தமிழ் - தமிழ் அகரமுதலி - குறையலாளி முதல் - கூகனம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| குறையுடல் | தலையற்ற உடல் , முண்டம் . |
| குறையுறவு | மனக்குறை கொண்டிருக்கை |
| குறையுறுதல் | குறைகூறி வேண்டுதல் . |
| குறைவயிறு | குறையாக உண்ட வயிறு . |
| குறைவாளர் | குறைவுடையவர் . |
| குறைவில் | வானவில் . |
| குறைவிலறிவுடைமை | குறைவில்லாத அறிவைக் கொண்டிருக்கின்ற இறைவன் எண்குணத்துள் ஒன்று . |
| குறைவு | குறைபாடு ; குற்றம் ; குறைந்த அளவுள்ளது ; வறுமை ; காரியபலன் . |
| குறைவேண்டுநர் | அனுகூல காரியங்களை விரும்புவோர் . |
| குறோக்கை | குறட்டை . |
| குறோட்டை | காக்கணங்கொடி ; பீச்சுவிளாத்தி . |
| குன்மப்புரட்டு | குன்மத்தால் வாந்தியுண்டாக்கும் வயிற்றுநோய்வகை . |
| குன்மம் | செரிப்பின்மை ; வலி முதலியன காணும் வயிற்றுநோய் : ஒரு படைத்தொகை ; அடர்ந்த தூறு . |
| குன்றக்கூறல் | பத்துவகை நூற்குற்றங்களுள் கூறவேண்டியதைக் குறைவுபடச் சொல்லுகையாகிய குற்றம் . |
| குன்றம் | சிறுமலை . |
| குன்றர் | காண்க : குன்றவர் . |
| குன்றல் | குறைதல் ; கெடுதல் விகாரம் . |
| குன்றவர் | குறிஞ்சிநில மக்கள் . |
| குன்றவாணர் | காண்க : குன்றவர் . |
| குன்றவில்லி | சிவன் . |
| குன்றாவாடை | வடகீழ்காற்று . |
| குன்றி | குன்றிக்கொடி ; குன்றிமணி ; மனோசிலை . |
| குன்றிநிறக்கண்ணன் | குன்றிமணிபோற் சிவந்த கண்ணுடையவன் ; காட்டுப்பன்றி . |
| குன்றிமணி | குன்றிக் கொட்டை , குன்றிக்கொடியின் சிவப்பு விதை ; 4 நெல் அல்லது 1/2 மஞ்சாடி எடையுள்ள பொன் நிறுக்கும் நிறைவகை : அதிமதுரம் . |
| குன்றியறுகரம் | காண்க : குற்றியலுகரம் . |
| குன்றிவேர் | அதிமதுரம் . |
| குன்று | சிறுமலை ; மலை ; குறைவு ; சிறுகுவடு ; சதயநாள் . |
| குன்றுகூப்பிடுதல் | மலையில் எதிரொலியெழக் கூப்பிடுதல் . |
| குன்றுதல் | குறைதல் ; அழிவுறுதல் ; நிலைதாழ்தல் ; எழுத்துக்கெடுதல் ; வாடுதல்: வளர்ச்சியறுதல் . |
| குன்றுபயன் | களவொழுக்கம் . |
| குன்றுவர் | குறிஞ்சிநில மக்கள் ; வேட்டுவர் . |
| குன்றுவாடை | வடமேல்காற்று . |
| குன்றெடுத்தோன் | கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துத் தாங்கிய கண்ணன் . |
| குன்றெறிந்தோன் | கிரவுஞ்சமலையை வேலால் எறிந்தவனான முருகக்கடவுள் . |
| குன்றேந்தி | காண்க : குன்றெடுத்தோன் . |
| குன்னம் | அவமானம் ; பழி . |
| குன்னாத்தல் | குளிரால் உடம்பு கூனிப்போதல் . |
| குனகுதல் | கொஞ்சிப்பேசுதல் . |
| குனட்டம் | அதிவிடயப்பூண்டு . |
| குனாசகம் | சிறுகாஞ்சொறிச்செடி . |
| குனாசம் | குன்றிக்கொடி . |
| குனாபீ | சுழிக்காற்று . |
| குனி | வளைகை ; வில் . |
| குனித்தல் | வளைத்தல் ; ஆடுதல் ; குரல் நடுங்குதல் . |
| குனிதல் | வளைதல் ; வணங்குதல் ; தாழ்தல் ; வீழ்தல் ; இறங்குதல் . |
| குனிப்பு | வளைகை ; ஆடல் ; கூத்துவகை ; குழிப்பு . |
| குனிவு | தாழ்வு ; வளைவு . |
| குனுகுதல் | கொஞ்சிப் பேசுதல் . |
| குனை | கூர்மையான பக்கம் ; நுனி . |
| கூ | ஓர் உயிர்மெய்யெழுத்து (க்+ஊ) ; பூமி ; கூவுதல் ; கூக்குரல் ; கூழ் ; மலங்கழிக்கை . |
| கூக்குரல் | பேரொலி ; முறையிடுதல் ; குழந்தைகள் கத்துவதுபோன்ற 'கூ' வென்னுஞ் சத்தம் . |
| கூக்கேட்டல் | ஏவல் கேட்கை . |
| குறையாற்றல் | காண்க : குறைதீர்த்தல் . |
| குறையிரத்தல் | தன் குறைநீக்க வேண்டல் . |
| கூகம் | கோட்டான் , ஆந்தை , மறைவு . |
| கூகமானம் | மறைபொருள் . |
| கூகனம் | மறைந்த பொருளுடைய சொல் , அவைக்குப் பொருந்தாத மொழி ; மாய்மாலம் . |
| குறையலாளி | குறையல் என்னும் பகுதிக்குத் தலைவரான திருமங்கை மன்னன் . |
| குறையவை | அறிவு குணங்களாற் குறைவு பட்டார் கூடிய சபை . |
| குறையறுத்தல் | குறைநீங்கக் கொடுத்தல் . |
| குறையறுதல் | மனக்குறை நீங்குதல் . |
| குறையாக் கேள்வி | நிரம்பிய அறிவு |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 362 | 363 | 364 | 365 | 366 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறையலாளி முதல் - கூகனம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, குன்றவர், குறைவு, குன்றிமணி, குன்றெடுத்தோன், அதிமதுரம், வளைகை, அறிவு, கூக்குரல், குன்றிக்கொடி, குறிஞ்சிநில, குற்றம், மனக்குறை, சிறுமலை, குறைதல், சொல், மக்கள்

