வேலூர் - தமிழக மாவட்டங்கள்
அருங்காட்சியகம்
அரசு அருங்காட்சியகம் கோட்டையின் உள்ளே அமைந்துள்ளது. பொது மக்களுக்காக 1985 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. எல்லா வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். இதனுள் தொல்லியல் கலைப்பொருட்கள், வரலாற்றுக்கு முந்தைய ஆயுதங்கள், சிற்பங்கள், வெண்கல சிற்பங்கள், மர சிற்பங்கள், கைவினைப் பொருட்கள், நாணயங்கள், தாவரவியல்,
அருங்காட்சியகம் |
இங்குள்ள படக்காட்சியகத்தில் வட ஆற்காடு மாவட்டம் தொடர்பான வரலாற்று நினைவு சின்னங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தந்தத்தால் செய்யப்பட்ட சதுரங்கப் பலகை, இலங்கை நாணயங்கள், பல்லவ மற்றும் விஜயநகர காலத்தைய கற்சிற்பங்கள் முதலியன சிறப்பம்சங்களாகும். ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் படித்தல் போன்ற கலைசார் கல்வி நடவடிக்கைகளும் இங்கு மேற் கொள்ளப்படுகின்றன.
அமிர்தி உயிரியல் பூங்கா
அமிர்தி உயிரியல் பூங்கா |
நீர்வீழ்ச்சியில் பருவமழை காலங்களில் நீரின் வீழ்ச்சி கண்களைக் கொள்ளை கொள்ளும். சுற்றுலாப் பயணிகளின் வருகை விடுமுறை நாள்களில் மட்டும் அதிகமாக உள்ளது. இவ்வன விலங்குப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், நரிகள், குரங்குகள், சிவப்பு தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள்,மயில்கள்,முதலைகள்,காட்டுப் பூனைகள்,கழுகுகள், வாத்துகள்,புறாக்கள்,காட்டுக் கிளிகள்,முயல்கள், மற்றும் மலைப்பாம்புகள் முதலியன வாழ்ந்து பூங்காவை அழகாக்குகின்றன
சிறப்புச் செய்திகள் :
ஆசியாவிலேயே புகழ் பெற்ற சி.எம்.சி. மருத்துவமனை; உலகச் சிறப்புமிக்க எஸ்.எல்.ஆர். மற்றும் டி.சி. தொழுநோய் ஆய்வு மையம், கரிகிரி; ஆசியாவிலேயே மிகப் பெரிய தொலை நோக்கிமையம், காவனுர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேலூர் - Vellore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - வேலூர், உயிரியல், அமிர்தி, tamilnadu, மாவட்டங்கள், அருங்காட்சியகம், தமிழக, பூங்கா, சிற்பங்கள், தமிழ்நாட்டுத், தகவல்கள், vellore, districts, காணப்படுகிறது, கிளிகள், | , ஆசியாவிலேயே, பூங்காவில், முதலியன, தொல்லியல், அமைந்துள்ளது, பொருட்கள், நாணயங்கள், விலங்கியல், தாவரவியல், information