விலங்கியல் :: கால்நடை மருத்துவம்
31. லெப்டோஸ்பைரா நோய் என்றால் என்ன?
கால்நடைக்கு லெப்டோஸ்பைரா என்னும் குச்சிவடிவ உயிரியினால் ஏற்படும் கொடிய தொற்றுநோய். துப்புரவற்ற நீர் மூலமும் உணவு மூலமும் பரவுவது. இதன் அறிகுறிகள் குருதிச் சோகை, கல்லீரலும் சிறுநீரகமும் சிதைதல், மஞ்சட்காமாலை, கருச்சிதைவு. இந்நோய் மனிதரிடத்து ஏற்படுமானால் தசைவலியும், காய்ச்சலும் விழி வெண்படல அழற்சியும் ஏற்படும்.
32. புருசெல்லா நோய் என்றால் என்ன?
உலக அளவில் கால்நடைகளிடம் காணப்படும் இனப்பெருக்க நோய். நச்சுயிரியால் ஏற்படுவது. அதன் பெயர் புருசெல்லா. ஆகவே இந்நோயும் புருசெல்லா என்று பெயர் பெறுகிறது. புருசெல்லா B பேரினத்தில் நான்கு சிறப்பினங்கள் உள்ளன. காற்று மூலம் பரவுவது. அடிக்கடி புணர்ச்சி வாயிலாகவும் பரவுவது. கால்நடை களின் இது கருச்சிதைவை உண்டாக்கும். தங்கும் நஞ்சுக்கொடி, பெருகுவதில் கடினம், இன வளமின்மை ஆகியவை அறிகுறிகள்.
33. அஸ்பர்ஜில்லஸ் நோய் என்றால் என்ன?
அஸ்பர் ஜில்லஸ் என்னும் பூஞ்சையினால் கால்நடைக்கு ஏற்படும் நோய்.
34. ஒட்டுண்ணி நோய்களின் வகைகள் யாவை?
1. உள் ஒட்டுண்ணி நோய்கள் - நாடாப் புழு, வட்டப்புழு முதலியவற்றால் ஏற்படுவது.
2. புற ஒட்டுண்ணி நோய்கள் - உண்ணிகள், தெள்ளுப் பூச்சிகள், ஈக்கள், கொசுக்கள் முதலியவற்றால் ஏற்படுவது.
35. விலங்குகளிடம் தொற்றா நோய்களுக்குக் காரணிகள் யாவை?
1. ஊட்டக் குறை
2. வளர்சிதை மாற்றக் கோளாறுகள்
3. நச்சுகள்
4.புண்கள்
5. கட்டிகள்.
36. கால்நடை மருத்துவக் கல்வியைப் வளர்ப்பவை யாவை?
1. கால்நடை மருத்துவக் கல்லூரிகள்
2. கால்நடை மருத்துவ மனைகள்
3. கால்நடை மருத்துவப் பல்கலைகழகம். (தமிழ் நாடு)
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கால்நடை மருத்துவம் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கால்நடை, நோய், புருசெல்லா, ஒட்டுண்ணி, யாவை, ஏற்படுவது, பரவுவது, என்றால், என்ன, ஏற்படும்