விலங்கியல் :: முதுகு எலும்பு இல்லாத விலங்குகள்
51. குழல் வாய் என்றால் என்ன?
உறிஞ்சுகுழல் எ-டு வண்ணத்துப்பூச்சி.
52. இனப்பிரிவு என்றால் என்ன?
தேனி, எறும்பு முதலிய சமூகப்பூச்சிகளில் காணப்படும் பிரிவு. எ-டு. அரிசி, வேலையாட்கள், ஆண்கள்.
53. மரவட்டை என்றால் என்ன?
பயிருண்ணி. காற்றுக் குழாய்மூலம் மூச்சுவிடுவது. உருளை வடிவ உடல் முதல் மூன்று வட்டுக்களைத் தவிர ஏனைய ஒவ்வொன்றும் ஈரிணை ஊரும் கால்களைக் கொண்டவை.
54. பற்றிகள் என்றால் என்ன?
சில ஆண் பூச்சிகளின் வயிற்றின் பின் முனையில் காணப்படும் ஒரினை இணையுறுப்புகள். கலவியின் பொழுது பெண்பூச்சியைப் பற்றப் பயன்படுபவை.
55. உள்ளுறை வளர்ச்சி என்றால் என்ன?
சில ஈக்களில் முட்டை பொறிந்ததும் இளம் உயிரிகள் தாய் உடலிலேயே தங்கி ஊட்டம் பெறும். முதிர்ச்சி யடைந்ததும் அவை வெளியேறிக் கூட்டுப் புழுவாகும்.
56. கொசுக்கள் என்பவை யாவை?
நோய் பரப்பும் உயிரிகள். குயூலக்ஸ் பேட்டிகன்ஸ் யானைக் காலையும் அனோபிலிஸ் மலேரியாவையும் பரப்புபவை.
57. அனோபிலிஸ் கொசு என்றால் என்ன?
மலேரியா நோயைப்பரப்புவது.
58. இதைக் கண்டறிந்தவர் யார்?
சர் ரெனால்டு ராஸ்.
59. மின்மினி ஒளிர்வது எவ்வாறு?
இதன் வயிற்றுத் துண்டங்களில் ஒளி உறுப்புகள் உள்ளன. இங்கு லுசிபெரின் என்னும் வேதிப்பொருள் லுசிபெரஸ் என்னும் நொதியினால் ஆக்ஸிஜன் ஏற்றம் பெறுவதால், நிற ஒளிர்வு இரவில் உண்டாகிறது.
60. சிலந்தியங்கள் என்றால் என்ன?
கணுக்காலியின் ஒரு வகுப்பு. இதில் தேள், சிலந்தி முதலியவை அடங்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுகு எலும்பு இல்லாத விலங்குகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்