தமிழ் - தமிழ் அகரமுதலி - வாலுளுவை முதல் - வாளாங்கு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வாலுளுவை | ஒரு கொடிவகை . |
| வாலுறை | அடுப்பு . |
| வாலூகம் | நஞ்சு . |
| வாலேபம் | கழுதை . |
| வாலேயம் | கழுதை . |
| வாலை | இளம்பருவத்திலுள்ள பூப்படையாத பெண் ; சத்திபேதங்களுள் ஒன்று ; செய்நீர் வடிக்கும் பாண்டம் ; தூய்மை ; பாதரசம் ; சித்திராநதி . |
| வாலைரசம் | காண்க : இரசகருப்பூரம் . |
| வாவயம் | காண்க : துளச . |
| வாவரசி | காண்க : வாழ்வரசி , இல்லாள் . |
| வாவல் | தாண்டுகை ; கூத்து ; வௌவால் ; கடல் ; மீன் ; வயா . |
| வாவி | நீர்நிலை ; நடைக்கிணறு ; ஆற்றோடை . |
| வாவிப்புள் | அன்னம் . |
| வாவு | காண்க : உவா ; விடுமுறைநாள் . |
| வாவுதல் | தாண்டுதல் . |
| வாழ் | முறைமை . |
| வாழ்க்கை | வாழ்தல் ; வாழ்நாள் ; இல்வாழ்க்கை ; மனைவி ; நல்வாழ்வுநிலை ; செல்வநிலை ; ஊர் ; மருதநிலத்தூர் . |
| வாழ்க்கைத்துணை | மனைவி . |
| வாழ்க்கைப்படுத்துதல் | திருமணஞ்செய்து கொடுத்தல் . |
| வாழ்க்கைப்படுதல் | திருமணமாதல் . |
| வாழ்கிறவள் | காண்க : வாழ்வரசி . |
| வாழ்ச்சி | வாழ்க்கை ; செல்வநிலை ; வெற்றியாகிய செல்வநிலை . |
| வாழ்ச்சிப்படுத்துதல் | வாழவைத்தல் . |
| வாழ்த்தணி | இன்னார்க்கு இன்ன நன்மை இயைக என்று முன்னியது விரிக்கும் அணிவகை . |
| வாழ்த்து | துதி ; ஆசி ; கடவுளை வாழ்த்துகை ; மங்களம் பாடுகை ; அணிவகை . |
| வாழ்த்துதல் | நல்லுரை கூறுதல் ; துதித்தல் ; மங்களம்பாடுதல் . |
| வாழ்த்தெடுத்தல் | துதித்தல் . |
| வாழ்தல் | இருத்தல் ; செழித்திருத்தல் ; மகிழ்தல் ; சுமங்கலியாக இருத்தல் ; விதிப்படி ஒழுகுதல் . |
| வாழ்நர் | வாழ்வோர் . |
| வாழ்நாள் | ஆயுட்காலம் . |
| வாழ்முதல் | வாழ்வுக்கு முதற்காரணனான கடவுள் . |
| வாழ்வரசி | கணவனோடு வாழ்பவள் , சுமங்கலி . |
| வாழ்வித்தல் | வாழவைத்தல் ; நீதிமன்றமூலம் சொத்தை உரியவனுக்கு ஒப்படைத்தல் . |
| வாழ்விழத்தல் | கைம்பெண்ணாதல் ; தாரமிழத்தல் . |
| வாழ்விழந்தவள் | கைம்பெண் . |
| வாழ்வினை | கணவன் தன்மை . |
| வாழ்வு | நல்வாழ்க்கை ; பிழைப்பு ; வாழ்க்கைக்காக விடப்பெற்ற இறையிலிநிலம் ; வசிக்கை ; உறைவிடம் ; ஊர் ; உயர்ந்த பதவி ; செல்வம் ; முறைமை . |
| வாழ்வுதாழ்வு | ஒருவனது வாழ்க்கையில் ஏற்படும் செல்வநிலையும் வறுமைநிலையும் . |
| வாழகம் | வெள்ளைக்குங்கிலியம் . |
| வாழாக்கேடி | காண்க : வாழாவெட்டி . |
| வாழாதவள் | காண்க : வாழாவெட்டி ; கைம்பெண் . |
| வாழாவெட்டி | கணவனோடு சேர்ந்துவாழப் பெறாதவள் . |
| வாழி | வாழ்க என்னும் பொருளில் வரும் வியங்கோள் சொல் ; ஓர் அசைச்சொல் . |
| வாழிப்பு | மதர்ப்பு . |
| வாழிய | காண்க : வாழி ; முன்னிலையசைச்சொல் . |
| வாழுமோர் | வாழ்பவர் . |
| வாழை | ஒரு மரவகை . |
| வாழைக்கன்று | இளவாழை . |
| வாழைத்தண்டு | குலையீன்ற வாழையின் உட்புறத் தண்டு . |
| வாழைப்பூ | வாழையின் பூ ; மீன் . |
| வாழைமலடி | ஒரே பிள்ளையைப் பெற்றவள் . |
| வாழைமுகை | வாழையின் பூ . |
| வாழையடிவாழை | இடையறாது தொடர்ந்து வருஞ் சந்தானம் . |
| வாள் | ஒளி ; கத்தி ; கத்தரிகை ; கூர்மை ; ஈர்வாள் ; விளக்கம் ; புகழ் ; கொல்லுகை ; கலப்பை ; உழுபடையின் கொழு ; கயிறு ; நீர் ; கச்சு . |
| வாள்கைக்கொண்டாள் | கொற்றவை . |
| வாள்வட்டணை | வாட்போரில் இடசாரி வலசாரியாகச் சுற்றுகை . |
| வாள்வரி | புலி . |
| வாள்வரிக்கொடுங்காய் | வெள்ளரிக்காய் . |
| வாள்வலம் | வாள்வீரம் . |
| வாள்வாளெனல் | அழுது கதறுதற்குறிப்பு . |
| வாள்வீச்சு | வாளைச் சுழற்றுகை . |
| வாள்வீரம் | வாட்போர்த்திறமை ; வில்வமரம் . |
| வாளகம் | வெட்டிவேர் . |
| வாளகிரி | சக்கரவாளமலை . |
| வாளம் | வாள் ; காண்க : யாளி ; வட்டம் ; சக்கரவாளமலை ; சக்கரவாகப்புள் ; காண்க : நேர்வாளம் . |
| வாளமலை | காண்க : வாள்வீச்சு . |
| வாளரம் | ஈர்வாளைக் கூர்மையாக்க உதவும் அரம் ; மரமறுக்கும் வாள் . |
| வாளரி | அரிமா . |
| வாளவரை | கொடிவகை . |
| வாளா | மோனமாய் ; அலட்சியமாய் ; பயனின்றி . |
| வாளாங்கு | மோனமாய் ; அலட்சியமாய் ; பயனின்றி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 963 | 964 | 965 | 966 | 967 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாலுளுவை முதல் - வாளாங்கு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வாழையின், செல்வநிலை, வாழ்வரசி, வாழாவெட்டி, வாள், வாழி, கைம்பெண், வாள்வீச்சு, அலட்சியமாய், பயனின்றி, மோனமாய், சக்கரவாளமலை, கணவனோடு, வாள்வீரம், அணிவகை, முறைமை, வாழ்க்கை, மீன், கழுதை, கொடிவகை, வாழ்தல், வாழ்நாள், துதித்தல், சொல், வாழவைத்தல், மனைவி, இருத்தல்

