தென் ஆப்ரிக்காவில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
1984-ஆம் ஆண்டைத் தமிழ்க் கல்வி வளர்ச்சியின் முக்கிய ஆண்டாகக் கருதலாம்.
எல்லாப்பள்ளிக் கூடங்களிலும் தமிழும், மேலும் நான்கு இந்திய மொழிகளும்
கற்றுத்தரப்பட வேண்டும்
என அரசு அறிவித்தது. டர்பனில் இதன் பயனாக 4,300 மாணவர்கள் தமிழ் படிக்க முன் வந்தனர்.
தொடக்க நிலையானதால் தற்போது இரண்டாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை தமிழ்க்
கற்றுத் தரப்படுகிறது. தேவையான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. 90 முதல்
நிலைப்பள்ளிகளிலும் 4 உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் 1984 ஆம் ஆண்டிலிருந்து கற்றுத்
தரப்படுகிறது.
தென்னாப்பிரிக்கக் கல்வி அமைச்சு தமிழ் மொழி பாடத்திட்டத்தை வெளியிட்டது. அதன் குறிக்கோள்கள் ஐந்தாம் வகுப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் எளிதாக தமிழ் மொழி படிக்கும் திறனைப் பெற்றுவிட வேண்டும். எளிமையான செய்யுள் பிற பாடல்களை எளிமையான உரைநடை முதலியவற்றைப் புரிந்து கொள்ளும் திறனைப் பெற்றுவிட வேண்டும். தவறில்லாமல் எழுதுதல், பேசுதல் போன்ற திறன்களைப் பெற்றுவிட வேண்டும். தமிழ் இலக்கியம், வரலாறு முதலியவைகளைப் படித்து தமிழ்ப் பண்பாட்டை புரிந்து கொள்ளும் திறனைப் பெற்றுவிட வேண்டும் என்கிறது.
அமைப்புகள் :
அ) நேட்டால் தமிழ் வேதக் கழகம் (Natal Tamil Vedic Society) :
இது தொடங்கப்பட்டு 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. தமிழ் பண்பாட்டின் பாதுகாவலனாக இக்கழகம் பணியாற்றி வருகிறது. தமிழ்ப்பாட நூல்கள், தமிழ் மொழி எழுத்துத் தொகுதிகள் நிறைந்துள்ள அட்டைகள், மாணவர் பெயர் பதிவேடுகள், சாக்பீஸ் போன்ற பல்வேறு பொருள்களை டர்பன் நகரில் உள்ள பள்ளிகளுக்கும் கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகளுக்கும் நேட்டால் தமிழ் வேதக் கழகம் இலவசமாக அளிக்கிறது. இக்கழகம் வெளியிட்டுள்ளவை :
1. Nursery Rhymes by Natal Tamil Vedic Society
2. Easy way to Tamil by Tamil vedic society.
3. Sivam Arul Thirattu by Tamil Vedic Society.
4. Adippadai Ilakkanam by Tamil Vedic Society.
ஆ) மியர் பாங்குத் தமிழ்ப் பாடசாலை சபை :
1936-இல் தோற்றுவிக்கப்பட்ட மியர் பாங்க் தமிழ்ப்பாட சாலை சபை (Merebank Tamil Society) தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு வளர்ச்சிக்காக சிறப்பாக பாடுபடுகிறது. தேவையான நிதி திரட்டுவதில் கடந்த பத்து ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கிறது. 1988 ஆம் ஆண்டு இறுதியில் 5 தமிழ் மாணவர்களுக்கு உதவித் தொகை அளித்து தமிழ் நாட்டிற்கு அனுப்பி தமிழ் மொழி, தமிழ் பண்பாடு கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்வதாக அறிக்கை வெளியிட்டது.
பிற சங்கங்கள் வருமாறு:
1. தென் ஆப்பிரிக்கா அருட்பா கழகம்
2. தமிழ் இசைக் கழகம்
3. வைதீக சைவக் கழகம்
4. தமிழ் மன்றக் கழகம்
5. சைவ சித்தாந்தக் கழகம்
6. திருக்குறள் கழகம்
7. பிரிட்டோரியாத் தமிழர் கழகம்
8. தெய்வ நெறிக் கழகம்
9. ஆரிய சமாஜம்
10. இராம கிருஷ்ணா சங்கம்
11. தென்னாப்பிரிக்க தமிழர் கூட்டமைப்பு கழகம்
12. அருட்பா மாதர் கழகம்-பே வியூ
13. பெனோனி தமிழ்ப்பள்ளிக்குழு
14. கிளேர் எஸ்டேட் மாதர் சங்கம்
15. தென் ஆப்பிரிக்கத் திராவிட சங்கம்
16. ஹ’ந்து மகாசபா
17. இசிபிங்கோ பீச் அருட்பா கழகம்
18. நார்த்டேல் சிவ ஞான சபா.
