மருதகாசி பாடல்கள் - பக்கம் - 161

நான் சொல்லும் ரகசியம் கண் காணும் அதிசயம் நன்றாக எண்ணிப் பாருங்க இதை அவசியம்-அவசியம்-அவசியம். (நான்) உணவுக்கு ஒரு கும்பல் போராடும் வேளையில் பதவிக்கு ஒரு கும்பல் போராட்டம் நடத்துது! ஒய்வில்லா வேலையால் உசுரை விடும் ஏழையின் உழைப்பாலே ஒரு கும்பல் உல்லாசம் தேடுது! (நான்) கல்யாணம் செய்யவே சிங்காரப் பந்தலும் கச்சேரி சதுராட்டம் ஊர்வலமும் வேணுமா?-இவை இல்லாமல் எவரேனும் கல்யாணம் பண்ணினால் இன்பசுகம் பிள்ளை குட்டி இல்லாமல் போகுமா! (நான்) தங்க நகை வைர நகை சரஞ்சரமாய் தொங்கினால் மங்காத அழகு வரும் என்று எண்ணும் பெண்களே! பங்கம் வரும் திருடர்களும் பார்த்து விட்டால் இவைகளைப் பறித்திடுவார் அப்பொழுது கலங்காதோ கண்களே! |
நான் சொல்லும் ரகசியம்-1959
இசை: G. ராமநாதன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 159 | 160 | 161 | 162 | 163 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 161 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - நான், கும்பல், அவசியம்