ஆங்கில வார்த்தை (English Word)
தமிழ் வார்த்தை (Tamil Word)
Fraulein
n. (செர்.) மணமாகா இளம்பெண், குமாரி.
Fraunhofer lines
n. pl. கதிரவன் ஔதநிறப் பட்டையிற் காணப்படும் கருவரிகள்.
Fraxinella
n. தோட்ட நறுமணச் செடிவகைகள்.
Fray
-1 n. சண்டை, அமளி, சச்சரவு, (வினை) அச்சுறுத்து.
Frazil
n. ஆறுகளின் அடித்தலத்திலுள்ள பனிக்கட்டி.
Frazzle
n. வழங்கித் தேய்ந்துபோன நிலை, களைப்புற்ற நிலை, (நிலை) தேய், மாயச்செய்.
Freak
n. இயற்கைப் பிறழ்வு, கண்ணராவி, எண்ணாச் சிறு செயல், தடுமாற்றம், விளையாட்டுத்தனத்தின் விளைவு, குறும்புச் செயல், மனம்போன போக்கு, தான்தோன்றித் தனம்.
Freaked
a. உருக்குலைக்கும் புள்ளிகளையுடைய, கீற்று வரிகளையுடைய.
Freakish
a. மனம்போன போக்குடைய, திடுமென மனமாறும் இயல்புடைய, சபலத்தன்மை வாய்ந்த.
Freckle
n. தோலில் இலேசான தவிட்டுநிறமுள்ள புள்ளி, பொட்டு, (வினை) தோலில் இலேசான தவிட்டுநிறமுள்ள புள்ளிகளாற் கறைப்படுத்து, பொட்டுக்களையுடையதாகு.
Freckles
n. pl. உடலில் ஆங்காங்கே வெயில் வெப்பினால் ஏற்படும் கன்றிய பொருட்கள்.
Free
a. தன்னுரிமையுடைய, அடிமைப்படாத, புறச்சார்பற்ற, அயலாட்சிக்கு உட்படாத, வல்லாட்சிமுறைக்கு உட்படாத, மக்களுரிமையுடைய, முழுநிறை குடியுரிமையுடைய, தன் உரிமைக் கழக உறுப்பினரான, கட்டற்ற, கட்டுப்பாட்டு வரம்புகளற்ற, சமுதாயத்தில் தாராளமாகப் பழகுகிற, சிந்தனையாளர் வகையில் சமயச்சார்பற்ற, சிந்தனை வகையில் திறந்த மனப்பான்மையுடைய, தொழிலாளர் வகையில் தொழிற்குழுத் தொடர்பற்ற, விடுதலை பெற்ற, மொழிநடை வகையில் ஒழுங்குக்கோட்பாட்டு வரம்புகளுக்குக் கட்டுப்படாத, மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச்சொல் பெயர்க்கப்படாத, சண்டை முதலிய நிகழ்ச்சிகள் வகையில் எல்லாரும் கலந்து கொள்ளத்தக்க, வரியற்ற, தனி விலக்குரிமையுடைய, சக்கர வகையில் முட்டின்றிச் சுழல்கிற, தன்னியக்கமுடைய, இயந்திரக்கருவி வகையில் தனி இயக்கமுடைய, முற்றிலும் இணைக்கப்பெறாத, வேதியியல் வகையில் சேர்மங்களில் முற்றிலும் இணைவுறாத, ஆற்றல் வகையில் பயனில் ஈடுபடுத்தப்படாத, பயன்படுத்தும்படி கிட்டக்கூடிய, தன்னியல்பான, தனி விருப்பார்ந்த, புறத்தூண்டுதலற்ற, கையெழுத்து வகையில் முயற்சியற்ற, தனி முனைப்பற்ற, தூண்டப்படாத, வலுக்கட்டயாத்துக்கு உட்படாத, வரையாது கொடுக்கிற, கட்டற்ற வளமுடைய, தாராமான, ஈட்டப்படாத, விலையற்ற, இலவசமான, மனம் விட்டுத் தெரிவிக்கிற, ஔதவுமறைவற்ற, அஞ்சாது கூறுகிற, ஆசாரக்கட்டற்ற, துடுக்கான, வரம்புமீறிய, அடக்கமற்ற, மட்டுமதிப்பற்ற, கொச்சையான, (வினை) தளையறு, கட்டுநீக்கு, கட்டுப்பாடகற்று,. தடைவிலக்கு, விடுவி, விடுதலையளி, அச்சம், முதலிய வற்றிலிருந்து விலக்கு, சிக்கல் நிலை அகற்று, சிறைவிடு செய், வரம்புக் கட்டுப்பாடகற்றி வௌதச்செல்லவிடு, தொடர்பறு, இணைப்பறு.
Free-agency
n. தன்னுரிமையோடு இயங்கும் நிலை.
Free-and-easy
n. பண்புடையோர் கட்டுப்பாடற்றுப் புகை பிடிப்பதற்கும் பாடுவதற்கும் உரிய பொது விடுதி, (பெ.) தடைகளற்ற செயலுரிமையுடைய.
Free-board
n. கப்பல் தளத்திற்கும் நீர்மட்டத்திற்கும் இடையேயுள்ள தூரம், வேலிக்கு அபப்லுள்ள துண்டு நிலம், வேலிக்கு அப்பாலுள்ள துண்டு நிலவுரிமை.
Freebooter
n. கடற் கொள்ளைக்காரர், கடலில் வழிப்பறி செய்பவர்.
Freeborn
a. சுதந்திரமாகப் பிறந்த, அடிமையாகப் பிறக்காத, குடியுரிமையையும் தனித்தற்சார்பு உரிமையையும் இயல்பான மரபுரிமையாகப் பெற்ற.
Freedman
n. விடுதலையளிக்கப்பட்ட அடிமை.
Freedom
n. தன்னுரிமை, சுதந்திரம், தன்னாட்சியுரிமை, குடியாட்சியுரிமை, குடியாண்மை, திணையாட்சியுரிமை, தனிமுறை ஆட்சியுரிமை, உறுப்பினர் உரிமை, வழக்காற்றுரிமை, பயனுரிமை, தனி விலக்குரிமை, தற்சார்பு, புறச்சார்பின்மை, தடையற்ற செயலுரிமை, ஊழ்ச்சார்பு, புறச்சார்பின்மை, தடையற்ற செயலுரிமை, ஊழ்ச்சார்பின்மை, கட்டாய நிலையின்மை, தடையற்ற பழக்க உரிமை, அஞ்சாமை, பேச்சில் ஔதவு மறைவு தவிர்ப்பு, சிந்தனைத துணிவு, தடையற்ற இயக்கம், சிக்கற்ற செயலிழைவுத் தன்மை, தவிர்ப்புநிலை, சார்பின்மை, தொடர்பின்மை, சிக்கலின்மை, இணைவின்மை, சார்பறவு, தொடர்பறவு.
Free-hand
a. கருவியின்றி இயல்பாகக் கையினால் வரையப்பட்ட.