தமிழ் - தமிழ் அகரமுதலி - தான்மிகன் முதல் - தானையம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
தான்மிகன் | அறச்சிந்தையாளன் . |
தான்றி | தான்றிமரம் ; மருதோன்றி ; திரிபலையுள் ஒன்று ; எல்லை . |
தான்றோன்றி | தானாகத் தோன்றியது ; சுதந்தரன் ; கடவுள் . |
தானக்கணக்கு | கோயில் உத்தியோகங்களுள் ஒன்று . |
தானக்காரர் | கோயிற் சொத்துகளை மேற்பார்வையிடுபவர் . |
தானக்கை | தகுந்த இடம் ; உடம்பின் உயிர் நிலைப் பகுதி . |
தானகம் | ஒரு கூத்துவகை ; பண்ணினை விவரித்தல் . |
தானசாசனம் | தானம் கொடுத்தற்குரிய பத்திரம் . |
தானசீலம் | கொடைக்குணம் . |
தானசீலன் | ஈகையாளன் . |
தானசூரன் | காண்க : தானவீரன் . |
தானத்தார் | கோயில் அதிகாரிகள் . |
தானத்தான் | சிவாலயத்தில் பூசை செய்யும் குருக்கள் ; பரம்பரையாக வந்த தலைவன் . |
தானதருமம் | ஈகை . |
தானநிலை | இசைக் கூறுபாடு . |
தானப்பிரமாணம் | காண்க : தானசாசனம் . |
தானப்பெருக்கம் | பத்து , நூறு , ஆயிரம் முதலிய எண்களால் பெருக்குகை ; மனக்கோட்டை கட்டுகை . |
தானப்பொருத்தம் | நூலைத் தொடங்கும் செய்யுளிலுள்ள முதன்மொழிப் பொருத்தம் . |
தானபத்திரம் | காண்க : தானசாசனம் . |
தானபத்திரிகை | காண்க : தானசாசனம் . |
தானம் | இடம் ; இருப்பிடம் ; பதவி ; கோயில் ; இருக்கை ; சக்தி ; துறக்கம் ; செய்யுட் பொருத்தத்தில் வரும் நிலைகள் ; எழுத்துப் பிறக்குமிடம் ; எண்ணின் தானம் ; நன்கொடை ; யானை மதம் ; நால்வகை உபாயத்துள் ஒன்றாகிய கொடை ; குளித்தல் ; இசைச்சுரம் ; சாதக சக்கரத்திலுள்ள வீடு ; ஆற்றலில் சமமாயிருக்கை ; இல்லறம் ; மகரவாழை . |
தானம்பாடுதல் | ஒரு பண்ணினைச் சுரமுறையால் விவரித்துப் பாடுதல் . |
தானாமானம் | இருக்கும் பதவியால் ஏற்படும் பொருமை . |
தானவண்ணம் | ஓர் இசைப்பாட்டுவகை . |
தானவர் | தனு என்பவளின் வழிவந்த அசுரர் ; வித்தியாதரர் . |
தானவள் | அசுரப்பெண் . |
தானவன் | சந்திரன் ; அசுரன் . |
தானவாரி | ஆசுரர்களுக்குப் பகைவனான திருமால் ; இந்திரன் . |
தானவிச்சை | வித்தையின் துறைகள் . |
தானவீரன் | பெருங்கொடையாளி . |
தானாக | தனியாக ; தன் விருப்பம்போல் . |
தானாகரன் | தானத்திற்கு இருப்பிடமான பெருங்கொடையாளி . |
தாஅனாட்டித் தனாதுநிறுப்பு | தானாக ஒன்றனைக் கூறி அதனை நிலைநிறுத்துதல் . |
தானாதல் | சுதந்தரனாதல் ; ஒன்றுபடுதல் . |
தானாதிகாரி | கொடைக்குரிய அதிகாரி . |
தானாதிபதி | படைத்தலைவன் ; தூதன் ; நடு நிலையாளன் . |
தானாபத்தியம் | தூது ; நடுவுநிலைமை ; ஆசாரியபதவி . |
தானாபதி | படைத்தலைவன் ; தூதன் ; அந்தப்புரத் தூதி . |
தானி | தானத்திலுள்ளது ; இடத்திலிருப்பது ; இருப்பிடம் ; பண்டசாலை ; கொடுப்போன் . |
தானிகம் | கோயிலுக்குப் பரம்பரையாயுள்ள உரிமை ; கோயில் செயல்களைக் கண்காணிக்கும் உத்தியோகம் ; கொத்துமல்லி . |
தானிகன் | கோயில் செயல்களைக் கண்காணிப்பவன் . |
தானிகை | கொத்துமல்லி . |
தானியகோட்டகம் | தானியக் களஞ்சியம் . |
தானியசாரம் | தூற்றின நெற்பொலி . |
தானியதவசம் | தானியமாகிய செல்வம் . |
தானிப்பொட்டு | பதர் ; அந்துப்பூச்சி ; பயிர் நோய்வகை . |
தானியம் | நெல் முதலியன ; கொத்துமல்லி . |
தானியராசன் | கோதுமை ; கொத்துமல்லி . |
தானியலட்சுமி | தானியமாகிய செல்வத்துக்குரிய திருமகள் . |
தானியாகுபெயர் | இடத்தில் உள்ள பொருளின் பெயர் இடத்திற்கு ஆவது . |
தானீகம் | கோயில் ; செயல்களைக் கண்காணிக்கும் உத்தியோகம் . |
தானு | காற்று ; கொடையாளன் ; வெற்றியாளன் . |
தானூரம் | சுழல்காற்று . |
தானெடுத்துமொழிதல் | முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்றாகிய முன்னோர் மொழியை எடுத்தாளுதல் . |
தானை | படை ; ஆயுதப்பொது ; ஆடை ; மேடைத் திரைச்சீலை ; முசுண்டி என்னும் ஆயுதம் . |
தானைநிலை | பகைவர் அஞ்சுதற்குரிய காலாட்படையின் நிலைமை கூறும் புறத்துறை ; இருபக்கத்துப் படையும் புகழும்படி போர் செய்த வீரனது திறத்தைக் கூறும் புறத்துறை . |
தானைமறம் | போர் செய்யவந்த இருவகைப் படையும் போர் செய்து அழியாதபடி காத்த வீரன் ஒருவனது உயர்ச்சி கூறும் புறத்துறை ; சேனையின் அஞ்சாமையைப் புகழ்ந்து பகைவர் அழிந்ததற்கு இரங்குதலைக் கூறும் புறத்துறை ; உயிர்க்கேடுகட்கு அஞ்சாது பூசலுக்கு முற்படும் வேந்தனது சிறப்புக்கூறும் புறத்துறை . |
தானைமாலை | அரசனுடைய முன்னணிப்படையை ஆசிரியப்பாவால் புகழ்ந்து பாடும் இலக்கியவகை . |
தானையம் | காண்க : தாணையம் ; கால்நடைகளின் மந்தை . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 565 | 566 | 567 | 568 | 569 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தான்மிகன் முதல் - தானையம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கோயில், காண்க, புறத்துறை, கூறும், தானசாசனம், கொத்துமல்லி, செயல்களைக், போர், தானம், புகழ்ந்து, தானியமாகிய, பகைவர், உத்தியோகம், படையும், படைத்தலைவன், இருப்பிடம், தானவீரன், இடம், ஒன்றாகிய, பெருங்கொடையாளி, தூதன், ஒன்று, தானாக, கண்காணிக்கும்