இயற்பியல் :: ஒலிபரப்பும் ஒளிபரப்பும் - பக்கம் - 3

21. அலைக்கொள்கை என்றால் என்ன?
ஒளி அலைகளாகச் செல்கிறது என்னுங் கொள்கை.
22. அலைத்தொடர் என்றால் என்ன
ஒரே அலைக்கழிவினால் உண்டாக்கப்படும் அலை வரிசை. குறிப்பிட்ட கால அளவு உடையது.
23. வீச்சு என்றால் என்ன?
அலைப்பண்புகளில் ஒன்று.
24. வீச்சுப் பண்பேற்றம் என்றால் என்ன?
வானொலிச் செலுத்துகையில் எளிய வகைப் பண்பேற்றம்.
25. உணரிகள் என்றால் என்ன?
வானொலி, தொலைக் காட்சி ஆகியவற்றில் அலைகளைப் பெறும் பகுதி.
26. அலைவாங்கி என்றால் என்ன?
வானொலி அலைகளைப் பெறவும் செலுத்தவும் பயன்படும் கருவியமைப்பு.
27. யாகி அலைவாங்கி என்றால் என்ன?
கதிரியல் தொலைநோக்கிகளுக்கும் தொலைக்காட்சி களுக்கும் பயன்படும் திசைசார் அலைவாங்கித் தொடர்.
28. வானொலி அலை என்றால் என்ன?
மின் காந்த அலை.
29. இதன் பயன் யாது?
ஒலிபரப்பிலும், ஒளிபரப்பிலும் பயன்படுவது.
30. ஒலிபரப்பு என்றால் என்ன?
ஒரு நிகழ்ச்சியை ஒலியாக மட்டும் பரப்புவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒலிபரப்பும் ஒளிபரப்பும் - பக்கம் - 3 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, வானொலி