முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » குஞ்சுச்சிப்பி முதல் - குடங்குதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - குஞ்சுச்சிப்பி முதல் - குடங்குதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| குட்டினி | கற்பழிந்தவள் ; கூட்டிக்கொடுப்பவள் . |
| குட்டு | கைமுட்டியால் தலையில் இடிக்கை ; இரகசியம் ; மானம் ; குட்டநோய் கோஷ்டம் . |
| குட்டுணி | பிறரால் குட்டுண்பவன்(ள்) . |
| குட்டுதல் | கைமுட்டியால் தலையில் குட்டுதல் . |
| குட்டுப்பட்டவன் | ஒரு தொழிலில் இடர்ப்பட்டு அனுபவம் பெற்றவன் . |
| குட்டுப்படுதல் | அடிக்கடி இடறுதல் . |
| குட்டுவன் | குட்டநாட்டிலுள்ளவன் ; சேரன் . |
| குட்டேறு | சிறு காளை ; எருத்துத் திமில் , மாட்டுக் கொண்டை . |
| குட்டை | குள்ளம் ; குறுகிய உருவம் ; சிறு குளம் ; குறுணி ; குட்டைமரம் ; வெள்ளைக்குட்டம் . |
| குட்டைமரம் | தொழுமரம் . |
| குட்டையாடு | பள்ளையாடு . |
| குட்டையிலடித்தல் | தொழுமரத்தில் கட்டியடித்தல் . |
| குட | வளைந்த . |
| குடக்கம் | வளைவு . |
| குடக்கனி | பலாப்பழம் . |
| குடக்கால் | குடம் போன்ற விளக்குத் தண்டு . |
| குடக்கி | வளைவானது . |
| குடக்கியன் | கூனன் . |
| குடக்கினி | காசுக்கட்டி ; கருங்காலிமரம் . |
| குடக்கு | மேற்கு . |
| குடக்குழி | நீர்க்குண்டு . |
| குடக்கூத்து | தன் பேரனாகிய அநிருத்தனை வாணன் சிறைப்படுத்த அவனது நகரவீதியில் சென்று கண்ணன் குடமெடுத்தாடிய கூத்து . |
| குடக்கூலி | காண்க : குடிக்கூலி . |
| குடக்கோ | சேரன் . |
| குடக்கோன் | சேரன் . |
| குடகச்செலவு | யாழில் இசைபட வாசிக்கும் வகையுள் ஒன்று . |
| குடகம் | மேற்கு ; தமிழ்நாட்டின் மேல்பாலுள்ள நாடு ; குடகுமலை ; கோளகபாடாணம் . |
| குடகரம் | உத்தாமணிக்கொடி , வேலிப்பருத்தி . |
| குடகன் | சேரன் ; மேல்நாட்டன் . |
| குடகாற்று | மேல்காற்று . |
| குடங்கர் | குடம் ; கும்பராசி ; குடிசை . |
| குடங்கவிழ்தல் | காண்க : குடஞ்சாய்தல் . |
| குடங்குல் | மடி . |
| குடங்குதல் | வளைதல் . |
| குஞ்சுச்சிப்பி | முற்றாத முத்துச்சிப்பி . |
| குஞ்சு நறுக்குதல் | காண்க : சுன்னத்துச்செய்தல் . |
| குஞ்சுப்பெட்டி | காண்க : குஞ்சுக்கடகம் . |
| குஞ்சுபொரித்தல் | முட்டையினின்று குஞ்சினை வெளிவிடுதல் . |
| குஞ்சுரம் | குன்றிமணி . |
| குஞ்சுறை | பறவைக்கூடு . |
| குஞ்சை | நெய்வோர் பாவில் தேய்க்கும் குஞ்சம் . |
| குட்சி | வயிறு ; ஒற்றைத் தாயம் . |
| குட்டநாசனம் | வெண்கடுகு . |
| குட்டநாடு | திருவாங்கூர்ப் பகுதியைச் சேர்ந்ததும் கோட்டயம் , கொல்லம் என்னும் நகரங்களைக் கொண்டதும் , மிகுதியான ஏரிகளை உடையதுமான ஒரு கொடுந்தமிழ் நாடு . |
| குட்டம் | ஆழம் ; குளம் ; மடு ; குட்டநாடு ; பரப்பிடம் ; திரள் ; சபை ; குரங்குக்குட்டி ; குறைந்த சீருள்ள அடி ; தரவு ; தொழுநோய் . |
| குட்டமிடுதல் | பள்ளந்தோண்டுதல் . |
| குட்டரி | மலை . |
| குட்டன் | சிறுபிள்ளை ; ஆட்டுக்குட்டி ; விலங்கின் குட்டி . |
| குட்டான் | சிறு ஓலைப்பெட்டி . |
| குட்டி | ஆடு ; கீரி ; குதிரை ; நரி ; நாய் ; பன்றி ; புலி , பூனை முதலியவற்றின் குட்டி ; விலங்கின்பிள்ளைப் பொது ; சிறுமை ; சிறு பெண் ; கடைசி மகன் ; பல்லாங்குழி முதலிய விளையாட்டில் அதிகமாகக் கூடுங் காய் ; ஆதாயம் ; காக்கைப்பலா ; கடிச்சை ; வாழைக் கன்று . |
| குட்டிக்கரணம் | தலைகீழாகப் புரளும் வித்தை ; பெருமுயற்சி . |
| குட்டிக்கலகம் | சிறுகலகம் ; கோட்சொல்லலால் விளையுங் கலகம் . |
| குட்டிக்கும்பிடுதல் | தலையிற் குட்டிக்கொண்டு விநாயகரை வணங்குகை . |
| குட்டிக்கொக்கான் | சிறு கற்களைக்கொண்டு ஆடும் விளையாட்டுவகை . |
| குட்டிச்சாத்தான் | குறளித்தேவதை . |
| குட்டிச்சுவர் | இடிந்த சிறுசுவர் ; பாழ்மனை ; பழுது . |
| குட்டிச்சுவராய்ப்போதல் | கெட்டுப்போதல் . |
| குட்டிப்பிடவம் | ஒரு மரவகை . |
| குட்டிபோடுதல் | விலங்கு குட்டி ஈனுதல் ; விளையாட்டில் அதிகப் பந்தயம் இறுத்தல் . |
| குட்டிமம் | கல் பதித்த தரை . |
| குட்டியம் | சுவர் ; மேடை . |
| குட்டியிடுக்கி | சிற்றரத்தைச் செடி ; பயிருடன் முளைக்கும் ஒரு புல் ; கோஷ்டம் , ஒருவகைச் செடி . |
| குட்டியிடுதல் | விலங்கு முதலியன குட்டி போடுதல் . |
| குட்டிவிரல் | கால் கைகளில் ஐந்துக்கு அதிகமாயுள்ள விரல் . |
| குட்டிவைத்தல் | விளையாட்டில் தவறான காயை அடித்தல் ; சூதில் பந்தயம் இழத்தல் . |
| குட்டினம் | கருஞ்சீரகம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 335 | 336 | 337 | 338 | 339 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குஞ்சுச்சிப்பி முதல் - குடங்குதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சிறு, குட்டி, காண்க, சேரன், விளையாட்டில், நாடு, குட்டநாடு, செடி, விலங்கு, பந்தயம், குடம், கோஷ்டம், தலையில், குட்டுதல், குளம், கைமுட்டியால், குட்டைமரம், மேற்கு

