தமிழ் - தமிழ் அகரமுதலி - கைப்பட முதல் - கைம்மணி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கைப்பாகம் | செய்பாகம் ; பதமறிந்து மருந்து முதலியன பக்குவஞ் செய்யும் திறம் . |
| கைப்பாடு | கைவேலை ; கைவசம் ; கையிழப்பு . |
| கைப்பாடுபடுதல் | அரும்பாடுபட்டு உழைத்தல் . |
| கைப்பாணி | மணியாசனப் பலகை ; முடவன் தவழ்வதற்குக் கொள்ளும் கைப்பிடி . |
| கைப்பிசகு | கைக்குற்றம் , கைத்தவறு ; சிறுபிழை . |
| கைப்பிடி | கையாற் பிடிக்கை ; பிடியளவு ; ஆயுதப்பிடி ; படிக்கட்டுகளில் பக்கத்தில் பிடித்துச் செல்ல உதவும் சுவர்ச்சட்டம் முதலியன ; திருமணம் . |
| கைப்பிடிச்சுவர் | படிக்கட்டு முதலியவற்றின் பக்கங்களிற் கையாற் பிடித்துக்கொண்டு செல்லுமாறு அமைக்கப்பட்ட சுவர் . |
| கைப்பிடித்தல் | உறுதியாகக் கொள்ளுதல் ; மணஞ்செய்தல் . |
| கைப்பிடியாய்ப்பிடித்தல் | கையும் களவுமாய்ப் பிடித்தல் . |
| கைப்பிடிவாள் | கைவாள் , கைரம்பம் . |
| கைப்பிள்ளை | கைக்குழந்தை . |
| கைப்பு | கசப்பு , அறுசுவையுள் ஒன்று ; ஆடு தின்னாப்பாளை ; கைப்பான பொருள் ; வெறுப்பு ; குடிவெறி . |
| கைப்புட்டில் | கைவிரலுறை . |
| கைப்புடை | விரலுறை ; வாயிற்காவலர் தங்குமிடம் ; அருகு . |
| கைப்புண்ணியம் | கைராசி ; தயாளம் . |
| கைப்புலி | கையையுடைய புலி , யானை . |
| கைப்பூட்டு | மல்லரின் கைப்பிடிவகை ; தோட் பொருத்து . |
| கைப்பெட்டி | சிறு பெட்டி . |
| கைப்பொருள் | கையிலுள்ள பொருள் . |
| கைப்பொல்லம் | சிறு துண்டு . |
| கைப்பொறுப்பாய் | அக்கறையாய் . |
| கைப்பொறுப்பு | வாணிகம் முதலியவற்றில் செலவு நட்டங்கள் தன் பொறுப்பு ஆகுகை ; இழப்பு . |
| கைபடிதல் | தொழிலிற் கைதிருந்துதல் . |
| கைபதறுதல் | அவசரப்படுதல் ; கைந்நடுங்குதல் . |
| கைபரிதல் | ஒழங்குகுலைதல் . |
| கைபரிமாறுதல் | தூய்மை கெடும்படி தொடுதல் ; கற்பையழித்தல் ; கவர்தல் ; அடிபிடி சண்டையிடுதல் . |
| கைபறிதல் | கைதவறுதல் . |
| கைபார்த்தல் | கைத்தாதுவை அறிதல் ; கைக்குறி பார்த்தல் ; நாடி பார்த்தல் ; உதவி நாடுதல் ; பழுதுபார்த்தல் ; வாணிகப் பொருள்களைச் சோதித்தல் . |
| கைபிசைதல் | செய்வதறியாது திகைத்தல் . |
| கைபிடி | உறுதி ; கையிற் பெற்றுக்கொண்ட பொருள் . |
| கைபிடித்தல் | கைக்கொள்ளுதல் ; மணம்புரிதல் . |
| கைபுகுதல் | வசப்படுதல் ; ஒருவன் பேரிலிருந்த பத்திரம் பிறன் ஒருவனுக்கு மாறுதல் . |
| கைபுடைத்தல் | கைதட்டுதல் . |
| கைபுனை | அலங்கரிக்கை ; பூத்தொடுக்கை . |
| கைபுனைதல் | அலங்கீரித்தல் ; அழகுசெய்தல் ; பூத்தொடுத்தல் . |
| கைபூசுதல் | உண்ட கையைக் கழுவுதல் . |
| கைபோடுதல் | வாக்குக் கொடுத்தல் ; தொழிலேற்கத் தொடங்குதல் ; பிறர் அறியாமல் கைகளை ஆடைக்குள் மறைத்துக்கொண்டு கைக்குறிப்பால் விலை பேசுதல் ; காமவிச்சையோடு தொடுதல் . |
| கைபோதல் | முற்றும் வல்லவனாதல் ; கடந்து செல்லுதல் . |
| கைம்பெண் | கணவனை இழந்தவள் . |
| கைம்பெண்கூறு | ஆண்வழி இல்லாத கைம் பெண்ணுக்குக் குடும்பச் சொத்திலிருந்து கொடுக்கும் வாழ்க்கைப் பொருள் . |
| கைம்பெண்டாட்டி | காண்க : கைம்பெண் . |
| கைம்மகவு | காண்க : கைக்குழந்தை . |
| கைம்மடல் | தோட்பட்டை . |
| கைம்மணி | பூசையில் கையாலசைக்குஞ் சிறுமணி ; கைத்தாளம் . |
| கைப்பட | சொந்தக் கையெழுத்தாக . |
| கைப்படுத்தல் | கைப்பற்றுதல் ; தெளிதல் . |
| கைப்படுதல் | கைவசமாதல் ; பார்த்தல் . |
| கைப்படை | ஆயுதம் ; மணியாசுப் பலகை . |
| கைப்பண்டம் | கையிலுள்ள பொருள் . |
| கைப்பணம் | கையிலுள்ள தொகை ; சொந்தப் பணம் ; வாணிகத்தில் கடனின்றிக் கைமேல் கொடுக்கும் பணம் ; ரொக்கப்பணம் ; மூலதனம் . |
| கைப்பணி | மணியாசுப் பலகை ; குற்றேவல் . |
| கைப்பதற்றம் | அவசரத்தில் கைபதறுகை ; திருடுங்குணம் . |
| கைப்பந்தம் | கைத்தீவட்டி . |
| கைப்பரிசு | சிறு தெப்பம் ; இலஞ்சம் . |
| கைப்பழக்கம் | கைப்பயிற்சி . |
| கைப்பள்ளம் | உள்ளங்கைக் குழி . |
| கைப்பற்று | கைத்தாங்கல் ; கையில் பெற்றுக் கொண்ட தொகை ; சாதனம் ; உரிமை மானியம் . |
| கைப்பற்றுதல் | கையிற் கொள்ளுதல் ; கவர்தல் ; மணம்புரிதல் . |
| கைப்பற்றுநிலம் | நீண்டகாலம் அனுபவத்திலிருக்கும் நிலம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 376 | 377 | 378 | 379 | 380 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைப்பட முதல் - கைம்மணி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொருள், கையிலுள்ள, பார்த்தல், சிறு, பலகை, கொடுக்கும், கைம்பெண், காண்க, மணம்புரிதல், பணம், தொகை, மணியாசுப், கைப்பற்றுதல், கவர்தல், கையாற், கைப்பிடி, கொள்ளுதல், கைக்குழந்தை, முதலியன, தொடுதல், கையிற்

