முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » காற்று வெளியும் வானிலையும் - பக்கம் - 1
இயற்பியல் :: காற்று வெளியும் வானிலையும் - பக்கம் - 1

1. காற்று என்றால் என்ன?
பல வளிகளின் கலவை.
2. காற்றுவெளி என்றால் என்ன?
புவியைச் சூழ்ந்துள்ள வளியடுக்கு. காற்று மண்டலம் என்றுங் கூறலாம்.
3. காற்று வெளியிலுள்ள அடுக்குகள் யாவை?
கீழ் வெளி, அடுக்கு வெளி, அயனி வெளி, மேல் வளி.
4. அயன வெளியின் சிறப்பு யாது?
மின் காந்த அலைகளை மறித்து வானொலிச் செலுத்துகை நடைபெற உதவுவது.
5. காற்றுகளின் வகைகள் யாவை?
1. வாணிபக் காற்றுகள்.
2. பருவக் காற்றுகள்.
3. முனைக் காற்றுகள்.
4. நிலக் காற்றுகள்.
5. கடல் காற்றுகள்.
6. காற்றின் வேலைகள் யாவை?
1. அரித்தல்,
2. கடத்தல்.
3. படிய வைத்தல்.
7. காற்று வெளி இரைச்சல் என்றால் என்ன?
காற்று வெளித் தடையினால் வானொலி ஏற்பியில் உண்டாகும் இரைச்சல்.
8. மின் வெளியேற்றங்கள் என்றால் என்ன?
இவை காற்றுவெளியில் உண்டாகி, வானொலிப் பெறுவிகளில் கரமுரா என்னும் இரைச்சலை உண்டாக்கும்.
9. காற்றுவெளி அழுத்தம் என்றால் என்ன?
புவிமேற்பரப்பில் எப்புள்ளியிலும் காற்று எடையினால் அதற்கு மேல் உண்டாக்கப்படும் அழுத்தம்.
10. இதன் அளவென்ன?
கடல் மட்டத்தில் 76 செ.மீ. பாதரசக் கம்பத்தைக் காற்று வெளி தாங்கும். மலை உயரத்தில் இது குறைவு. கடலாழத்தில் அதிகம்.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காற்று வெளியும் வானிலையும் - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - காற்று, காற்றுகள், வெளி, என்ன, என்றால், யாவை