முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » தொண்டையுடைதல் முதல் - தொம்பைக்கூடு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - தொண்டையுடைதல் முதல் - தொம்பைக்கூடு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தொண்டையுடைதல் | பருவத்தாற் குரல் மாறுதல் . |
| தொண்டையோர் | தொண்டைமண்டல அரசர் . |
| தொண்டைவிடுதல் | தெளிவாய்க் குரலிடுதல் ; பெருங்குரலிடுதல் . |
| தொண்டைவைத்தல் | கூவுதல் . |
| தொண்டொண்டொடெனல் | பறையின் ஒலிக்குறிப்பு . |
| தொண்ணாத்தல் | கெஞ்சிநிற்றல் . |
| தொண்ணூறு | ஒர் எண் , ஒன்பது பத்து , நூறுக்குப் பத்துக் குறைந்த எண் . |
| தொணதொணப்பு | வெறுப்புண்டாகும்படி ஒயாமல் பேசுகை . |
| தொத்தல் | வலியற்றவர் ; வலுவில்லாதது . |
| தொத்தன் | அடிமையாள் . |
| தொத்தா | சிறிய தாய் . |
| தொத்தாள் | அடிமை ; காண்க : தொத்தா . |
| தொத்திப்பிடித்தல் | ஒட்டிக்கொள்ளுதல் ; ஆதாராமாகப் பற்றுதல் ; அடைக்கலம் புகுதல் . |
| தொத்தியேறுதல் | கைகால்களால் பற்றியேறுதல் ; அதிகாரங்காட்டுதல் . |
| தொத்து | பூங்கொத்து ; திரள் ; பற்று ; சார்பு ; அடிமை ; பழமையாய் வரும் நட்பு ; வைப்பாட்டி ; தொற்றுநோய்க்குணம் ; ஆதாரப்பொருள் . |
| தொத்துதல் | ஒட்டுதல் ; பற்றுதல் ; படர்தல் ; தொங்குதல் ; தொடர்தல் ; நோயோட்டுதல் . |
| தொத்துநோய் | காண்க : தொற்றுநோய் . |
| தொத்துவியாதி | காண்க : தொற்றுநோய் . |
| தொத்துவேலை | இணைக்கும் வேலைப்பாடு ; சரியாய் முடிக்காத வேலை . |
| தொத்துளிப்பாய் | பாய்வகை . |
| தொத்தூன் | தொங்குசதை . |
| தொந்தக்காரர் | உறவினர் ; பழம்பகைவர் . |
| தொந்தப்படுதல் | சம்பந்தப்படுதல் ; ஒட்டுநோய் பற்றுதல் . |
| தொந்தப்பழி | தலைமுறை தலைமுறையாக வரும் பழிப்பு ; பரம்பரையாக வரும் பகை . |
| தொந்தப்பாடு | தொடர்பு , சம்பந்தம் . |
| தொந்தம் | இரட்டை ; புணர்ச்சி ; தொடர்பு ; பகை ; மரபுவழிநோய் ; ஆயுதவகை ; பழமை ; நெருங்கிய பழக்கம் . |
| தொந்தயுத்தம் | இருவர் ஒருவருக்கொருவர் செய்யும் போர் . |
| தொந்தரவு | துன்பம் ; தொல்லை . |
| தொந்தரித்தல் | வருத்துதல் . |
| தொந்தரை | காண்க : தொந்தரவு . |
| தொந்தவினை | முற்பிறப்பில் செய்த இருவினைப்பயன் . |
| தொந்தனை | இணைவிழைச்சு ; பிணைப்பு . |
| தொந்தார்த்தம் | இருபொருள்படுதல் ; முற்பிறப்பில் இருவினைப்பயன் . |
| தொந்தி | வயிறு ; தொப்பை , பெருவயிறு ; தசைமடிப்பு ; நோய்வகை ; பரவமகளிர் அணியும் கைக்காப்பு . |
| தொந்தித்தல் | பற்றுதல் ; கலத்தல் ; தாறுமாறாதல் ; தொடர்தல் . |
