விலங்கியல் :: கால்நடை மருத்துவம்
11. கால்நடை நோய்களால் ஏற்படும் தீமைகள் யாவை?
1. உணவு உற்பத்தி குறைதல்.
2. நோய்கண்ட விலங்குகளைப் பயன்படுத்த முடியாது.
3. ஒட்டண்ணி நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் கம்பளம் மட்டமாக இருக்கும்.
4. கோமாரி ஏற்படும் பசுக்கள் பால் குறைவாய்த்தரும்.
5. நோய்களைக் குணப்படுத்தும் செலவுகள் அதிகமாவதால், இறைச்சியின் விலையும் அதிகமாகிறது.
6. சூழ்நிலைக் காரணிகளால் விலங்கு நோய்கள் மனிதருக்குப் பரவக் கூடும். எ-டு சால்மோனெல்லா.
12. செயற்கை விந்நேற்றம் எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?
1930 களில் நடைமுறைக்கு வந்தது.
13. மிகச்சிறந்த பெருக்கும் நுணுக்கமாகக் கருதப்படுவது எது?
வணிகச் சிறப்புள்ளதும் பயனுள்ளதுமான விலங்குகளை, உரிய வழியில் மரபணுக்களைக் கையாண்டு உற்பத்தி செய்தல்.
14. விலங்கு நோய் என்றால் என்ன?
ஒட்டுண்ணிகளில் ஏற்படும் நோய். மனிதருக்கும் பரவக் கூடியது. எ டு நாய்க்கடி.
15. எத்தனை விலங்கு நோய்கள் உள்ளன?
100 க்கு மேற்பட்ட விலங்கு நோய்கள் உள்ளன.
16. ஆங்கில மருத்துவர் எட்வர்டு ஜென்னர் (1749 - 1823) கண்டறிந்த உண்மை யாது?
பால் பண்ணையில் வேலை செய்பவர்களுக்கு மாட்டம்மை (கோமாரி) வார்க்கிறது. இதற்குப் பின் இவர்களுக்குப் பெரியம்மை வருவதில்லை.
17. இவர் அம்மை குத்துதலை எந்த ஆண்டு கண்டறிந்தார்?
1796 இல் கண்டறிந்தார்.
18. இதிலுள்ள அடிப்படை என்ன?
நோய்க்கு எதிராக எதிர்ப்புப் பொருள்கள் உண்டாகின்றன.
19. கால்நடை நோய்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? அவை யாவை?
இரண்டு வகை.
1. தொற்றும் நோய்கள்
2. தொற்றா நோய்கள்.
20. இவை பரவக் காரணிகள் யாவை?
நச்சுயிரிகள், குச்சிவடிவ உயிர்கள், பூஞ்சைகள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கால்நடை மருத்துவம் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோய்கள், விலங்கு, பரவக், யாவை, ஏற்படும்