முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வெந்துளி முதல் - வெருளிப்பிணை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வெந்துளி முதல் - வெருளிப்பிணை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வெந்துளி | துயரக்கண்ணீர் . |
| வெந்தை | நீராவியிலேயே புழுங்கியது ; பிட்டு . |
| வெந்தையம் | காண்க : வெந்தயம் . |
| வெந்நிடுதல் | புறங்காட்டுதல் . |
| வெந்நீர் | சுடுநீர் . |
| வெப்பசாரம் | மனத்துயர் ; சினம் ; பொறாமை . |
| வெப்பம் | வெம்மை ; கடுமை ; சுரநோய் ; பொறாமை ; ஆசை ; சினம் ; துயர் ; ஒரு நரகம் . |
| வெப்பர் | காண்க : வெப்பம் ; சூடான உணவு . |
| வெப்பித்தல் | சூடாக்குதல் ; மனக்கொதிப்பு உண்டாக்குதல் . |
| வெப்பிராளம் | மனக்குழப்பம் . |
| வெப்பு | வெம்மை ; சுரநோய் ; சுரதேவதை ; சுரநட்சத்திரம் ; தாபம் ; சினம் ; பொறாமை ; துயர் ; ஆசை ; கொடுமை ; தொழுநோய் . |
| வெப்புக்கட்டி | நாட்பட்ட சுரத்தினால் வயிற்றில் உண்டாகும் கட்டிவகை . |
| வெப்புநோய் | சுரத்தால் உண்டாகும் சூடு ; தொழுநோய் . |
| வெப்புள் | வெம்மை . |
| வெம்பகல் | நடுப்பகல் . |
| வெம்பல் | மிகு வெப்பம் ; சினம் ; வாடலானது ; பிஞ்சிற் பழுத்துக்கெட்ட காய் . |
| வெம்பளிக்கை | இறுமாப்பு . |
| வெம்பறவை | எண்காற்புள் . |
| வெம்பா | மூடுபனி . |
| வெம்பிளிக்கை | இறுமாப்பு ; பொருட்படுத்தாமை . |
| வெம்புதல் | மிகச் சூடாதல் ; வாடுதல் ; முதிராது கனிதல் ; சினத்தல் ; மனம்புழுங்குதல் ; விரும்புதல் ; ஒலித்தல் . |
| வெம்மை | வெப்பம் , கடுமை ; சினம் ; விருப்பம் ; வீரம் . |
| வெய்து | வெப்பமுடையது ; வெப்பம் ; துயரம் ; வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம் . |
| வெய்துயிர்த்தல் | வெப்பமாக மூச்சுவிடுதல் ; துன்பத்தால் மூச்சுவிடுதல் . |
| வெய்துயிர்ப்பு | வெப்பமூச்சு ; பெருமூச்சு . |
| வெய்துரை | கடுஞ்சொல் . |
| வெய்துறுதல் | துன்புறுதல் ; மனங்கலங்குதல் ; சினத்தல் . |
| வெய்தெனல் | விரைவுக்குறிப்பு ; வெம்மைக்குறிப்பு ; கொடுமைக்குறிப்பு . |
| வெய்ய | வெப்பமான ; கொடிய ; விரும்புதற்குரிய . |
| வெய்யது | சூடானது ; கொடியது ; தாங்கமுடியாதது . |
| வெய்யவன் | கொடியவன் ; சூரியன் ; விருப்பமுள்ளவன ; தீக் கடவுள் . |
| வெய்யன் | கொடியவன் ; சூரியன் ; விருப்பமுள்ளவன் ; தீக் கடவுள் . |
| வெய்யில் | காண்க : வெயில் . |
| வெய்யோன் | காண்க : வெய்யவன் ; மூக்கின் வலப்பக்கத் துளை ; மிருகசீரிடநாள் . |
| வெயர் | வேர்வைநீர் . |
