முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சொல்லதிகாரம் முதல் - சொற்பசீவனம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சொல்லதிகாரம் முதல் - சொற்பசீவனம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சொல்லதிகாரம் | சொல்லின் பாகுபாடு , செய்கை முதலியவற்றைப்பற்றிக் கூறும் இலக்கணப் பகுதி . |
| சொல்லழுத்தம் | ஊன்றியுச்சரிக்கை ; வாக்குறுதி . |
| சொல்லற்பாடு | சொல்லப்படுகை . |
| சொல்லறிகணை | ஒலியைக் கேட்டே மறைந்துள்ள இலக்கை அறிந்து எய்யுங் கணை . |
| சொல்லறிபுள் | கிளி ; பூவை . |
| சொல்லுறுதி | விலை முதலியவற்றை வரையறையாகக் கூறும் உறுதி . |
| சொல்லாக்கம் | சொற்செய்து கொள்ளுகை . |
| சொல்லாகுபெயர் | நூலுக்கு உரை செய்தான் என்பதில் உரையென்பது அம் மொழியால் உணரப்படும் பொருளுக்கு ஆவது போன்ற ஆகுபெயர் . |
| சொல்லாட்டி | திறமையாகப் பேசுபவள் . |
| சொல்லாட்டு | பேச்சு . |
| சொல்லாடுதல் | பேச்சில் வழங்குதல் ; பேசுதல் . |
| சொல்லாதசொல் | தகாத சொல் , இடக்கர்ச்சொல் ; வசை . |
| சொல்லாமற்சொல்லுதல் | தன் கருத்தைக் குறிப்பாகச் சொல்லுதல் . |
| சொல்லாழம் | சொல்லின் பொருள் ஆழம் . |
| சொல்லாளி | வாக்குறுதி யுள்ளவன் ; செல்வாக்குள்ளவன் ; சொற்றிறமையுள்ளவன் . |
| சொல்லானந்தம் | பிரபந்தத் தலைவனது இயற்பெயரையடுத்துக் கேடுபயக்கும் அமங்கலச் சொல்லையமைத்துச் செய்யுள் செய்தல் . |
| சொல்லிக்காட்டுதல் | பாடம் ஒப்பித்தல் ; விளக்கியறிவித்தல் ; குத்திக்காட்டுதல் . |
| சொல்லிக்கொடுத்தல் | படிப்பித்தல் ; புத்திசொல்லுதல் ; அறிவித்தல் ; தூண்டிவிடுதல் . |
| சொல்லிக்கொள்ளுதல் | விடைபெறுதல் ; ஒருவனுக்காகப் பிறனிடந் தாங்கிப் பேசுதல் ; முறையிடுதல் ; தனக்குள் பேசுதல் ; பாடங் கேட்டல் . |
| சொல்லிப்போடுதல் | வெளியிடுதல் ; காட்டிக்கொடுத்தல் ; ஆள்மூலம் செய்தியனுப்புதல் ; அழைத்துவரச் செய்தி அனுப்புதல் . |
| சொல்லிவிடுதல் | வெளியிடுதல் ; காட்டிக்கொடுத்தல் ; ஆள்மூலம் செய்தியனுப்புதல் ; அழைத்துவரச் செய்தி அனுப்புதல் . |
| சொல்லிவைத்தல் | முன்னறிவித்தல் ; கற்பித்தல் . |
| சொல்லிழுக்கு | சொற்குற்றம் . |
| சொல்லிறத்தல் | வாக்கை மீறுதல் . |
| சொல்லின்பம் | சொற்சுவை . |
| சொல்லின் முடிவின் அகப்பொருள் முடித்தல் | சொல் முடிந்தவிடத்து மற்ற பொருள்களையும் முடியவைக்கும் உத்திவகை . |
| சொல்லுதல் | பேசுதல் ; அறிவித்தல் ; திருப்பிக் கூறுதல் ; கட்டளையிடுதல் ; புத்திகூறல் ; புகழ்தல் ; களைதல் . |
| சொல்லுரிமை | அழுத்தமாய்த் திருந்திய பேச்சு . |
| சொல்லுருபு | வேற்றுமையுருபுகட்குப் பதிலியாக வழங்குஞ் சொல் . |
| சொல்லுரை | சொற்பயன் . |