| தொந்திதள்ளுதல் | வயிறு பருத்தல் ; வளைந்து போகை . |
| தொந்திப்பு | நோய்க்கலப்பு ; நட்பு ; தீராப்பகை . |
| தொந்திவிழுதல் | காண்க : தொந்திதள்ளுதல் . |
| தொந்திவைத்தல் | காண்க : தொந்திதள்ளுதல் ; செல்வவானாகை . |
| தொந்தோமெனல் | தாள வொலிக்குறிப்பு . |
| தொப்பணம் | விநாயகர் வணக்கம் முதலியவற்றில் வலக்கையால் இடக்காதையும் , இடக்கையால் வலக்காதையும் பிடித்து உட்கார்ந்து எழுந்திருக்கை . |
| தொப்பாரம் | தோட்சுமை ; துணிப்பெருமூட்டை ; புற்கட்டு ; கொப்புளம் ; ஒரு முடியலங்காரவகை ; முகமூடிவகை ; பெரிய கட்டடம் . |
| தொப்பி | தலையணி ; கள் ; கமுகின் பாளைமடல் ; மிருதங்கத்தின் இடப்பக்கம் . |
| தொப்பிக்காரர் | தொப்பி அணிபவராகிய ஐரோப்பியர் . |
| தொப்பிமடல் | கமுகம்பாளைமடல் . |
| தொப்புத்தொப்பெனல் | கீழ்விழுதற்குறிப்பு ; அடிவிழுதற்குறிப்பு . |
| தொப்புள் | கொப்பூழ் . |
| தொப்பெனல் | காண்க : தொப்புத்தொப்பெனல் . |
| தொப்பை | தொந்தி ; கொப்புளம் ; மத்தளத்தில் அடிக்கும் நடுவிடம் . |
| தொப்பைக்காரன் | பெருந்தொந்தியுடைய செல்வன் . |
| தொம்பதம் | ' தத்துவமசி ' என்னும் வேதவாக்கியத்தில் 'துவம்' என்னும் சொல் . |
| தொம்பம் | கழைக்கூத்து . |
| தொம்பரம் | பலருக்குச் சமைத்த ஊண் ; பெரிய கட்டடம் ; சமையற் பானை . |
| தொம்பரவன் | காண்க : தொம்பன் . |
| தொம்பரை | ஊர்சுற்றி ; நெற்குதிர் . |
| தொம்பறை | களஞ்சியம் ; பெருவயிறன் ; மூங்கிலாலான நெற்குதிர் . |
| தொம்பன் | கழைக்கூத்தன் . |
| தொம்பாரம் | பெரிய கட்டடம் . |
| தொம்பை | கடவுளுக்குமுன் கொண்டு செல்லும் எடுபிடிகளில் ஒன்று ; மூங்கிலாலான நெற்குதிர் ; தேர் முதலியவற்றின் ஆடைத்தொங்கல்வகை . |
| தொம்பைக்கூடு | கடவுளுக்குமுன் கொண்டு செல்லும் எடுபிடிகளில் ஒன்று ; மூங்கிலாலான நெற்குதிர் ; தேர் முதலியவற்றின் ஆடைத்தொங்கல்வகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 623 | 624 | 625 | 626 | 627 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தொண்டையுடைதல் முதல் - தொம்பைக்கூடு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பற்றுதல், நெற்குதிர், கட்டடம், மூங்கிலாலான, பெரிய, தொந்திதள்ளுதல், வரும், தொத்தா, கடவுளுக்குமுன், அடிமை, தொம்பன், என்னும், கொண்டு, செல்லும், முதலியவற்றின், ஆடைத்தொங்கல்வகை, தேர், ஒன்று, எடுபிடிகளில், தொப்புத்தொப்பெனல், தொப்பி, முற்பிறப்பில், இருவினைப்பயன், தொந்தரவு, தொடர்பு, தொற்றுநோய், தொந்தி, வயிறு, நட்பு, கொப்புளம், சொல், தொப்பை, தொடர்தல்

