முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » முதற் பதிப்பின் முன்னுரை
வால்காவிலிருந்து கங்கை வரை - முதற் பதிப்பின் முன்னுரை
முதற்
பதிப்பின் முன்னுரை
மனிதர்கள் இன்று எங்கெங்கு பரவியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் ஆரம்பத்தில் தோன்றினார்கள் என்று கூறமுடியாது. இவ்வளவு மிகுதியாக அவர்கள் பரவும் நிலையை அடைவதற்கு, மனித சமுதாயம், மகத்தான போராட்டங்களைக் கடக்க வேண்டியிருந்தது. மனித சமுதாயத்தின் வளர்ச்சியை, சித்தாந்த ரூபமாக எனது “மனித சமுதாயம்” என்ற நூலிலே விவரித்திருக்கிறேன். அந்த விஷயங்களைச் சுலபமாக எல்லோரும் புரிந்துகொள்ளும்படி சரளமான நடையிலே எளிய முறையில் கொடுக்க வேண்டுமென்ற ஆசையால் தூண்டப்பட்டே, இந்தக் கதைகளை எழுதினேன்.
இந்திய வாசகர்களுக்குச் சௌகர்யமாயிருக்கும் பொருட்டு, மனித சமுதாயத்தின் ஒரு பகுதியான ஹிந்து ஐரோப்பிய ஜாதியின் வளர்ச்சியையே, இந்தக் கதைக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டிருக்கிறேன். கிரேக்க - ஆப்ரிக்க - சுரியானி ஜாதிகள் வளர்ச்சி, ஹிந்து-ஐரோப்பிய ஜாதியின் வளர்ச்சியைவிடப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே ஏற்பட்டுவிட்டதென்றாலும், அவைகளை ஆதாரமாகக் கொண்டால், குறைந்தபட்சம் இந்திய வாசகர்களைப் பொறுத்தவரை எனது எளிய உருக்கொடுக்கும் முயற்சி தோல்வியை அடையும்.
நான், ஒவ்வொரு காலத்தின் சமுதாய வளர்ச்சியையும் மிகக் கவனமாகப் பரிசீலனை செய்தே விவரித்திருக்கிறேன். ஆயினும், இந்த முதல் முயற்சியில், குறை ஏற்படுவது இயற்கையே. அறிஞர்கள் குறைபாடுகளை எடுத்துக் காட்டினால், மீண்டும் ஆராய்ந்து திருத்திக்கொள்ள முயல்வேன்.
ராகுல
சாங்கிருத்தியாயன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதற் பதிப்பின் முன்னுரை - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்