தமிழ் - தமிழ் அகரமுதலி - காரம் முதல் - காரியப்படுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| காராம்பசு | நாக்கும் முலைக்காம்பும் கருநிறமாக உள்ள பசு இனம் . |
| காராம்பி | எருது பூட்டி நீரிறைக்கும் கருவிவகை . |
| காராமணி | ஒருவகைப் பயறு , பெரும்பயறு . |
| காராளர் | வேளாளர் ; வணிகர் ; முற்காலத்திருந்த ஒரு முருட்டுச் சாதியார் ; தென்னார்க்காட்டு மாவட்டத்திலுள்ள மலைவாழ்நரான ஒரு வேடச்சாதியார் . |
| காரான் | எருமை ; கருநிறப் பசு . |
| காரானை | மேகம் . |
| காரி | கருமை ; கருநிறம் உடையது ; கரிக்குருவி ; காகம் ; சனி ; நஞ்சு ; கரிய எருது ; காரீயம் ; வாசுதேவன் ; ஐயனார் ; வயிரவன் ; இந்திரன் ; கடையெழு வள்ளல்களுள் ஒருவன் ; காரி நாயனார் ; ஓர் ஆறு ; ஆவிரைச் செடி ; கண்டங்கத்திரி ; செய்பவன் ; பதினாறு படியளவு ; வெண்காரம் ; காரி வள்ளலின் குதிரை ; களர் ; முதுநிலம் ; கீழ்மகன் ; தொழிற்சாலை . |
| காரிக்கன் | வெளுக்காத வெள்ளைத்துணி . |
| காரிக்குதிரை | கருநிறக் குதிரை ; ஐயனாரது குதிரை . |
| காரிக்கூன் | ஒருவகைக் காளான் . |
| காரிகம் | காரகம் ; மேகநோய் ; வாதனை ; காவிக்கல் . |
| காரிகை | பெண் ; அழகு ; அலங்காரம் ; கட்டளைக் கலித்துறை ; ஓர் யாப்பிலக்கண நூல் ; ஒரு நிறை ; வாதனை . |
| காரிப்பிள்ளை | கரிக்குருவி . |
| காரிப்புள் | கரிக்குருவி . |
| காரிமை | கொடிவேலி . |
| காரியக்காரன் | செயலாளன் ; ஊரதிகாரியின் பதிலாள் ; வேலையில் திறமையுள்ளவன் ; தன்னலம் நாடுவோன் . |
| காரியக்கெட்டி | திறமையாளன் , தொழிலில் வல்லவன் ; வேலைத்திறம் . |
| காரியகர்த்தா | தொழில் நடத்துவோன் ; மேலதிகாரி . |
| காரியகரம் | பயனுடைய செயல் . |
| காரியகாரன் | காரியத்தலைவன் ; காரியம் பார்ப்போன் . |
| காரியகுரு | பொருளுக்காகக் கற்பிக்கும் ஆசிரியன் . |
| காரியகேவலம் | உடலத்தைப் பெற்ற ஆன்மா ஐம்புல நுகர்ச்சி நீங்கி இளைப்பாறும் பொருட்டு மூலாதாரத்தில் ஒடுங்கிக்கிடக்கும் நிலை . |
| காரியசகலம் | உடலத்தைப் பெற்ற ஆன்மா தொழிற்பட்டு ஐம்புலன்களை நுகரும் நிலை . |
| காரியசாதகம் | காரியத்தைச் சிந்திக்கச்செய்வது . |
| காரியசாதனம் | துணைக்கருவி . |
| காரியசித்தி | காரியானுகூலம் , செயல் முடித்தல் . |
| காரியசுத்தம் | உடலைப் பெற்ற ஆன்மா ஒழுக்கமும் செயற்படுமின்றி இறைவன் திருவடியை நினைந்துசெல்லும் நிலை . |
| காரியஞ்செலுத்துதல் | தொழில் நடத்துதல் . |
| காரியத்தடை | தொடங்கிய செயலுக்கு நேரும் இடையூறு . |
| காரியத்தலைவன் | மேலதிகாரி . |
| காரியத்தவறு | விரும்பியது கைகூடாமை ; செயற்கேடு . |
| காரியத்தன் | காண்க : காரியகாரன் . |
| காரியத்தாழ்ச்சி | செயல் கைகூடாமை . |
| காரியத்துக்குவருதல் | பயன்படுதல் . |
| காரியத்தை மடித்தல் | குதர்க்கம் பேசுதல் . |
| காரியத்தோன் | செயல் பார்க்கும் அதிகாரி . |
| காரியதரிசி | ஒரு சபையின் செயல்களை நடத்தி வைப்பவன் . |
| காரியதுரந்தரன் | செயற்பொறுப்பு வகித்தலில் வல்லவன் . |
| காரியப்படுதல் | தொழிற்படுதல் ; கைகூடுதல் . |
| காரம் | உறைப்பு ; கார்ப்புப்பு ; சாம்பலுப்பு ; சீலையின் அழுக்குவாங்குங் காரம் ; சாயமிடுங்காரம் ; வெண்காரம் ; அக்கரகாரம் ; அழிவு ; திருநீறு ; சினம் ; மரவயிரம் ; எழுத்தின்சாரியை ; பொன் ; தொழில் ; உறுதி ; வலிமை ; முயற்சி . |
| காரம்போடுதல் | ஆடை முதலியவற்றிற்குக் காரம்வைத்தல் ; உணவுப்பொருளுக்குக் காரஞ்சேர்த்தல் . |
| காரமருந்து | மகப்பெற்ற பெண்களுக்குக் கொடுக்குங் காயமருந்து ; தோலை எரித்துத் தின்னும் மருந்து . |
| காரர் | அச்சமுள்ளோர் ; செய்வோர் . |
| காரல் | ஒருமீன் ; காறல் ; தொண்டையில் உண்டாகும் கறகறப்பு . |
| காரவல்லி | பாகற்காய் . |
| காரளத்தல் | நெல்லளத்தல் . |
| காரறிவு | மயக்கம் பொருந்திய அறிவு . |
| காரறுத்தல் | கார்நெற்பயிரை அறுவடை செய்தல் . |
| காரன் | உரியவன் ; செய்வோன் ; ஆண்பாற் பெயர் விகுதி ; சோரபாடாணம் . |
| காரா | எருமை ; கருநிறப் பசு . |
| காராகிரகம் | சிறைச்சாலை . |
| காராஞ்சி | நீர் இறைக்கும் ஒருவகைக் கருவி . |
| காராடு | வெள்ளாடு . |
| காராண்மை | நிலத்தைப் பயிரிடுங் குடியுரிமை ; ஒரு பழைய வரி . |
| காராப்பூந்தி | ஒருவகைத் தின்பண்டம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 313 | 314 | 315 | 316 | 317 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காரம் முதல் - காரியப்படுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், செயல், பெற்ற, ஆன்மா, நிலை, குதிரை, தொழில், காரி, கரிக்குருவி, உடலத்தைப், கருநிறப், எருமை, காரம், கைகூடாமை, காரியத்தலைவன், காரியகாரன், வாதனை, ஒருவகைக், வல்லவன், எருது, மேலதிகாரி, வெண்காரம்

