விலங்கியல் :: முதுகு எலும்பு இல்லாத விலங்குகள்
61. இவற்றின் சிறப்பியல்புகள் யாவை?
1. நிலத்தில் வாழ்பவை
2. உடல் மேற்பரப்பு அல்லது காற்றுக்குழல் மூலம் மூச்சு விடுபவை.
3. தலை, மார்பு, வயிறு என உடல் கண்டங்கள் பிரிந்திருக்கும்.
4. தலை - மார்பில் முதிர்ச்சி நிலையில் நான்கிணை கால்கள் இருக்கும்.
62. ஒட்டுறுப்பு என்றால் என்ன?
இணையுறுப்பாக உள்ள புறவுறுப்பு. இவ்வுறுப்பு கணுக்காலிகளில் உண்டு. இணை இணையாக இருப்பது. இணையின் ஒவ்வொரு பகுதியும் கணுக்களால் ஆகியிருக்கும். இக்கணு அமைப்பே கணுக்காலிகளுக்கு அப்பெயர் வழங்கக் காரணம்.
63. ஒட்டுறப்புகளில் மிகப்பெரியது எது?
யானையின் துதிக்கை.
64. உணரிகள் என்றால் என்ன?
தலையில் பொருந்தி இருக்கும் கணுக்காலிகளின் ஒட்டுறுப்புகள்.
65. சிற்றுணரிகள் என்றால் என்ன?
நண்டின விலங்குகளில் உணரிகளுக்கு முன்னுள்ளவை, சிறியவை, கணுக்களாலானவை. ஒரினை முதல் உணர் உறுப்புகளே சிற்றுணரிகள் ஆகும்.
66. மட்டப்பட்டு என்றால் என்ன?
கூட்டுப்புழுப் பருவம் தாண்டி முதிர்ந்த நிலையில் பட்டுப் பூச்சி வெளிவந்தவுடன், அதன் கூட்டிலிருந்து எடுக்கப் படும் நூல். தரத்தில் மிகக் குறைந்தது.
67. நிமிளை என்றால் என்ன?
மஞ்சள் நிறப்படிவ உயிர்ப்பிசின். அணிகலன்களில் பயன்படுவது.
68. மாலதியான் என்பது யாது?
பாதுகாப்பான பூச்சிக்கொல்லி.
69. மெலானிள் என்பது என்ன?
தாவரங்களிலும் விலங்குகளிலும் காணப்படும் நிறமித் தொகுதிகளில் ஒன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுகு எலும்பு இல்லாத விலங்குகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்