இயற்பியல் :: ஒலிபரப்பும் ஒளிபரப்பும் - பக்கம் - 6
51. அதிர்வியைவு என்றால் என்ன?
வானொலிச் செலுத்தி அல்லது பெறுவியைக் குறிப் பிட்ட அதிர்வு எண்ணில் (ட்யூனிங்) இயங்கச் செய்தல்.
52. ஒத்ததிர்வு என்றால் என்ன?
தன் இயல்பான அதிர்வெண் நிலையில் ஒரு தொகுதியின் அலைவு. இது அதிர்வியைவிற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.
53. பண்பேற்றம் என்றால் என்ன?
ஊர்தி அலையில் குறிபாட்டைச் சேர்த்தல். இதனால் குறிபாட்டிலுள்ள செய்தி ஊர்தியலையோடு சேர்ந்து செல்லும்.
54. பண்பிறக்கம் என்றல் என்ன?
பண்பேற்றம் பெற்ற ஊர்தி அலையிலிருந்து செய்தியைப் பிரிக்கும் முறை.
55. தூண்டுதுலக்கி (transponder) என்றால் என்ன?
Transmitter responder என்பதின் சுருக்கம் மாற்றி அமைக்கும் கருவி. வானொலி அல்லது ரேடார் கருவி யமைப்பு குறிகளைப் பெற்றுத் தானே அவற்றிற் கேற்றவாறு குறிகளை அனுப்புவது. செயற்கை நிலாக்களில் அதிகம் பயன்படுவது.
56. மாக்ஸ்வெல்லின் மின்காந்தக் கொள்கைக்கு ஆய்வுச் சான்று அளித்தவர் யார்? எப்பொழுது? எவ்வாறு?
1888இல் ஹெர்ட்ஸ் அளித்தார்.வானொலி அலைகளைப் பகுத்தும் உருவாக்கியும் ஆய்வுச் சான்றை அளித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒலிபரப்பும் ஒளிபரப்பும் - பக்கம் - 6 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்