விலங்கியல் :: கால்நடை மருத்துவம்
21. நமக்கும் கால்நடைக்கும் பொதுவாக வரும் இரு நோய்கள் யாவை?
1. அம்மை
2. என்புருக்கி நோய்.
22. கால்நடைக் கொள்ளை நோய் என்றால் என்ன?
இது தீமை தருவது, தொற்றக்கூடியது. கால்நடையில் காய்ச்சல் உண்டாகும், கழிச்சலும் இருக்கும். சளிப் படலத்திலிருந்து ஒழுக்கும் இருக்கும். ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படுவது. மூச்சு மூலமும் மாசுள்ள பொருள்களைத் தொடுவதின் மூலமும் ஏற்படுவது. தடுப்பு மருந்து உள்ளது.
23. கோமாரி எவ்வாறு உண்டாகிறது?
இது ஒரு தொற்றுநோய். ஆவைன் நச்சுயிரியினால் உண்டாவது. பசுவின் காம்பிலும் மடியிலும் புண்களை ஏற்படுத்துவது. இதன் மித வடிவம் மனிதரைத் தொற்றக் கூடியது.
24. நாய்க்கடி என்றால் என்ன?
நச்சுயிரியினால் உண்டாகும் கொடிய நோய். இதன் அறிகுறிகள் நரம்பு உறுத்துணர்ச்சிகள், மூளைச்சேதம், நடக்க இயலாமை, இறுதியில் சாவு. இதற்குப் பண்டுவம் கண்டறிந்தவர் லூயி பாஸ்டர். 14 ஊசிகள் தொப்புளைச் சுற்றிப் போட்டுக் கொள்ள வேண்டும்.
25. சால்மோனெல்லா என்பது யாது? அதன் தீமை என்ன?
கோல் வடிவ உயிரி. மிகப் பெரிய பேரினத்தில் ஒன்று. அழுகிய உணவில் நஞ்சு உண்டாக இதுவே காரணம். எலிகள், சுண்டெலிகள், பறவைகள் முதலியவை இந்த நச்சுயிரோடு தொடர்பு கொண்டு நோயைப் பரப்புபவை.
26. சால்மோனெல்லா நோய் என்றால் என்ன?
விலங்குகளிடம் ஏற்படும் நோய், பல வடிவங்களில் உள்ளது. சால்மோனெல்லா காலராயிஸ் என்பது பன்றிகள் பெருமளவுக்குச் சாகக் காரணமாய் உள்ளது.
27. அரிப்பு நோய் (scrape) என்றால் என்ன?
இதன் அடைகாலம் நாட்கணக்கிலும் மாதக்கணக்கிலும் ஆண்டுக்கணக்கிலும் இருக்கும். செம்மறியாடுகளில் அழிவை உண்டாக்கும் நச்சுயிரி நோய். இதன் அறிகுறிகள் அரிப்பு ஏற்படும். அரிப்பைப் போக்க ஆடுகள் மரத்தில் தங்கள் உடலைத் தேய்த்துக் கொள்ளும். ஒரு நரம்புக் கோளாறு நோய். பண்டுவம் இல்லை.
28. பஞ்சு வடிவ மாட்டு மூளைநோய் (BSE) என்றால் என்ன?
அரிப்பு நோய் நுண்ணுயிரி தீவனத்தில் கலப்பதால் ஏற்படுவது. 1990 களில் பிரிட்டனில் இந்நோய் ஏற்பட்டது. இது அரிப்பு நோயோடு தொடர்புள்ளது.
29. என்புருக்கி நோய் என்றால் என்ன?
குச்சிவடிவ உயிரியால் ஏற்படும் தொற்றுநோய் இந் நுண்ணுயிரியின் பெயர் மைக்கோபேக்டிரியம் டியுபகுளேசிஸ். உணவு மூலம், மூச்சுமூலமும் ஏற்படுவது. இதன் அறி குறிகள் உடல் மெலிதல், திசு சிதைதல், இறுதியில் இறப்பு.
30. அடைப்பான் நோய் என்றால் என்ன?
ஒரு கொடிய குச்சிவடிவ நச்சுயிரி நோய். கால்நடைகளை அதிகம் பாதிப்பது. எவ்வித அறிகுறியும் இல்லாமல் விலங்குகள் சாகும். நச்சுயிரி உணவு அல்லது நீர் மூலம்
பரவுவது. இதன் அறிகுறிகள் அதிகக் காய்ச்சல், உடல் துளைகளிலிருந்து குருதிக் கசிவு. நச்சுயிரி, மேல்மூச்சு வழியாக உட்செல்வது. தலையிலும் கழுத்திலும் வீக்கம் உண்டாகும். இந்நோய் கண்ட விலங்குகள் இறப்பது உறுதி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கால்நடை மருத்துவம் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோய், என்ன, என்றால், இதன், நச்சுயிரி, அரிப்பு, சால்மோனெல்லா, ஏற்படும், உள்ளது, உண்டாகும், இருக்கும், ஏற்படுவது, அறிகுறிகள்