தமிழ் - தமிழ் அகரமுதலி - கோதையன் முதல் - கோமாரி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கோமளம் | அழகு ; இளமை ; மென்மை ; மகிழ்ச்சி ; கறவைப் பசு ; மாணிக்கவகை . |
| கோமாட்டி | தலைவி ; அரசி . |
| கோமாதாக்கள் | நத்தை , பத்திரை , சுரபி , சுசீலை , சுமனை என்னும் ஐவகைப் பசுக்கள் . |
| கோமாயு | நரி . |
| கோமாரி | மாடுகளுக்கு வாயிலும் கால்களிலும் வரும் நோய் . |
| கோப்பாளி | வரிக்கூத்துவகை ; தேர்ந்த போக்கிரி . |
| கோப்பிடுதல் | ஏற்பாடுசெய்தல் . |
| கோப்பியம் | இரகசியம் ; அடக்கம் . |
| கோப்பு | கோக்கை ; ஒழுங்கு ; அமைப்பழகு ; சீர் ; அலங்காரம் ; கவிவு ; பகட்டு ; பகடி ; உபாயம் ; தூக்கும் சுமை ; காய்கறிகள் ; அலுவலக ஆவணத் தொகுப்பு . |
| கோப்புமுறை | பொருந்தும்முறை . |
| கோப்பெண்டு | அரசமாதேவி . |
| கோப்பெருங்கணக்கர் | அரசாங்கத்துத் தலைமைக் கணக்கர் . |
| கோப்பெருங்கிழவோள் | பட்டத்தரசி . |
| கோப்பெருந்தேவி | பட்டத்தரசி . |
| கோப்பெருமுதியர் | அரசாங்கத்தில் அனுபவம் முதிர்ந்த விருத்தர் . |
| கோப்பெருந்தேவன் | மன்னர்மன்னன் , அரசர்க்கெல்லாம் அரசன் , பேரரசன் , சக்கரவர்த்தி . |
| கோபக்காரன் | சினம் மிகுதியுள்ளவன் . |
| கோபகுண்டம் | எட்டிமரம் . |
| கோபங்காய்ந்தோர் | கோபத்தை அடக்கியவரான முனிவர் . |
| கோபங்கொள்ளுதல் | சினம்கொள்ளுதல் ; புண் முதலியவை கடுமையாதல் . |
| கோபஞ்செலுத்துதல் | சினத்தை வெளிப்படுத்துதல் . |
| கோபத்திரம் | தாமரைத் தண்டிலுள்ள நூல் . |
| கோபத் தீ | உயிர்த் தீக்களுள் ஒன்றான சினம் . |
| கோபதாபம் | பெருஞ்சினம் . |
| கோபதி | எருது ; இந்திரன் ; சிவன் ; சூரியன் . |
| கோபம் | சினம் ; வெறுப்பு ; தம்பலப்பூச்சி ; ஒரு துகில்வகை . |
| கோபவல்லி | பெருங்குரும்பைச்கொடி . |
| கோபன் | சிவன் ; இடையன் ; ஆநிரை காப்போன் . |
| கோபனம் | மறைவு ; இரகசியம் . |
| கோபனை | கவண் . |
| கோபாலகன் | கோக்களைக் காப்பவன் , இடையன் ; கண்ணபிரான் . |
| கோபாலன் | கோக்களைக் காப்பவன் , இடையன் ; கண்ணபிரான் . |
| கோபாலிகை | காண்க : கோபிகை . |
| கோபி | சினமுள்ளோன்(ள்) ; இடைச்சி ; நன்னாரி ; கோபிசந்தனம் ; கோபிசந்தனத்தால் அணியும் நெற்றிக்குறி ; கருநொச்சி . |
| கோபிகை | இடைச்சி . |
| கோபிசந்தனம் | ஒருசார் திருமால் அடியார்கள் அணியும் ஒருவகை மஞ்சள் திருமண் . |
| கோபித்தல் | சினத்தல் ; புண் முதலிய சினத்தல் ; கடிதல் . |
