முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » காற்று வெளியும் வானிலையும் - பக்கம் - 3
இயற்பியல் :: காற்று வெளியும் வானிலையும் - பக்கம் - 3
21. வானிலை முன்னறிவிப்பிற்குத் தற்காலத்தில் நிலையாகப் பயன்படுபவை யாவை?
வானிலை நிலாக்கள். எ.டு. இந்திய இன்சட்.
22. தாழ்வழுத்தம் என்றால் என்ன? இதன் விளைவு யாது?
காற்று மண்டல அழுத்தம் 76 செ.மீக்குக் கீழ்ச் செல்லுதல். இதனால் மழையும் புயலும் ஏற்படும்.
23. இடி என்றால் என்ன?
மின்னலை உருவாக்கும் மின்போக்கில் தோன்றும் காதுக்கு ஒவ்வாத இரைச்சல், அழுத்த அலை உயர்வால் நெருக்கங்களும் நெகிழ்வுகளும் உண்டாகும். இவையே இடி ஒசையை எழுப்புபவை.
24. மின்னல் என்றால் என்ன?
ஒரு முகிலிலிருந்து மற்றொரு முகிலுக்குக் காற்றுவெளி மின்சாரம் இறக்கம் பெறும்பொழுது உண்டாகும் கண்கூசும் ஒளி. இது முகிலிலிருந்து நிலத்திற்குப் பாய்வது. இதைத் தொடர்வது இடி.
25. மின்னல் தடுப்பான்கள் என்றால் என்ன?
இவை கட்டிடங்களில் பாதுகாப்பிற்கு வைக்கப்பட்டிருக்கும். இவை மின்னலிலுள்ள மின்சாரத்தை நிலத்திற்குக் கடத்திக் கேட்டைத் தவிர்க்கும்.
26. புயல் என்றால் என்ன?
முகில் மற்றும் மழையை உருவாக்கிய வண்ணம் சூறைக்காற்று சுழியிட்டுச் செல்லும். இவ்வாறு சுழியிட்டுச் செல்லும் குறையழுத்தப் பகுதியே புயல்.
27. புயல் வழியறிதல் என்றால் என்ன?
திரட்டிய வானிலைச் செய்திகளைக் கொண்டு புயல் எவ்வாறு உருவாகி மேல் நகர்ந்து செல்லும் என்பதை அறிந்து, அதன் தீய விளைவை அறிவித்தல். இதற்கு வானிலை நிலாக்கள் பெரிதும் பயன்படுகின்றன. தமிழ்நாட்டுக்கு நவம்பர் புயல் மாதம்.
28. முகில்கள் என்றால் என்ன?
இவை ஒருவகையில் உயர்மட்டத்தில் தோன்றும் மூடுபனியே. காற்றுவெளியில் உண்டாகும் நிகழ்ச்சிகளை விளக்குபவை. நடப்பிலிருக்கும் வானிலை நிலை மைகளை எடுத்துக் காட்டுபவை.
29. முகில்களின் வகைகள் யாவை?
1. மேல்மட்ட முகில்கள்.
2. இடைமட்ட முகில்கள்.
3. கீழ்மட்ட முகில்கள்.
4. செங்குத்து முகில்கள்.
30. கூழ்மப் படலம் (ஏரோசால்) என்றால் என்ன?
இது ஒரு கூழ்மத் தொகுதி. இதில் சிதறிய ஊடகம் வளி. எ.டு. மூடுபனி, பனி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காற்று வெளியும் வானிலையும் - பக்கம் - 3 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, முகில்கள், புயல், வானிலை, உண்டாகும், செல்லும்