முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » காற்று வெளியும் வானிலையும் - பக்கம் - 5
இயற்பியல் :: காற்று வெளியும் வானிலையும் - பக்கம் - 5
41. ஈரமாக்கி என்றால் என்ன?
காற்றுக்கு ஈரத்தை அளித்துத் தேவையான ஈர நிலைமைகளை நிலைநிறுத்துங்கருவி.
42. மூடுபனி என்றால் என்ன?
இதை மஞ்சு எனலாம். புழுதித்துகள்களில் நீர்த்துளிகள் சுருங்குவதால் உண்டாவது.
43. உறைபனி என்றால் என்ன?
உறைந்த பனித்திவலைகள். நீரின் உறைநிலையை விடக் குளிர்ச்சியாக உள்ள பொருள்களில் நீராவி பதங்கமாவ தால் உண்டாகும் பனிக்கட்டியுறை.
44. உறைபனிக்கட்டு என்றால் என்ன?
மிகக் குளிரினால் தோல் காயமுறுதல், சிவத்தல், வீக்கம், வலி முதலியவை. பனிநாடுகளில் உள்ளவர்களுக்கு ஏற்படுவது.
45. புகைப்பனி என்றால் என்ன?
இதில் தடித்த கரும் புழுதியும் புகைக்கரி படிந்த கந்தகமும் இருக்கும். சாதகக் காற்று வெளி நிலைமைகளில் தொழிற்சாலை நகரங்களில் காற்றை மாசுப்படுத்துவது. நுரையீரல்களைப் பாதிப்பது.
46. புகை என்றால் என்ன?
வளியிலுள்ள நேர்த்தியான திண்மத் துகள்களின் தொங்கல். நிலக்கரிப்புகை முதன்மையாகக் கரித் துகள்களாலானது. மாசுபடுத்துவது.
47. பனிமூட்டம் என்றால் என்ன?
வளிநிலையிலுள்ள கூழ்மத் தொங்கல். குளிர்ந்த நீர்த்துளிகளாலானது.
48. பனிப்புயல் என்றால் என்ன?
காற்றுவெளியின் உயர்பகுதிகளிலுள்ள காற்று விரைந்து குளிர்ச்சியடையும். இப்பொழுது அங்குள்ள நீராவியானது நேரடியாக உறைந்து பனிப்படிகங்கள் ஆகின்றன. இவையே பனிப்புயலாக மாறுபவை.
49. மழை என்றால் என்ன?
காற்றுவெளி ஈரம் சுருங்கி நீர்த்துளிகளாக விழுவது.
50. கோரியாலி விசை என்றால் என்ன?
காற்று, நீர், எரிபொருள்கள் முதலிய சுழல்தொகுதிகளில் கணக்கீடுகளை எளிமையாக்கச் சில சமயங்கள் பயன்படும் கற்பனை விசை. பிரஞ்சு இயற்பியலார் கோரியாலி 1835இல் முதன்முதலில் இக்கருத்தைப் பயன்படுத்தினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காற்று வெளியும் வானிலையும் - பக்கம் - 5 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, காற்று