புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 181
உடலுயிர்க்கு மூன்றாமிடத் ததிபன் மந்தன் |
மேலும் ஒரு கருத்தைச் சொல்லுகிறேன் கேட்பாயாக! உடலுக்கு அதிபதியாகிய சந்திரனும், உயிருக்கு அதிபதி யாகிய இலக்கினாதிபதியும் ஆகிய இவர்களுக்கு மூன்றாம் இடத்ததிபதி யாரோ அவனும், சனிபகவானும், உடன்கூடி ஒரே ராசியில் நிற்பாரேயாகில் பலமுடைய அவர்களது திசாபுத்திகள் நடைபெறும்போது நஞ்சு தின்று அதனால் அச்சாதகன் உயிர் சேதமாகும். மற்றும் படவரவான பாம்பு இராகுவுடனே ஈன கிரகங்கள் கூடினால் இவன் சுருக்கு மாட்டித் தற்கொலை செய்து கொள்வான். இதனையும் குறிப்பாக வினயமுடன் போகரது கருணாகடாட்சத்தால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 179 | 180 | 181 | 182 | 183 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 181 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -