முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » காற்று வெளியும் வானிலையும் - பக்கம் - 2
இயற்பியல் :: காற்று வெளியும் வானிலையும் - பக்கம் - 2

11. பாரமானி என்றால் என்ன?
காற்றழுத்தத்தை அளக்க உதவுங் கருவி.
12. அழுத்தச் சமைப்பி என்றால் என்ன?
காற்றுவெளி அழுத்த அடிப்படையில் உணவுப் பொருள்களை வேகவைக்கும் சமையல் கருவி.
13. திட்ட அழுத்தம் என்றால் என்ன?
76 செ.மீ. நீளமுள்ள பாதரசக் கம்பத்தின் அழுத்தம், இதன் மதிப்பு 101325. பா.
14. இயல்பு வெப்பநிலையும் அழுத்தமும் என்றால் என்ன?
இயல்பு வெப்பநிலை 2730 k இயல்பு அழுத்தம் 76 செ.மீ.
15. அழுத்த அளவி என்றால் என்ன?
அழுத்தத்தை அளக்கும் கருவி.
16. வெற்றிடம் என்றால் என்ன?
ஒரு வளி காற்று அழுத்தத்திற்குக் கீழ்க் கொண்டுள்ள இடம்.
17. வெற்றிட வகைகள் யாவை?
மென்வெற்றிடம், வன்வெற்றிடம், மீவெற்றிடம், டாரிசல்லி வெற்றிடம் (பாரமானி).
18. வானிலை இயல் என்றால் என்ன?
வானிலை பற்றி விரிவாக ஆராயுந் துறை. இதற்குச் செயற்கை நிலாக்கள் பெரிதும் பயன்படுகின்றன.
19. வானிலை என்றால் என்ன?
இது காற்றுவெளிநிலைமை, கதிரவன் ஒளி, வெப்பநிலை, மப்புநிலை, ஈரநிலை, காற்றழுத்தம் ஆகிய காரணிகளை உள்ளடக்கியது.
20. வானிலை முன்னறிவிப்பு என்றால் என்ன?
அன்றாடம் வானிலை நிலையம் திரட்டும் வானிலைச் செய்திகளின் அடிப்படையில் அடுத்தநாள் வானிலை எவ்வாறு இருக்கும் என முன்கூட்டித் தெரிவிப்பது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காற்று வெளியும் வானிலையும் - பக்கம் - 2 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, வானிலை, இயல்பு, கருவி, அழுத்தம்