தமிழ் - தமிழ் அகரமுதலி - மான்றார் முதல் - மானுடத்தி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| மான்றார் | புத்திமயங்கியவர் . |
| மான்றோல் | மானின் தோல் . |
| மான | ஓர் உவமவுருபு . |
| மானக்கவரி | சாமரை ; கவரிமான் . |
| மானக்குருடன் | முழுக்குருடன் . |
| மானக்குறை | பெருமைக்கேடு . |
| மானக்கேடு | பெருமைக்கேடு . |
| மானகவசன் | மானத்தையே கவசமாகத் தரித்தோன் . |
| மானகீனன் | மானங்கெட்டவன் . |
| மானங்காத்தல் | ஒருவன் அல்லது ஒருத்தியின் மானத்தைப் பேணுதல் . |
| மானசம் | மானத்தொடர்பானது ; கருத்து ; மனம் ; ஒரு புண்ணியதீர்த்தம் . |
| மானசி | உமை . |
| மானசிகம் | மனத்தாற் செய்யுந் தவம் . |
| மானசூத்திரம் | அரைஞாண் . |
| மானத்தாழ்ச்சி | காண்க : மானக்கேடு . |
| மானதக்காட்சி | ஆன்மா புத்தி தத்துவத்தில் நின்று சவிகற்பமாய் அறியும் அறிவு . |
| மானதபூசை | மனப்பாவனையால் வழிபடுதல் . |
| மானதம் | மனத்தால் மந்திரம் நினைத்தல் ; பாவனை ; மனம் ; ஒரு புண்ணியதீர்த்தம் . |
| மானதன் | பகைவரது மானத்தை அழிப்பவனான அரசன் ; மனத்தினின்று தோன்றியவன் . |
| மானதுங்கன் | மானமிக்கவன் . |
| மானபங்கம் | மானக்குறைவு . |
| மானபரன் | தன்மதிப்புள்ளோன் ; அரசர் சிலர் பூண்ட பட்டப்பெயர் . |
| மானம் | மதிப்புடைமை ; கற்பு ; பெருமை ; புலவி ; வலிமை ; வஞ்சினம் ; கணிப்பு ; அளவு கருவி ; ஒப்புமை ; அளவை ; அன்பு ; பற்று ; இகழ்ச்சி ; வெட்கம் ; குற்றம் ; வானூர்தி ; கோயில் விமானம் ; மண்டபம் ; கத்தூரி ; சவ்வாது ; வானம் ; ஒரு தொழிற்பெயர் விகுதி ; ஓர் இடைச்சொல் . |
| மானம்பார்த்தபூமி | மழைநீரை நம்பிப் பயிரிடப்படும் நிலம் . |
| மானமரியாதை | மதிப்பு , சிறப்பு . |
| மானமா | காண்க : கவரிமான் . |
| மானமுறுதல் | பார்த்தல் . |
| மானமூடுதல் | உடை முதலியவற்றால் உடலை மறைத்து மானங்காத்தல் . |
| மானரந்தரி | நாழிகைவட்டில் . |
| மானரியம் | விந்தையானது . |
| மானல் | ஒப்பு ; ஐயுறுதல் ; நாணம் ; மயக்கம் . |
| மானவர் | மாந்தர் . |
| மானவன் | மனிதன் ; பெருமையுடையோன் ; அரசன் ; படைத்தலைவன் ; வீரன் . |
| மானவாரி | காண்க : மானம்பார்த்தபூமி ; மழை பெய்து விளையும் விளைச்சல் ; ஒரு நெல்வகை . |
| மானவாரிநிலம் | காண்க : மானம்பார்த்தபூமி . |
| மானவிலங்கு | காண்க : மானமா . |
| மானவிறல்வேள் | முற்காலத்துச் சிற்றரசர் சிலருக்கு வழங்கிய பட்டபெயர் . |
| மானவீனம் | காண்க : மானக்கேடு . |
| மானவு | தெளிவு . |
| மானன் | தலைவன் ; மூடன் ; வேடன் ; மதிப்புள்ளவன் . |
| மானா | பாட்டன் ; தகப்பன் . |
| மானாகம் | காண்க : பெருநாரை . |
| மானாங்காணி | யோசனையின்மை ; ஒழுங்கீனம் . |
| மானாபரணன் | மானமாகிய அணிகலனை அணியாக அணிந்தவன் . |
| மானார் | பெண்டிர் ; பகைவர் . |
| மானாவாரி | மனப்போக்கு ; ஒரு விளைச்சல் ; விழிப்பின்மை ; மழைபெய்து விளையும் விளைச்சல் . |
| மானாவி | நவராத்திரி விழா ; காண்க : மானாவிச்சோலை . |
| மானாவிச்சோலை | ஒன்பான் இரவு (நவராத்திரி) விழாவில் அமைக்கும் அலங்காரச் சோலை . |
| மானாள் | காண்க : மானுடத்தி . |
| மானி | மதிப்புள்ளவர் ; செருக்குடையவர் ; மங்கையர்க்கரசியார் ; மாமன் . |
| மானிகை | சாராயம் . |
| மானிடச்சட்டை | தெய்வந்தாங்கும் மானிட வடிவம் . |
| மானிடசாதி | மக்கட்பிறப்பு ; காண்க : மானிடம் . |
| மானிடசென்மம் | மக்கட்பிறப்பு ; காண்க : மானிடம் . |
| மானிடத்தன் | மானை இடக்கையில் ஏந்தியவனாகிய சிவபிரான் . |
| மானிடத்தன்மன் | குபேரன் . |
| மானிடம் | மக்கள்தொகுதி ; மனிதன் . |
| மானிடமேந்தி | காண்க : மானிடத்தன் . |
| மானிடவன் | காண்க : மானுடவன் . |
| மானிடவேள்வி | விருந்தினரைப் போற்றுதல் . |
| மானிடன் | மனிதன் ; காண்க : மானிடத்தன் . |
| மானித்தல் | நாணுதல் ; செருக்குக்கொள்ளுதல் ; பெருமைப்படுத்துதல் . |
| மானிதம் | சிறப்பு . |
| மானிதை | சிறப்பு . |
| மானியக்காரன் | சொந்தநிலக்காரன் . |
| மானியம் | இறையிலி நிலம் ; அளவிடுகை ; நிலத்தின் தீர்வையை இனாமாகப் பெறும் உரிமை . |
| மானினி | பெண் . |
| மானுடத்தி | பெண் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 873 | 874 | 875 | 876 | 877 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மான்றார் முதல் - மானுடத்தி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மானம்பார்த்தபூமி, மனிதன், மானிடம், மானிடத்தன், விளைச்சல், சிறப்பு, மானக்கேடு, மானுடத்தி, மானாவிச்சோலை, மக்கட்பிறப்பு, நவராத்திரி, பெருமைக்கேடு, பெண், மானங்காத்தல், நிலம், புண்ணியதீர்த்தம், கவரிமான், மானமா, விளையும், மனம், அரசன்

