விலங்கியல் :: முதுகு எலும்பு இல்லாத விலங்குகள்
41. தேன் பருந்து என்றால் என்ன?
தேனிக்களையும் குளவிகளையும் தின்னும் பருந்து.
42. தேன் மெழுகின் பயன்கள் யாவை?
பல சேர்மங்கள் சேர்ந்த மஞ்சள் நிறப்பொருள். தன் கூட்டைக் கட்டத் தேனியால் சுரக்கப்படுவது. மெழுகுப் பொருள்கள், மருந்துகள், ஒப்பனைப் பொருள்கள் முதலியவை செய்யப்பயன்படுவது.
43. தேனி நச்சின் இயல்பு யாது?
தேனிக்கள் கொட்டும்பொழுது, உட்செலுத்தப்படும் நச்சு. குறைந்த அளவு மூலக்கூறு மதிப்புள்ள புரதமும் இஸ்டமைனும் உண்டாக்கும் நொதிகளும் இதில் முதன்மையாக இருக்கும்
44. எறும்புகள் என்பவை யாவை?
சமூகப் பூச்சிகள். சிறகற்றவை, சுறுசுறுப்பானவை. உணரிகள் உண்டு. வீட்டுத் தொற்றுயிரிகள்.
45. எறும்பால் பரவல் என்றால் என்ன?
விதைகள் முதலியவை எறும்புகளினால் பரவல். எ-டு. கேஃவிபோரஸ் வகை விதைகள்.
46. அரக்கு என்பது யாது?
பெண் அரக்குப்பூச்சி உண்டாக்கும் பிசின். இது இசைத்தட்டுகள் செய்யவும் நகை வெற்றிடங்களை நிரப்பவும் பயன்படுகிறது.
47. பெராமோன் என்றால் என்ன?
செய்தித் தொடர்பிற்காகப் பூச்சிகள் சுரக்கும் வேதிப்பொருள்.
48. நிலைநிறுத்திகள் என்பவை யாவை?
குறுகிய கரணை வடிவமுள்ள உண்மை ஈக்களின் பின் இறக்கைகள் பறக்கும் பொழுது அதிர்ந்து, நிலை நிறுத்திகளாகச் (சமனாக்கிகளாக) வேலை செய்பவை.
49. வண்ணத்துப்பூச்சி என்றால் என்ன?
இறக்கைகளும் செதில்களும் உள்ள பூச்சி. இறக்கைகளாலும் செதில்களாலும் உடல் மூடப்படுவது. தொகுப்புணரிகள் இருப்பதால் அத்துப்பூச்சியிலிருந்து வேறுபடுவது. குழல்வாய் தேன் உறிஞ்சும் சிறப்புறுப்பு.
50. போலிப்புணர்ச்சி என்றால் என்ன?
தன் நிறமொத்த பூவைப் பூச்சி என எண்ணி, அதனை ஆண்பூச்சி புணரமுயலுதல். விளைவு அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுதல். நிறமட்டுமல்லாமல் வடிவமும் மணமும் புணருவதற்குக் காரணம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுகு எலும்பு இல்லாத விலங்குகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், யாவை, தேன்