19. லெனாசியா தமிழ்க் கூட்டிணைக் கழகம்
20. ஓம் சாந்தி பண்பாட்டு நிலையம்
21. இராமலிங்க அடிகள் மாதம் சங்கம்
22. சமரசக் கழகம்
23. சாதி சன்மார்க்க சங்கம்
24. சல்கிராஸ் தமிழ் சமுதாயம்
25. தென் ஆப்பிரிக்க சிவஞானசபை
26. திரன்சுவேல் தமிழ் கூட்டிணைக் கழகம்
27. வெய்பாய் தமிழ்ச் சங்கம்
28. ஸ்டாங்கர் செந்தமிழ் நிறுவனம்
டர்பனில் 1910-ஆம் ஆண்டு சைவசித்தாந்த சங்கத்தை அமைத்தவர் சிவ சுப்பிரமணி சுவாமிகள். இச்சங்கத்திற்கு 100 கிளைகள் உண்டு. தமிழ் பேசும் தமிழர்களால் அமைக்கப்பட்ட பெரிய அமைப்பு: 'தென்னாப்பிரிக்கத் தமிழர் கூட்டிணைப்புக் கழகம்' என்பது தான். இப்போது எல்லா சங்கங்களையும் இணைத்து 'தேசிய தென்னாப்பிரிக்கத் தமிழர் பேரவை' உருவாக இருக்கிறது.
வணிகம்/தொழில் புரிவோர் விபரம்
1970 ஆம் ஆண்டுப் புள்ளி விபரப்படி 35.3 விழுக்காடு இந்தியத் தொழிலாளர்கள் ஆக்கத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். 28.4 விழுக்காட்டினர் வாணிபத்திலும்; 12.9 விழுக்காட்டினர் அரசுப் பணித்துறையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். வாணிபப் பொறுப்பேற்புப் பணியில் இந்தியர்கள் சொந்தமாக வைத்துக் கொண்டிருப்பது 1961-இல் 187 லிருந்து 1970-768 ஆக அதிகரித்துள்ளது. தொழில் துறையில் நேட்டால் மாநிலத்தில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை 1961-இல் 32,000 லிருந்து 1970 -இல் 67,000 ஆக அதிகரித்தது. இதுதவிர கடல், நில, வான் படைத்துறைகளிலும் காவல்துறைகளிலும், அஞ்சல் சார்ந்த துறைகளிலும் சட்டத்துறைகளிலும் தமிழர்கள் திறமையுடன் பணிபுரிகின்றனர்.
தொகுப்பு : ப. திருநாவுக்கரவு
பார்வை நூல்கள் :
1. அயல் நாடுகளில் தமிழர் - எஸ். நாகராஜன்
2. Mr. K.M. Naidu. Fiar LMX, Aug 1974.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தென் ஆப்ரிக்காவில் தமிழர் - Tamils in South Africa - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழ், கழகம், தமிழர், tamil, தென், society, சங்கம், vedic, மொழி, வேண்டும், ஆப்ரிக்காவில், நாடுகள், வாழும், பெற்றுவிட, திறனைப், தமிழ்க், அருட்பா, தமிழ்நாட்டுத், நேட்டால், தகவல்கள், தமிழ்ப், natal, லிருந்து, இக்கழகம், தமிழ்ப்பாட, | , பள்ளிகளுக்கும், ஆண்டு, தொழில், மாதர், கூட்டிணைக், பண்பாடு, மியர், நூல்கள், உள்ள, தென்னாப்பிரிக்கத், விழுக்காட்டினர், படித்து, countries, tamilnadu, information, கல்வி, living, persons, tamils, south, africa, டர்பனில், மாணவர்கள், எளிமையான, புரிந்து, கொள்ளும், வெளியிட்டது, தேவையான, ஐந்தாம், கற்றுத், தரப்படுகிறது, வேதக்