சேது - காட்சி 61 - இரவு - INT./ அபிதா வீடு
மிட் ஷாட் - பாண்டிமடம் சென்ற அபிதாவும் அம்பியும் வீட்டுக்கு வருகிறார்கள். மிட் ஷாட் - அண்ணன், அண்ணி மற்றும் குருக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். குளோஸ் ஷாட் - அபிதாவும், அம்பியும் அவர்களைப் பார்க்கிறார்கள். மிட் ஷாட் - சேதுவின் அண்ணன், அண்ணி குருக்கள் இருக்கும் இடத்திற்கு அம்பியும், அபிதாவும் வருகின்றனர்.
குளோஸ் ஷாட் - அண்ணன்: பார்த்திட்டியா...?
குளோஸ் ஷாட் - அபிதா சோகமாக தலைகுனிகிறாள்.
குளோஸ் ஷாட் - அண்ணன்: நாங்களும்தான் ஆசைப்பட்டோம். உன்னை மாதிரி ஒரு பொண்ணு எங்க வீட்டுக்கு...
குளோஸ் ஷாட் - அபிதா நிமிர்ந்து பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - அண்ணன்: நடக்காதும்மா...
மிட் ஷாட் - அண்ணன்: கொஞ்ச நாளாத்தான் நீ அவனை நினைச்சுக்கிட்டு இருக்கே... ஆனா இவ்வளவு நாறும் உன்னைத் தவிர வேறே யாரையாவது நினைச்சுப் பார்த்திருப்பாரா இவரு...?
அம்பியைக் காட்டிச் சொல்கிறார் அண்ணன்.
மிட் ஷாட் - அவன் மட்டும் நல்லா இருந்திருந்தான்னா நானே உங்கப்பாகிட்டே பேசி நடத்தி வச்சிருப்பேன்...
குளோஸ் ஷாட் - அண்ணன்: இன்னும் அவனை மனசுக்குற்றே வச்சுக்கிட்டு நடக்காத ஒண்ணுக்காக காத்திருந்து... வேண்டாம்மா
குளோஸ் ஷாட் - அபிதா அழுகிறாள்.
குளோஸ் ஷாட் - அண்ணன்: நினைச்சது எல்லாம் நடக்கனும்னுதான் ஆசைப்படறோம். நடக்காதுன்னு தெரிஞ்சப்புறம் நாமதானே மனசை மாத்திக்கணும்?
குளோஸ் ஷாட் - அபிதா அழுதபடியே அவரைப் பார்க்கிறாள்.
குளோஸ் ஷாட் - அண்ணன்: அவனை வளர்த்து ஆளாக்கின எனக்கே நம்பிக்கை போயிடுச்சு... உன்னோட முடிவுலேதான் எங்க நிம்மதியே அடங்கி இருக்கும்மா.
குளோஸ் ஷாட் - அபிதா அழுகிறாள்.
குளோஸ் ஷாட் - அண்ணன்:இதுக்கு மேலே என்ன சொல்றதுன்னு தெரியலை... நீ விவரம் தெரிஞ்ச பொண்ணு... உன்னைக் கையெடுத்துக் கும்பிடுறேன்...
சேதுவின் அண்ணன் கையெடுத்துக் கும்பிட...
குளோஸ் ஷாட் - 'அப்படிச் செய்யாதீர்கள்' என்பது போல தலையாட்டுகிறாள் அபிதா.
மிட் ஷாட் - அண்ணன்: பெத்த தகப்பனை வேற யாராவது நாலு பேர் முன்னாடி இப்படி உட்கார வச்சுறாதம்மா...
குருக்கள் குலுங்கிக் குலுங்கி அழுகிறார்.
குளோஸ் ஷாட் - குருக்கள் அழுகிறார்.
குளோஸ் ஷாட் - அபிதா அழுகிறாள்.
குளோஸ் ஷாட் - சரிந்து உட்கார்ந்து மேலும் அழுகிறாள் அபிதா.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 59 | 60 | 61 | 62 | 63 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், அண்ணன், அழுகிறாள், குருக்கள், அபிதாவும், அம்பியும்