இயற்பியல் :: ஒலிபரப்பும் ஒளிபரப்பும் - பக்கம் - 2
11. கேள் அலை என்றால் என்ன?
20-20000 அதிர்வெண் கொண்ட கேட்கக் கூடிய அலை.
12. அதிர்வெண் என்றால் என்ன?
அகடு முகடுகளின் எண்ணிக்கை.
13. அலைவு இயக்கம் என்றால் என்ன?
அகடுமுகடுகள் மாறிமாறி ஏற்படுவது.
14. அலைவரைவி என்றால் என்ன?
அலை வடிவ அளவை வரையுங் கருவி.
15. அலைவழிகாட்டி என்றால் என்ன?
செறிவு ஒடுங்கல் இல்லாமல் நுண்ணலை மின்காந்தக் கதிர்வீச்சு செல்லும் உட்குழிவான குழாய்.
16. அலைநீளம் என்றால் என்ன?
ஒர் அலையின் ஒரு முழுச் சுற்றின் முனைகளுக்கிடையே உள்ள தொலைவு.
17. இதன் தொடர்பு என்ன?
இது அலைவு விரைவோடும் (C) அதன் அதிர்வெண் னோடும் (V) தொடர்புடையது. C=Vλ. λλ-லேம்டா.
18. அலைமானி என்றால் என்ன?
வானொலி அதிர்வெண் கொண்ட மின்காந்தக் கதிர்வீச்சின் அலைநீளத்தை அளக்குங் கருவி.
19. அலைஎண் என்றால் என்ன?
ஒர் அலகு நீளத்தின் ஒர் அலையின் சுற்றுகளின் எண்ணிக்கை.
20. அலை-துகள் இருமை என்றால் என்ன?
அலைகளைச் சுமந்து செல்லும் ஆற்றல் அணுவாகவும் துகளாகவும் இருக்கலாம் என்னும் இரு நிலைக் கருத்து.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒலிபரப்பும் ஒளிபரப்பும் - பக்கம் - 2 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், அதிர்வெண்