| சொல்லுறுதி | வாக்கு நிறைவேற்றுகை . |
| சொல்லெச்சம் | சொல் எஞ்சி நிற்பது . |
| சொல்லேருழவர் | அமைச்சர் ; புலவர் . |
| சொல்வகை | சொல்லியற் பகுப்பு ; பேசுந்திறம் ; கூத்துக்குரியதாய் வரும் பாட்டு . |
| சொல்வழு | சொல்லிலக்கணத்தோடு பொருந்தாமையாகிய குற்றம் . |
| சொல்வளம் | சொற்பொழிவு . |
| சொல்வளர்த்தல் | செய்தியைப் பலருமறியச் செய்தல் ; வீணாகச் சொல்லைப் பெருக்குதல் . |
| சொல்வன்மை | பேச்சுவன்மை ; சொல்திறம் . |
| சொல்விழுக்காடு | பொருளின்றி வரும் துணைச்சொல் . |
| சொல்விளம்பி | பேசச் செய்யும் கள் . |
| சொல்வென்றி | வாதத்தில் வெல்லுதல் . |
| சொலவு | சொல்லுகை ; பழமொழி . |
| சொலி | மரப்பட்டை . |
| சொலித்தல் | உரித்தல் ; பேர்த்தல் ; ஒலித்தல் ; எரிதல் . |
| சொலிப்பு | சுடர் , ஒளி . |
| சொலியன் | காண்க : முடக்கொற்றான் . |
| சொள்ளல் | சொத்தை ; ஒல்லி ; ஒன்றுக்கும் பயனற்றவன் ; அம்மைவடு ; இழுக்கு ; செயற்கேடு . |
| சொள்ளை | சொத்தை ; ஒல்லி ; ஒன்றுக்கும் பயனற்றவன் ; அம்மைவடு ; இழுக்கு ; செயற்கேடு . |
| சொற்காத்தல் | புகழைப் போற்றுதல் ; வாக்கை நிறைவேற்றுதல் ; அடக்கிப் பேசுதல் . |
| சொற்காரி | ஏழுவகை மேகங்களுள் ஒன்று . |
| சொற்குற்றம் | சொல்லிலக்கணத்திற்கு மாறான குற்றம் ; சொல்லின் தீமை . |
| சொற்கேட்டல் | ஏவற்படி நடத்தல் ; வசையைப் பொறுத்தல் ; வசைபெறுதல் . |
| சொற்கோ | திருநாவுக்கரசர் . |
| சொற்சாதுரியம் | நாவன்மை ; பேச்சுநயம் . |
| சொற்சித்திரம் | நாவன்மை ; பேச்சுநயம் . |
| சொற்சிதைவு | சொல்லின் மாறுபட்ட உருவம் . |
| சொற்சிமிட்டு | பொடிவைத்துப் பேசுகை ; சொல்வன்மை . |
| சொற்சீரடி | அம்போதரங்க வுறுப்பு . |
| சொற்சுவை | சொல்லின்பம் . |
| சொற்செலவு | செல்வாக்கு ; பரிந்து பேசுகை . |
| சொற்செறிவு | சொல்வளம் . |
| சொற்சோதனை | சொல்லாராய்ச்சி . |
| சொற்சோர்வு | சொற்பிழை ; தடுமாறிப் பேசுதல் . |
| சொற்பசீவனம் | வறுமைப்பட்ட வாழ்வு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 515 | 516 | 517 | 518 | 519 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சொல்லதிகாரம் முதல் - சொற்பசீவனம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பேசுதல், சொல், சொல்லின், சொல்வளம், சொத்தை, சொல்வன்மை, வரும், சொற்சுவை, ஒல்லி, குற்றம், பயனற்றவன், நாவன்மை, பேச்சுநயம், பேசுகை, செயற்கேடு, இழுக்கு, சொல்லின்பம், அம்மைவடு, ஒன்றுக்கும், சொற்குற்றம், சொல்லுதல், செய்தல், பேச்சு, சொல்லுறுதி, கூறும், வாக்குறுதி, அறிவித்தல், வெளியிடுதல், செய்தி, அனுப்புதல், அழைத்துவரச், செய்தியனுப்புதல், காட்டிக்கொடுத்தல், ஆள்மூலம், வாக்கை