| வெயர்த்தல் | வேர்வை நீருண்டாதல் ; சினத்தல் . |
| வெயர்ப்பு | வேர்வைநீர் ; வேர்வையுண்டாகை ; சினம் . |
| வெயர்வை | காண்க : வெயர் . |
| வெயில் | சூரிய வெளிச்சம் ; சூரிய வெப்பம் ; கதிரவன் ; ஒளி . |
| வெயில்நீக்கி | குடை . |
| வெயிலடித்தல் | சூரியன் ஒளிவீசல் ; சூரியக்கதிர் வெப்பமாயிருக்கை . |
| வெயிலுறைத்தல் | சூரியஒளி வெப்பமாயிருக்கை . |
| வெயிலெறித்தல் | காண்க : வெயிலடித்தல் . |
| வெயிலோன் | சூரியன் . |
| வெயிற்குளித்தல் | வெயிலிற் காய்தல் ; குளிர் காயச் சூரியவெப்பத்தி லிருத்தல் . |
| வெயின்மறை | வெயிலை மறைக்கும் கருவி . |
| வெரிந் | முதுகு . |
| வெரு | அச்சம் . |
| வெருக்குவிடை | காட்டுப்பூனையின் ஆண் . |
| வெருக்கொள்ளுதல் | அஞ்சுதல் . |
| வெருக்கோள் | அச்சங்கொள்ளுகை . |
| வெருகடிப்பிரமாணம் | மூன்றுவிரலாற் கிள்ளும் அளவு . |
| வெருகம் | வாலின் கீழிடம் . |
| வெருகு | ஆண்பூனை ; காட்டுப்பூனை ; மரநாய் ; செடிவகை ; வெண்கிடை ; மெருகு . |
| வெருட்சி | அச்சம் ; மருட்சி ; மருளுகை . |
| வெருட்டி | வெருட்டுவது . |
| வெருட்டுதல் | அச்சுறுத்துதல் ; திகைக்கச்செய்தல் ; விலங்கு முதலியவற்றை ஓட்டுதல் ; விரைவாகச் செல்லத் தூண்டுதல் . |
| வெருப்பறை | போர்முரசு . |
| வெருவந்தம் | அச்சம் . |
| வெருவரல் | அச்சந்தருதல் ; அஞ்சுதல் . |
| வெருவருதல் | அச்சந்தருதல் ; அஞ்சுதல் . |
| வெருவருநிலை | பகைவர் அம்பு தன் மார்பைப் பிளப்பவும் பூமியில் விழாமல் நின்ற வீரனது நிலையைக் கூறும் புறத்துறை . |
| வெருவலர் | பகைவர் . |
| வெருவாமை | அஞ்சாமை . |
| வெருவு | அச்சம் . |
| வெருவுதல் | அஞ்சுதல் . |
| வெருவெருத்தல் | அஞ்சுதல் . |
| வெருள் | அச்சம் ; மனக்கலக்கம் ; அஞ்சத்தக்கது . |
| வெருளார்த்தல் | திகைத்தல் ; மயங்குதல் . |
| வெருளி | செல்வச்செருக்கு ; வெருட்சி ; வெருளச்செய்யும் புல்லுரு முதலியன . |
| வெருளிப்பிணை | பெண்மான்வகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 997 | 998 | 999 | 1000 | 1001 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெந்துளி முதல் - வெருளிப்பிணை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வெப்பம், காண்க, சினம், அச்சம், அஞ்சுதல், வெம்மை, சூரியன், பொறாமை, சினத்தல், அச்சந்தருதல், வேர்வைநீர், வெயர், வெருட்சி, சூரிய, வெப்பமாயிருக்கை, பகைவர், வெயிலடித்தல், வெயில், கொடியவன், தொழுநோய், துயர், சுரநோய், கடுமை, உண்டாகும், இறுமாப்பு, தீக், வெய்யவன், மூச்சுவிடுதல், கடவுள்