| கோபிதம் | கோபம் . |
| கோபிதாரம் | குராமரம் . |
| கோபிநாதன் | இடைச்சியர் நாயகனான கண்ணபிரான் , திருமால் . |
| கோபிநாமம் | திருமால் அடியார்கள் கோபி சந்தனத்தால் அணியும் நெற்றிக்குறி . |
| கோபினை | கோபம் . |
| கோபீகன் | அதிக கோபமுள்ளவன் . |
| கோபுரத்தும்பை | அடுக்கத்தும்பை . |
| கோபுரந்தாங்கி | கோபுரத்தைத் தாங்குவது போலச் செய்திருக்கும் பதுமை ; காரிய நிருவாகியாகிய நடிப்போன் . |
| கோபுரம் | நகரம் அல்லது கோயிலின் பெரு வாயில் மேலமைப்பு ; வாயில் . |
| கோபுரவாசல் | கோபுரத்தோடுங் கூடிய வாயில் ; கோபுரத்தின் கீழ்நிலை . |
| கோபுரவாயில் | கோபுரத்தோடுங் கூடிய வாயில் ; கோபுரத்தின் கீழ்நிலை . |
| கோம்பல் | முன்கோபம் ; தணியாக் கோபம் . |
| கோம்பறை | ஒன்றுமற்றது , பயனற்றது . |
| கோம்பி | பச்சோந்தி ; ஓணான் ; ஓந்திப்பொது . |
| கோம்பு | சினக்குறிப்பு . |
| கோம்புதல் | தேங்காய் முதலியவற்றின் மேல் ஓடு ; அறிவிலி ; ஓர் ஊர் . |
| கோமகள் | அரசி ; தலைவி . |
| கோமகன் | இளவரசன் , அரசகுமாரன் ; அரசன் . |
| கோமடந்தை | இராசலக்குமி , திருமகள் , அரசி . |
| கோமணம் | காண்க : கோவணம் . |
| கோமணாண்டி | கோவணத்துடன் திரியும் பரதேசி . |
| கோமணிக்குன்றம் | வெண்கலமலை . |
| கோமதி | ஓர் ஆறு . |
| கோமயம் | பசுவின் சாணம் ; கோமூத்திரம் . |
| கோமரம் | தெய்வ ஆவேசம் ; சதுரக்கள்ளி . |
| கோதையன் | பயனில்லாப் பொருளைக் கூறுவோன் . |
| கோந்தச்சார் | சிறுமையன் , அற்பன் . |
| கோளந்தளங்காய் | கடல்வழியாகக் கொண்டுவரப்படும ஒருவகை மருந்துப் பழம் . |
| கோந்தி | குரங்கு . |
| கோந்து | பிசின் . |
| கோந்துரு | பாட்டனக்குப் பாட்டன் ; ஏளனம் . |
| கோநகர் | தலைநகர் ; கோயில் . |
| கோநாய் | ஓநாய் . |
| கோப்பழித்தல் | சீரழித்தல் . |
| கோப்பன் | கெட்டிக்காரன் ; தேர்ந்த போக்கிரி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 398 | 399 | 400 | 401 | 402 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோதையன் முதல் - கோமாரி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வாயில், கோபம், சினம், திருமால், இடையன், கண்ணபிரான், அரசி, அணியும், அடியார்கள், கோபிசந்தனம், நெற்றிக்குறி, சினத்தல், கோபுரத்தின், கீழ்நிலை, கூடிய, கோபுரத்தோடுங், இடைச்சி, ஒருவகை, காண்க, பட்டத்தரசி, அரசன், இரகசியம், போக்கிரி, தேர்ந்த, புண், சிவன், கோபிகை, தலைவி, காப்பவன், கோக்களைக், கோபி

