விலங்கியல் :: முதுகு எலும்பு இல்லாத விலங்குகள்
21. கண்ட அமைவு என்றால் என்ன?
கீழின விலங்குகளில் உடல் கண்டங்கள் அல்லது துண்டங்கள் அமைந்திருக்கும் முறை. எ-டு மண்புழு.
22. வளைய உடலிகள் என்றால் என்ன?
வளைத்தசைப் புழுக்கள். உடல் வளையங்களானவை. திட்டமான உடற்குழி, உணவுக்குழி அமைந்திருக்கும். எ-டு. மண்புழு, அட்டை
23. அட்டைகள் என்பவை யாவை?
இருபால் பண்புள்ள வளைய உடலிகள். நீரிலும் நிலத்திலும் வாழ்பவை. தட்டையான உடல். உடலின் முன்னும் பின்னம் உறிஞ்சிகள் உண்டு. இவை இடம் பெயரவும் பிடிப்புக்கும் பயன்படுபவை.
24. இருபாலி என்றால் என்ன?
ஒரே உயிரியல் ஆண் பெண் இனப் பெருக்க உறுப்புகள் இருத்தல், மண்புழு.
25. மெல்லுடலிகள் என்பவை யாவை?
உடலில் துண்டங்கள் இரா. தசைக்கால் மூடகம் உண்டு. புறக்கூடு ஒட்டாலானது. நிலம், நன்னீர், கடல் நீர் ஆகிய மூன்றிலும் வாழ்வது. எண்காலி, சிப்பி, நத்தை.
26. முதுகு எலும்பு இல்லாத விலங்குகளில் மிகப் பெரிய பிரிவு எது?
கணுக்காலிகள், கரப்பான்.
27. அரசநண்டு என்பது யாது?
உண்மை நண்டன்று. தொடக்க காலக்கணுக்காலி. புழுக்களையும் நத்தைகளையும் உணவாகக் கொள்வது.
28. இரு கிளை உறுப்பு என்றால் என்ன?
நண்டு முதலிய ஒட்டுடலிகளில் காணப்படும் உறுப்பு.
29. இறால் என்பது யாது?
சிறிய நண்டுவகை விலங்கு. கடலில் வாழ்வது உண்ணக்கூடியது.
30. இறால் வளர்ப்பு என்றால் என்ன?
உணவுச் சிறப்புக்கருதி இறால்கள் நன்னீர் வயல்களில் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு ஹெக்டேர் நிலத்திலும் 500-2000 கிகி இறால் கிடைக்கிறது. ஜப்பானில் ஒரு ஹெக்டேருக்கு 6000 கிகி இறால் கிடைக்கிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுகு எலும்பு இல்லாத விலங்குகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, இறால், உடல், மண்புழு