தென் ஆப்ரிக்காவில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
தமிழர் குடியேறிய வரலாறு
இருப்பிடம் :
ஆப்ரிக்கக் கண்டத்தின் தெற்கு முனையிலே இருக்கும் நாடு தென் ஆப்ரிக்காவாகும். இதை 4 மாநிலமாகப் பிரித்துள்ளனர் (அ) கேப் மாநிலம் (ஆ) விடுதலை பெற்ற ஆரஞ்சு நாடு (இ) நேட்டால் (ஈ)திரான்சுவேல். தென் ஆப்ரிக்காவில் உள்ள நான்கு முக்கிய நகரங்கள் : ஜோஹோனெஸ்பெர்க், கேப்டவுன், டர்பன், பிரிட்டோரியா முதலியவை ஆகும்.
1860-66 ஆண்டுகளில் 5448 இந்தியர்கள் நேட்டாலுக்கு வந்தார்கள். 1911-ஆம் ஆண்டளவில் 1,42,670 இந்தியர்கள் தென் ஆப்ரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டனர். 1860-1911 ஆம் ஆண்டுகளுக்கிடையே 1,52,182 பேர் இந்தியாவிலிருந்து வந்தார்கள் எனப்பேராசிரியர் சுரேந்திரபான் கூறுகிறார். இவர்களில் மூன்றில் 2 பங்கு பேர் தமிழர்களும், தெலுங்கர்களும் ஆவர். இவர்கள் அனைவரும் இங்குள்ள கரும்புத் தோட்டங்களில் பணி புரிந்தனர். 1893 இல் புதிய சட்டம் வந்தது. இச்சட்டம், தொழில் முறைக் கட்டுப்பாடு ஒப்பந்தம் முடிந்த பின்பும் தொடர்ந்து நிலையாகத் தென் ஆப்ரிக்காவிலே வாழும் இந்தியர்கள் ஆண்டிற்கு 3 பிரிட்டீஷ் பவுண்டு வரிசெலுத்த வேண்டும் என்றது. இந்தியர்களுக்கு ஓட்டளிக்கும் உரிமை கிடையாது என 1894 இல் சட்டம் வந்தது. காந்திஜி தலைமையில் இச்சட்டத்தை எதிர்த்து போராடினர். வெற்றி கிடைத்த போதிலும் பழைய நிலைமையே நீடித்தது.
ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு இந்தியர்கள் போகக் கூடாது என்ற சட்டம் 1913 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியத் திருமணம் செல்லுபடியாகாது என்ற சட்டம் கொண்டுவரப்பட்ட போது, நேட்டாலில் காந்திஜி கரும்புத் தோட்டத் தொழிலார்களுடன் இணைந்து வேலை நிறுத்தம் செய்தார். பலர் கைது செய்யப்பட்டனர். தில்லையாடியைச் (தமிழ்நாடு) சேர்ந்த வள்ளியம்மாள் எனும் 16 வயது பெண் சிறையில் இறந்து போனாள். காந்திஜியின் அறப்போரில் பி.கே.கவுண்டன், தம்பி நாயுடு எனும் தமிழர்கள் தீவிரமாகப் பங்கேற்றனர். போராட்டத்தின் பயனாக வரிசெலுத்த வேண்டும் என்ற சட்டம் ஒழிந்தது.
கப்பல்களிலுள்ள பதிவேடுகளின் வழி இவர்களில் பெரும்பாலோர் பறையர், வன்னியர், வெள்ளாளர் சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என அறிகிறோம். ஆற்காடு, செங்கல்பட்டு, சித்தூர், சென்னை, வேலூர் மாவட்டங்களிலிருந்து மிகுதியாக தமிழர்கள் வந்தார்கள். பிற மாவட்டங்களில் கோயமுத்தூர், காஞ்சிபுரம், கடலூர், மதுரை, மதுராந்தகம், மைசூர், நெல்லூர், போரூர், சேலம், சைதாப்பேட்டை, தஞ்சாவூர், திருச்சிராபள்ளி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளிலிருந்தும் தமிழர்கள் வந்தார்கள்; இப்பதிவேடுகளில் வழக்கமாக அடிக்கடிவரும் பெயர்கள்: அருணாசலன், சின்னசாமி, செங்காடு, கோவிந்தன், குப்பன், முனிசாமி, முனியன், முருகன், பெருமாள், ராமசாமி, ரங்கசாமி, வீராசாமி, வெங்கடாசலம், வேங்கடசாமி.
1900 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்த தொழிலாளிகளின் சந்ததிகள் நகரப்புறத்திலுள்ள அரசு சிவில் பணிகளிலும், தொழிற்சாலைகளிலும் பணிபுரியத் தொடங்கினர். 1944-ஆம் ஆண்டு டிரான்ஸ்வேல், நேட்டால் பகுதிகளில் இந்தியர்களுக்கு என்று தனியிடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடங்களில் மட்டும்தான் இந்தியர்கள் வீடுகளையும் நிலங்களையும் வாங்கலாம். தேர்தலில் கருப்பர்களும், வெள்ளையர்களும் இந்தியர்களைப் பகடைக்காயாக்கி விளையாடினர். பிற்காலத்தில் நகராட்சி அளவிலான உரிமைகள் கொடுக்கப்பட்டன.
தமிழரின் இன்றைய நிலை
1980 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழர்கள் 2,96,000 பேர் இருந்துள்ளனர். மொத்த இந்திய மக்கள் தொகையில் 37% விழுக்காடு தமிழர்கள் இருந்தனர்.
சமயம் :
தமிழர் குடியேறிய மற்ற நாடுகளைவிட தென்னாப்பிரிக்காவில் கோவில்கள் அதிகம். தென் ஆப்ரிக்கத் தமிழர்களில் பெரும்பான்மையோர் சிவவழிபாடு செய்பவர்கள்.
இடம் | கோயில் |
1. உம்பிலோதென்கரை | ஸ்ரீ சுப்ரமணியர் ஆலையம் |
2. மவுண்ட் எட்சி கோம்பு | எம்பெருமானார் ஆலையம் |
3. சாம்ட் சென் சாலை | கட்டுக்குடியிருப்புக்கள் கோயில்(Magazine Barracks Temple) |
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தென் ஆப்ரிக்காவில் தமிழர் - Tamils in South Africa - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், தென், வாழும், தமிழர்கள், சட்டம், இந்தியர்கள், ஆப்ரிக்காவில், நாடுகள், வந்தார்கள், தகவல்கள், தமிழ்நாட்டுத், பேர், ஆண்டு, வரிசெலுத்த, வந்தது, வேண்டும், எனும், ஆலையம், | , கோயில், மக்கள், காந்திஜி, இந்தியர்களுக்கு, நேட்டால், tamil, persons, africa, south, tamils, living, countries, நாடு, இவர்களில், குடியேறிய, information, tamilnadu, கரும்புத்