இயற்பியல் :: ஒலிபரப்பும் ஒளிபரப்பும் - பக்கம் - 1
1. அலை என்றால் என்ன?
ஒர் ஊடகத்தில் ஏற்படும் ஒழுங்கான அலைக்கழிவு. இதன் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஆற்றல் மாற்றம் ஏற்படுகிறது.
2.அலைப்பண்புகள் யாவை?
1. பரவு விரைவு.
2. அதிர்வெண்.
3. அலை நீளம்.
4. வீச்சு
3. அலை வகைகள் யாவை?
1. இயக்க அலை.
2. நிலையலை.
3. குறுக்கலை.
4. நெடுக்கலை
5. முன்னேறுஅலை
6. வானொலி அதிர்வெண் அலை.
7. ஊர்தி அலை.
8. கேள் அலை.
4. இயக்க அலை என்றால் என்ன?
இயக்கமுடையது.
5. நிலை அலை என்றால் என்ன?
இதன் வடிவம் ஊடகத்தின் வழியாகச் செல்லாமல் நிலைத்திருப்பது.
6. குறுக்கலை என்றால் என்ன?
இம்மிகள் அதிர்வடைகின்ற திசைக்குச் செங்குத்தான திசையில் இதில் அலைவு பரவும்.
7. நெடுக்கலை என்றால் என்ன?
இம்மிகள் அதிர்வடைகின்ற திசையிலேயே இதில் அலை பரவும்.
9. வானொலி அதிர்வெண் அலை என்றால் என்ன?
ஆயிரக்கணக்கான அதிர்வுகளைக் கொண்ட மின்காந்த அலை.
10. ஊர்தி அலை என்றால் என்ன?
குறிப்பிட்ட அதிர்வெண் கொண்டது. தகவலைக் கொண்டுச் செல்வது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒலிபரப்பும் ஒளிபரப்பும் - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, அதிர்வெண்