட்டன. இதனால் அதிகாரத்துடன் கூடிய பொறுப்பு உறுதி செய்யப்பட்டது. மக்களின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப சட்டங்களும் நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டன. பஞ்சாபின் முழு ஆட்சியதிகாரமும் முதன்மை ஆணையரிடம் வழங்கப்பட்டது. உண்மையில், தலைமை ஆளுநரே பஞ்சாபின் ஆட்சியாளராகத் திகழ்ந்தார். பஞ்சாபின் ஆட்சியில் லாரன்ஸ் சகோதரர்கள் ஆற்றிய சேவைகள் சிறப்பானவையாகும். மூன்றே ஆண்டுகளுக்குள் அந்த மாகாணத்தில் முழு அமைதி ஏற்படுத்தப்பட்டது. உள்நாட்டு அயல்நாட்டு பகைவர்களிடமிருந்தும் அது பாதுகாக்கப்பட்டது. 1859ல் சர்ஜான் லாரன்ஸ் பஞ்சாபின் துணை ஆளுநராகப் பதவியேற்றார்.
இரண்டாம் பர்மியப் போரும் கீழ் பர்மா இணைக்கப்படுதலும்
1852 ஆம் ஆண்டு ரங்கூனில் ஏற்பட்ட வாணிகப் பூசல்களே பிரிட்டிஷாருக்கும் பர்மியருக்கும் இடையே மீண்டும் பகைமை தோன்ற காரணமாகும். இரண்டாம் பர்மியப் போரின் முடிவில் (1852) டல்ஹவுசி 'பெகு' என்ற இடத்தை தலைநகராகக் கொண்ட கீழ் பர்மாவை இணைத்துக் கொண்டார். மேஜர் ஆர்தர் பைரே என்பவர் புதிய மாகாணத்துக்கு ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரது நிர்வாகம் திறமையானதாக விளங்கியது. கீழ் பர்மாவை இணைத்துக் கொண்டதால் பிரிட்டனுக்கும் மிக்க பயனுடையதாக இருந்தது. இப்போரின் போது கைப்பற்றப்பட்ட ரங்கூன் ஆசியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
டல்ஹவுசி பிரபு , வரலாறு, டல்ஹவுசி, பஞ்சாபின், இந்திய, கீழ், துணை, இணைத்துக், பிரபு, லாரன்ஸ், இரண்டாம், பர்மியப், முழு, பர்மாவை, ஆணையர்கள், ஆங்கிலேய, முடிவில், கொண்டார், இந்தியா, சிறு, ஆண்டு