தமிழ் - தமிழ் அகரமுதலி - கேதுரத்தினம் முதல் - கேனன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கேருதல் | கோழி கத்துதல் ; குரல் கம்முதல் ; தொண்டைக கட்டால் வருந்தி மூச்சுவிடுதல் ; திகைத்தல் . |
| கேலகன் | கழைக்கூத்தாடி . |
| கேலம் | விளையாட்டு ; மகளிர் விளையாட்டு . |
| கேலி | ஏளனம் ; விளையாட்டுப் பேச்சு ; விகடம் . |
| கேலிக்காரன் | சிரிப்புக்காட்டுவோன் , விகடன் ; எள்ளி நகையாடுவோன் . |
| கேலிகலை | கலைமகள் கையிலுள்ள வீணை ; பகடிப் பேச்சு . |
| கேவணம் | மணிபதிக்குங் குழி . |
| கேவல் | வள்ளிக்கொடி . |
| கேவலக்கிடை | ஆன்மா ஆணவத்தால் மறைப்புண்டு செயலற்றிருக்கும் நிலை . |
| கேவலக்கிழவன் | அருகக்கடவுள் . |
| கேவலஞானம் | முக்கால் அறிவு . |
| கேவலதிரவியம் | மிளகு . |
| கேவலப்படுத்துதல் | அவமதித்தல் . |
| கேவலப்படுதல் | மெலிதல் . |
| கேவலப்பொருள் | பரப்பிரமம் . |
| கேவலம் | தனிமை ; இணையற்றது ; வீடுபேறு ; சிறுமை ; முக்கால அறிவு ; கீழாலவத்தை ; தாழ்நிலை ; அவமானம் ; சாக்கிரம் ; முதல் துரியாதீதம் வரையுள்ள ஐந்து நிலைகளிலும் கீழ்நோக்கி மூலாதாரத்துக்குச் செல்லும் நிலை . |
| கேவலவுணர்வு | மெய்யறிவு , பரஞானம் . |
| கேவலன் | கைவல்ய பதவியடைய முயல்பவன் ; சாமானியன் . |
| கேவலாவத்தை | கீழாலவத்தை ; காரண கேவலம் ; ஊழி இறுதிக்காலத்தில் ஆன்மாக்கள் ஒடுங்கி படைப்புக்காலமளவும் மறைப்புண்டு யாதொரு நினைவுமின்றி யிருப்பது . |
| கேவலி | கேவல ஞானமுள்ளவன் . |
| கேவு | வெண்கடுகு ; தோணி முதலியவற்றில் ஏற்றுதற்குரிய கூலி . |
| கேவுதல் | மூச்சுத் தீணறுதல் . |
| கேவேடன் | மீன்வலைஞன் . |
| கேழ் | ஒளி ; நிறம் ; ஒப்பு . |
| கேழ்த்த | நிறங்கொண்ட ; மிகுந்த . |
| கேழ்பவர் | நன்மையுடையார் . |
| கேழ்பு | நன்மை . |
| கேழ்வரகு | ஒருவகைத் தவசம் , கேப்பை . |
| கேழல் | நிறம் ; பன்றி ; குளநெல் . |
| கேழற்பன்றி | ஆண்பன்றி . |
| கேள் | உறவு ; நட்பு ; நண்பன் ; கணவன் . |
| கேள்வன் | தலைவன் ; கணவன் ; அன்பன் , தோழன் . |
| கேள்வி | கேட்டல் ; கற்கை ; வினா ; நூற் பொருளைக் கற்றறிந்தவர் ; சொல்வதைக் கேட்டல் ; கல்வி ; சத்தம் ; வேதம் ; நூல் ; சொல் ; அறிக்கை ; விசாரணை ; இசைச்சுருதி ; ஏலம் கேட்டல் ; யாழ் . |
| கேள்விக்காரர் | ஏலங்கேட்போர் ; வேலைக்கு விண்ணப்பஞ் செய்வோர் . |
| கேள்விகேட்பாடு | நியாய விசாரணை . |
| கேள்விகொள்ளுதல் | ஐயங்கொண்டு கேட்டல் . |
| கேள்வித்தானம் | சாதகன் பிறந்த இலக்கினத்திற்கு இரண்டு அல்லது மூன்றாம் இடம் . |
| கேள்விப்படுதல் | பிறர் வாய்மூலமாகச் செய்தி தெரிந்துகொள்ளுதல் . |
| கேள்விப்பந்தர் | பலர் கூடி நூல்கள் கேட்டற்குரிய இடமாக அமைந்த பந்தல் . |
| கேள்விமுறை | நியாய விசாரணை ; கட்டுப்பாடு . |
| கேள்வியாதல் | கேள்வியால் தெரியவருதல் . |
| கேள்விவரி | அரசன் கட்டளைகளைப் பதியும் புத்தகம் . |
| கேளல்கேளிர் | பகையும் நட்புமில்லாத அயலார் . |
| கேளலர் | பகைவர் . |
| கேளன் | தோழன் . |
| கேளா | ஒருபயனுமின்றி . |
| கேளார் | பகைவர் ; செவிடர் . |
| கேளி | மகளிர் விளையாட்டு ; தென்னைவகை . |
| கேளிக்கை | மகளிர் நடனம் ; விளையாட்டு . |
| கேளிதம் | பெரும் பாறைக்கல் . |
| கேளிர் | தோழர் ; உறவினர் . |
| கேளிவிலாசம் | வேடிக்கை விநோதம் . |
| கேனம் | பைத்தியம் ; பத்து உபநிடதத்துள் ஒன்று . |
| கேனவாயன் | பேதை . |
| கேனன் | பைத்தியக்காரன் . |
| கேதுரத்தினம் | வைடூரியம் . |
| கேந்திரம் | வட்டத்தின் நடு ; பிறந்த இலக்கினத்திற்கு ஒன்று , நான்கு , ஏழு அல்லது பத்தாம் இடம் . |
| கேந்திரித்தல் | கிரகம் கேந்திரம் பெற்று நிற்றல் . |
| கேந்துமுறியம் | நாய்வேளைப்பூடு . |
| கேப்பை | காண்க : கேழ்வரகு . |
| கேமாச்சி | வெள்ளைக் காக்கணங்கொடி . |
| கேயம் | இசைத்தற்குரியது ; இசைப்பாட்டு . |
| கேயிகம் | காவிக்கல் . |
| கேயூரம் | தோளணிவகை . |
| கேரண்டம் | காக்கை . |
| கேரளம் | சேரநாடு ; மலையாளமொழி ; வாய் விளங்கம் ; சோதிட சாத்திரத்துள் ஒன்று . |
| கேரளன் | சேரன் ; கேரளநாட்டைச் சேர்ந்தவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 372 | 373 | 374 | 375 | 376 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கேதுரத்தினம் முதல் - கேனன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், விளையாட்டு, கேட்டல், விசாரணை, மகளிர், ஒன்று, பிறந்த, நியாய, இலக்கினத்திற்கு, இடம், கேந்திரம், பகைவர், தோழன், அல்லது, கேப்பை, அறிவு, நிலை, மறைப்புண்டு, பேச்சு, கேவலம், கீழாலவத்தை, சொல், கேழ்வரகு, நிறம், கணவன்

