முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வெட்டாட்டம் முதல் - வெடியுப்பு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வெட்டாட்டம் முதல் - வெடியுப்பு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வெட்டாட்டம் | தாய ஆட்டவகை . |
| வெட்டாந்தரை | காய்ந்திறுகிய நிலம் . |
| வெட்டி | மண்வெட்டி ; புல்வகை ; வழி ; பயனின்மை ; ஊர்ப்பணியாளன் ; பிணஞ்சுடுவான் . |
| வெட்டிச்சாய்த்தல் | மரம் முதலியன முறித்து வீழ்த்துதல் ; கொல்லுதல் ; பெருங்காரியங்களைச் செய்தல் ; தாராளமாகக் கொடுத்தல் ; உதவுதல் . |
| வெட்டிச்சோறு | தண்டச்சோறு ; பழைய வரி வகை . |
| வெட்டிது | கடுமையானது . |
| வெட்டிநிலம் | தரிசுநிலம் . |
| வெட்டிப்பயல் | பயனற்றவன் . |
| வெட்டிப்பேச்சு | வீண்பேச்சு . |
| வெட்டிப்பேசுதல் | கண்டித்துப் பேசுதல் ; எதிர்த்துப் பேசுதல் ; கடுமையாகப் பேசுதல் . |
| வெட்டிமை | கடுமை ; சினம் ; வெட்டியான் தொழில் ; கடுஞ்சொல் . |
| வெட்டியான் | பிணஞ்சுடுவோன் ; ஊர் ஊழியக்காரன் ; பூச்சிவகை . |
| வெட்டிரும்பு | இரும்பை வெட்டும் உளி . |
| வெட்டிவேர் | இலாமிச்ச வேர் ; புல்வகை . |
| வெட்டிவேலை | பயனற்ற வேலை . |
| வெட்டு | வெட்டுதலால் உண்டாகும் புண் முதலியன ; எழுத்து முதலியன பொறிக்கை ; மயிர்வெட்டுகை ; தையல்துணி வெட்டுகை ; துண்டிப்பு ; பகட்டு ; வஞ்சனை . |
| வெட்டுக்காயம் | வெட்டினால் உண்டாம் புண் . |
| வெட்டுக்கிளி | பூச்சிவகை . |
| வெட்டுக்குத்து | கத்தி முதலிய கூரான ஆயுதங்களைக் கொண்டு செய்யுஞ் சண்டை . |
| வெட்டுக்குளம்பு | கால்நடையின் பிளந்துள்ள பாதம் . |
| வெட்டுச்சட்டை | பெண்கள் அணியும் ஓர் அங்கிவகை . |
| வெட்டுண்ணுதல் | முறிபடுதல் . |
| வெட்டுணி | கீழ்ப்படியாத பிள்ளை ; முரடன் . |
| வெட்டுத்தட்டு | பறையின் வாய்வார் . |
| வெட்டுத்தாக்கு | மண்ணெடுத்த குழி . |
| வெட்டுதல் | வாள் முதலியவற்றால் பிளவுபட எறிதல் ; எழுத்து முதலியன பொறித்தல் ; தானிய அளவில் தலை வழித்தல் ; தோண்டுதல் ; தலைமயிரைக் கழித்தல் ; துணி முதலியன துண்டித்தல் ; ஆட்டக்காயைப் பயனற்றதாக நீக்குதல் ; அழித்தல் ; கடிந்து பேசுதல் ; கடுமையாதல் ; பளிச்சென மின்னுதல் ; உண்டியல் கிழித்தல் . |
| வெட்டுப்படுதல் | முறிபடுதல் . |
| வெட்டுப்படை | வாட்படை . |
| வெட்டுப்பழி | தீராப்பகை . |
| வெட்டுமருந்து | வெட்டுக்காயங்களுக்குப் பயன்படுத்தும் மருந்து . |
| வெட்டுரைப்பணம் | கள்ள நாணயம் . |
| வெட்டுவாய் | அறுபட்ட புண்வாய் ; பொருத்து . |
| வெட்டுவாள் | வெட்டுக்கத்திவகை . |
| வெட்டெனல் | கடுமைக்குறிப்பு ; மௌனமாய் இசைதற்குறிப்பு . |
| வெட்டெனவு | கடுமை ; வன்மை ; வன்மையானது . |
| வெட்டை | வெப்பம் ; சூடு ; நிலக்கொதி ; காமஇச்சை ; நோய்வகை ; வெறுமை ; பயனின்மை ; கேடு ; கடினத்தன்மை ; வெளி காய்ந்து இறுகிய நிலம் . |
| வெட்பாடம் | வாய்ப்பாடம் . |
| வெட்பாலை | ஒரு மரவகை . |
| வெட்புகார் | மழைநீரற்ற மேகம் . |
| வெட்புலம் | வெற்றிடம் . |
| வெடி | வேட்டு ; ஓசை ; இடி ; துப்பாக்கி ; வெடியுப்பு ; வாணம் ; சிற்றேலம் ; பிளவு ; பகை : கேடு ; அச்சம் ; நிமிர்ந்தெழுகை ; தாவுகை ; நறும்புகை : நறுமணம் ; தீநாற்றம் ; கள் ; கவறாட்டத்து வழங்கும் ஒரு குழூஉக்குறி ; பொய் ; விடிவெள்ளி ; வெளி . |
| வெடிகுரல் | இயல்பு மாறிய குரல் ; இசைக்கு மாறுபட்ட ஓசை . |
| வெடிகொள்ளுதல் | மேலேழுதல் ; வெடித்தல் ; துப்பாக்கியாற் சுடப்படுதல் . |
| வெடிச்சிரிப்பு | பெருஞ்சிரிப்பு . |
| வெடித்தகுரல் | இயல்பு மாறிய குரல் ; உரத்தகுரல் . |
| வெடித்தசொல் | வெடுவெடுப்பான பேச்சு . |
| வெடித்தல் | பிளவுபடுதல் ; ஓசையெழப் பிளத்தல் ; வெளிக்கிளம்புதல் ; வெடியோசை உண்டாதல் ; மலர்தல் ; விறைத்து மேலே கிளம்புதல் ; பொறாமையால் துடித்தல் ; எறிதல் . |
| வெடிநாற்றம் | தீநாற்றம் ; வெடிமருந்து சுட்டமணம் . |
| வெடிப்பு | ஓசையோடு வெடித்து எழுகை ; பிளப்பு ; அழிவு ; தீநாற்றம் ; வெறுப்பு ; குற்றமான சொல் ; கண்டிப்பு ; சிறப்பு . |
| வெடிபடுதல் | அஞ்சுதல் ; பேரோசையுண்டாதல் ; சிதறுதல் . |
| வெடிபோடுதல் | குண்டுபோடுதல் . |
| வெடிமருந்து | வெடிப்பதாற் குண்டு முதலியவற்றை வெளிக்கிளப்பும் வாணமருந்து . |
| வெடியல் | விடியற்காலம் ; ஓசை . |
| வெடியுப்பு | வெடிமருந்துக்குதவும் உப்புவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 994 | 995 | 996 | 997 | 998 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெட்டாட்டம் முதல் - வெடியுப்பு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், முதலியன, பேசுதல், தீநாற்றம், வெடியுப்பு, வெளி, கேடு, இயல்பு, மாறிய, குரல், வெடிமருந்து, எறிதல், வெடித்தல், எழுத்து, பயனின்மை, புல்வகை, நிலம், கடுமை, வெட்டியான், சொல், புண், பூச்சிவகை, முறிபடுதல்

