விலங்கியல் :: கால்நடை மருத்துவம்
1. கால்நடை அறிவியலின் புதுப் பெயர் என்ன?
விலங்கு அறிவியல்.
2. முதன் முதலில் வீட்டு விலங்காக வளர்க்கப்பட்டது எது?
10,000 ஆண்டுகளுக்கு முன் நாய்தான் வீட்டுவிலங்காக வளர்க்கப்பட்டது.
3. அடுத்து வீட்டு விலங்காக வளர்க்கப்பட்டவை எவை?
கி.மு. 7,000 இல் ஆடுகள் வீட்டு விலங்குகளாக வளர்க்கப்பட்டன. இவற்றிற்குப் பின் குதிரைகள், மான்கள், ஒட்டகங்கள் முதலியவை வீட்டு விலங்குகளாக ஆயின.
4. குதிரை உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் நாடு எது?
சீனா.
5. சீனாவிற்கு அடுத்துக் கால்நடை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடுகள் எவை?
இந்தியா, அமெரிக்கா, பிரேசில், உருசியா, டென்மார்க் முதலியவை.
6. மரபுவழிப் பாடத்திட்டத்தில் விலங்கு அறிவியலின் நிலை என்ன?
கால்நடை உற்பத்தியின் தொழில்நுட்பத்தை ஆராய்தல். கால்நடை என்பது ஆடு, மாடு, குதிரை, பன்றி முதலி யவை ஆகும்.
7. புரதத்தின் வகைகள் யாவை?
1. தாவரப்புரதம்
2. விலங்குப் புரதம்.
8. தாவரப்புரதம் உலக அளவில் எந்த அளவு கிடைக்கிறது?
70% அளவு கிடைக்கிறது.
9. விலங்குப் புரதம் எந்த அளவு கிடைக்கிறது?
30% அளவு கிடைக்கிறது.
10. கால்நடை மருத்துவம் என்றால் என்ன?
வீட்டு விலங்குகளிடத்தும் காட்டு விலங்குகளிடத்தும் நோய்கள் உண்டாதலை ஆராய்தல், தடுத்தல், பண்டுவம் செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கால்நடை மருத்துவம் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கால்நடை, வீட்டு, கிடைக்கிறது, அளவு, என்ன