தமிழ் - தமிழ் அகரமுதலி - சடக்கோதன் முதல் - சடுதி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சடங்குகழித்தல் | பெண்ணின் முதல் பூப்பில் உரிய சடங்கு செய்தல் ; சில செயல்களுக்குரிய முறைகளைச் செயதல் . |
| சடசடவெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| சடசடெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| சடசீதிமுகம் | ஆனி , புரட்டாசி , மார்கழி , பங்குனி மாதங்கள் பிறக்கும் நாள் ; சூரியன் தனுசு 26ஆம் பாகையிலும் ,மீனம் 22 ஆம் பாகையிலும் ; மிதுனம் 18ஆம் பாகையிலும் , கன்னி 14ஆம் பாகையிலும் செல்லும் காலம் . |
| சடப்பால் | முலைப்பால் . |
| சடபதார்த்தம் | அறிவில்பொருள் . |
| சடபுடெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு . |
| சடம் | அறிவில்பொருள் ; அறியாமை ; உடல் ; பொய் ; வஞ்சகம் ; கொடுமை ; சோம்பல் ; பிறக்கும்போது ஆன்மாவில் மோதி அதன் அறிவைக் கெடுக்கும் ஒரு வாயுவகை ; ஆறு என்னும் எண் . |
| சடம்பு | சணல் . |
| சடரம் | வயிறு . |
| சடராக்கினி | வயிற்றுத் தீ , மூலாக்கினி . |
| சடலபுடலம் | பருத்திருப்பது . |
| சடலம் | உடம்பு ; பருத்த உடல் ; அறிவில் பொருள் . |
| சடலை | பருத்திருப்பது ; வீண்செயல் . |
| சடவுப்பு | அமரியுப்பு ; சமாதியுப்பு . |
| சடன் | மூடன் , அறிவற்றவன் . |
| சடாக்கரம் | காண்க : ஆறெழுத்து . |
| சடாக்கரி | காண்க : சடாட்சரி . |
| சடாகம் | அருநெல்லிமரம் . |
| சடாட்சரம் | காண்க : ஆறெழுத்து . |
| சடாட்சரி | உமை . |
| சடாடவி | சடைத்திரள் , அடர்ந்த சடை . |
| சடாதரம் | காண்க : சடாகம் . |
| சடாதரன் | சடைதரித்த சிவன் ; வீரபத்திரன் . |
| சடாதரி | பார்வதி . |
| சடாதாரம் | ஆறு ஆதாரம் ; அவை : மூலாதாரம் , சுவாதிட்டானம் , மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆஞ்ஞை . |
| சடாதாரி | சடைதரிதத்வன் , சிவன் ; பார்வதி ; கொடியாள்கூந்தல் ; வரிக்கூத்துவகை . |
| சடாபாரம் | சடைக்கற்றை |
| சடாமகுடம் | சடைமுடி . |
| சடாமகுடன் | சிவன் . |
| சடாமாஞ்சி | செடிவகை ; ஒரு மருந்துவகை . |
| சடாமாஞ்சில் | செடிவகை ; ஒரு மருந்துவகை . |
| சடாமுடி | சடைமுடி , மயிர்த்திரள் . |
| சடாமுனி | பேய்வகை . |
| சடாய் | சடாயு என்னும் கழுகுவேந்தன் ; காற்சோடுவகை . |
| சடாய்த்தல் | துப்பாக்கி கெட்டித்தல் ; பெருமிதமாகப் பேசுதல் ; அதட்டுதல் . |
| சடாரி | கவசம் ; சடகோபன் , நம்மாழ்வார் . |
| சடாரிடல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| சடாரெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| சடாலம் | ஆலமரம் ; தேன்கூடு . |
| சடாவல்லவன் | சடைமுறையில் வேதப் பகுதிகளைச் சொல்வதில் வல்லவன் . |
| சடானன் | ஆறு முகத்தையுடைய முருகன் . |
| சடிதி | விரைவு , சீக்கிரம் ; ஏலத்தோல் . |
| சடிதிவு | ஏலத்தோல் . |
| சடிலம் | செறிவு , நெருக்கம் ; வேர் ; குதிரை ; சடையாக அமைந்த மயிர்முடி . |
| சடினம் | வசம்பு நெட்டிவேர் . |
| சடுகுடு | ஒருவகை விளையாட்டு . |
| சடுத்தம் | போட்டி ; போராட்டம் ; வீரவாதம் ; வற்புறுத்தல் . |
| சடுத்தாசனம் | பூசையில் சிவனது இலிங்கம் அமைவதற்குரிய அனந்தர் , தன்மம் , ஞானம் , வைராக்கியம் , ஐசுவரியம் , பதுமம் என்ற அறுவகை இருக்கை . |
| சடுத்தி | சோதனை . |
| சடுதி | விரைவு ; சோதனை . |
| சடக்கோதன் | வசம்பு . |
| சடகம் | ஊர்க்குருவி ; கரிக்குருவி ; வட்டில் . |
| சடகோபம் | திருமால் கோயில்களில் தரிசிப்போர் முடிமீது வைக்கப்படும் திருமாலின் திருவடிநிலை . |
| சடகோபன் | சடம் என்னும் வாயுவை வென்ற நம்மாழ்வார் . |
| சடங்கப்படுதல் | மூட்டையாகக் கட்டப்படுதல் ; வேலை செய்துகொண்டிருத்தல் . |
| சடங்கப்பூட்டு | குண்டுக்கட்டாய்க் கட்டும் மற்பிடிவகை . |
| சடங்கம் | வேதத்திற்கு அங்கமான அறுவகைச் சாத்திரம் ; அவை : சிட்சை , கற்பம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தோபிசிதம் , சோதிடம் ; பயணமூட்டை ; வருத்தம் ; வேலை ; பதினாறு தூக்களவு . |
| சடங்கம்போடுதல் | மூட்டையாகக் கட்டுதல் . |
| சடங்கர் | மறைக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன் . |
| சடங்கவி | மறைக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன் . |
| சடங்காதல் | பெண்மகள் பூப்படைதல் . |
| சடங்கு | சாத்திரமும் வழக்கமும்பற்றிய முறையை நடத்தும் கிரியை ; முதற்பூப்புச் சடங்கு ; சாந்திக் கலியாணம் ; குண்டுக் கட்டாய்க் கட்டும் மற்பிடிவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 413 | 414 | 415 | 416 | 417 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சடக்கோதன் முதல் - சடுதி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒலிக்குறிப்பு, பாகையிலும், காண்க, சிவன், சடங்கு, என்னும், விரைவு, சோதனை, ஏலத்தோல், வசம்பு, மூட்டையாகக், வேலை, மறைக்குரிய, ஆறங்கங்களையும், மற்பிடிவகை, நம்மாழ்வார், கட்டும், அறிந்தவன், சடைமுடி, பருத்திருப்பது, உடல், சடம், அறிவில்பொருள், ஆறெழுத்து, சடாட்சரி, மருந்துவகை, செடிவகை, பார்வதி, சடாகம், சடகோபன்

