இயற்பியல் :: ஒலியியல் - பக்கம் - 4
31. ஒலிமீட்பு என்றால் என்ன?
நாடாப் பதிவியில் பதிவு செய்த ஒலியை மீண்டும் கேட்குமாறு செய்தல் ஒலிமீட்பாகும்.
32. ஒலிமீட்பின் பயன் யாது?
வானொலி நிகழ்ச்சிக்கு வேண்டிய இசை, சொற்பொழிவு, நேர்காணல் முதலிய நிகழ்ச்சிகளை முன்கூட்டியே பதிவு செய்து வேண்டிய நேரத்தில் அவற்றை ஒலிபரப்ப ஒலிமீட்பு உதவுவது.
33. எதிர்முழக்கம் என்றால் என்ன?
ஒர் அறையில் உண்டாக்கப்படும் வன்னொலி அலைகள்
சுவர்களில் மோதி மீண்டும் குறைந்த வீச்சு அலைகளாக ஒன்றன்பின் ஒன்றாக கேட்போரின் காதை அடையும். இறுதியாக இவை வலுவிழந்து கேட்க இயலாத அளவுக்கு மாறும். இந்நிலையில் அறையில் பேசுவதைப் புரிந்து கொள்ள இயலாது. இதுவே எதிர்முழக்கம்.
34. இதன் நன்மை யாது?
இசையரங்குகளிலும் திரையரங்கிலும் ஒரளவுக்கு இந்நிலை இருந்தால், ஒலி இனிமை இருக்கும்.
35. அதிர்ச்சிஅலை என்றால் என்ன?
மீஒலி நிலையில் பாய்மம் அல்லது வீழ்பொருள் ஒன்று செல்லுகின்ற பொழுது இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. மின்னல்தாக்கு, குண்டுவெடிப்பு முதலிய அலைக்கழிவுச் செயல்களாலும் இவ்வலை உண்டாகும்.
36. நெட்டலைகள் என்றால் என்ன?
அலைவு இயக்கம். இதில் ஆற்றல் மாறுகை, திசை போலவே ஒரே திசையில் ஊடக அதிர்வுகள் இருக்கும். எ-டு ஒலி அலைகள்.
37. உரப்பு என்றால் என்ன?
வீச்சு அதிகமானால் ஒலி அதிகமாகும்; குறைந்தால் ஒலி அதிகமாகும். நேர்விதப் போக்குள்ள இந்த ஒலியே உரப்பு. ஒலியின் பண்பு ஆகும்.
38. இழுவிசைமானி என்றால் என்ன?
ஒலியின் எடுப்பை அளக்குங் கருவி.
39. வெண்ணிரைச்சல் என்றால் என்ன?
வெடிப்பிரைச்சல் ஆகும். செய்தித்தொடர்பு வழிகளில் கம்பிகளிலுள்ள மின்னணுக்களில் வரம்பிலா அசைவினால் இது உண்டாகிறது.
40. இதன் பயன் யாது?
கணிப்பொறி விளையாட்டுகளில் இது நன்முறையில் பயன்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒலியியல் - பக்கம் - 4 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, யாது