சேது - காட்சி 60 - பகல் - INT./ சேது வீடு
மிட் ஷாட் - சேதுவின் அண்ணன் டைப் அடித்துக் கொண்டிருக்க, அண்ணி வருகிறாள்.
அண்ணி: என்னங்க...அந்தப் பொண்ணோட அப்பா வந்திருக்காரு
அண்ணன்: எந்தப் பொண்ணு...?
மிட் ஷாட் - இருவரும் ஹாலுக்கு வர, குருக்கள் நிற்கிறார்.
குருக்கள்: சித்த சேர்ந்து நிக்குறேளா...?
டாப் ஆங்கிள் / மிட் ஷாட் - குருக்கள் இருவரது காலிலும் விழுகிறார். பதறிய சேதுவின் அண்ணன் அவரைத் தூக்குகிறார்.
குளோஸ் ஷாட் - அண்ணன்: என்ன சாமி இது...?
குளோஸ் ஷாட் - இருவரையும் குருக்கள் வணங்குகிறார்.
லாங் ஷாட் - குருக்கள் வணங்குகிறார்.
குருக்கள்: உத்தமமான அந்தப் புள்ளையை வளர்த்து ஆளாக்குன உங்களுக்கு இது தகும்.
குளோஸ் ஷாட் - அண்ணன்: உட்காருங்க.
மிட் ஷாட் - மூவரும் உட்காருகிறார்கள்.
குருக்கள்: நேக்கு ரெண்டு பொண் குழந்தைகள். மூத்தவளை நாள், நட்சத்திரம், குலம், கோத்திரம் பார்த்துத்தான் கன்னிகாதானம் பண்ணி வச்சேன். ஆனா போன எடத்திலே என் குழந்தை நன்னா வாழலை.
குருக்கள் அழுகிறார்.
குளோஸ் ஷாட் - சேதுவின் அண்ணன் பார்க்கிறார்.
குளோஸ் ஷாட் - குருக்கள்: வரதட்சிணை, சீர் செனத்தின்னு எந்தவித அனுபவமும் கண்டு...
குளோஸ் ஷாட் - சேதுவின் அண்ணன் தலையாட்டுகிறார்.
குளோஸ் ஷாட் -குருக்கள்: ஆனா, இன்னைக்கு என் கொழந்தை அவ ஆத்துக்காரரோட அமோகமா வாழ்ந்துண்டு இருக்கா... அது மாத்திரமல்ல... நானும், என் குடும்பமும் இன்னைக்கும் உசிரோட நடமாடுறதுக்கும் காரணம் உங்க தம்பிதான்.
குளோஸ் ஷாட் - சேதுவின் அண்ணன் கலக்கமாகப் பார்க்கிறார்.
குளோஸ் ஷாட் - குருக்கள்: அய்யா இன்னும் ஒரு பிச்சை...
குளோஸ் ஷாட் - அண்ணன் நிமிர்ந்து பார்க்கிறார்.
குளோஸ் ஷாட் - குருக்கள்: என் சின்னப் பொண்ணு அபிதாவும், எங்க அம்பியைக் கல்யாணம் பண்ணின்டு அவா ஷேமமா வாழணுங்கிறது என்னோட ஆசை மாத்திரமல்ல, அரு ஒரு சத்தியம்.
குளோஸ் ஷாட் - அண்ணன்.
குளோஸ் ஷாட் – குருக்கள் : நீங்கபெரியவர்..... தர்மம் தெரிஞ்சவா.
குளோஸ் ஷாட் - அண்ணன். குளோஸ் ஷாட் - அண்ணி
அண்ணன்: நான் என்ன செய்யணும்...?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 58 | 59 | 60 | 61 | 62 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், குருக்கள், அண்ணன், சேதுவின், பார்க்கிறார்