விலங்கியல் :: முதுகு எலும்பு உள்ள விலங்குகள்
21. விரியன் என்றால் என்ன?
இது சிறிய நச்சுத்தன்மையுள்ள பாம்பு. கட்டுவிரியன், கண்ணாடி விரியன் எனப் பலவகை.
22. நஞ்சுள்ள பாம்புகளில் பெரியது எது?
அரச நாகம் காடுகளில் வாழ்வது. நீளம் 2 மீட்டர். ஒபியாபேகஸ் ஹான்னா இதன் அறிவியல் பெயர்.
23. நச்சற்ற பாம்புகளில் மிகப் பெரியது எது?
மலைப்பாம்பு. காடுகளில் வாழ்வது. நீளம் 3 மீ.
24. நச்சுப்பற்கள் என்பவை யாவை?
நச்சுப்பாம்பின் மேல் தாடையிலுள்ள வளைந்த இரு கோரைப் பற்கள் கடிக்கும் பொழுது நஞ்சைச் செலுத்த ஊசிபோல் பயன்படுவது.
25. தோலுரித்தல் என்றால் என்ன?
பல்லி, பாம்பு, கரப்பான் முதலியவை தங்கள் தோலை உரித்தல். இது பாம்பைப் பொறுத்த வரை சட்டை உரித்தல் ஆகும்.
26. மலைப்பாம்பு என்பது யாது?
பாம்புள்ள மிகப்பெரியது, நச்சற்றது. தன் இரையைச் சுற்றி வளைத்து நெருக்கிக் கொன்று விழுங்கும். விலங்குக் காட்சியகங்களில் பார்வைப் பொருள்.
27. மலைப்பாம்பிற்கு அடுத்த பெரிய பாம்பு எது?
அரசநாகம் இதற்கு அடுத்ததாகச் சொல்லத்தக்கது சாரைப் பாம்பு.
28. அனகோண்டா என்பது யாது?
மலைப்பாம்புக் குடும்பத்தைச் சார்ந்த பெரிய பாம்பு தென் அமெரிக்காவில் நீரில் வாழ்வது.
29. கடற்பாம்பு என்பது யாது?
கடலில் வாழும் சிறிய பாம்பு, நஞ்சுள்ளது.
30. முதலைகளின் சிறப்பியல்புகள் யாவை?
1. பெரும்பாலும் ஆறு, ஏரி முதலிய நீர் நிலைகளில் வாழபவை.
2. உடல் வெப்பநிலை சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபவை.
3. கடினப் புறத்தோல் செதில்களால் மூடப்பட்டிருக்கும்.
4. முட்டையிடுபவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுகு எலும்பு உள்ள விலங்குகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பாம்பு, யாது, வாழ்வது, என்பது