இயற்பியல் :: ஒலியியல் - பக்கம் - 2
11. இசைமானி விதிகள் யாவை?
1. இழுத்துப் பொருத்தப்பட்ட கம்பியின் இழுவிசை(t) மாறாநிலையில், அதன் அதிர்வெண் (n) கம்பிநீளத்திற்கு (l)
எதிர்வீதத்தில் இருக்கும். அதாவது nl என்பது மாறா எண்.
2. இழுத்துப் பொருத்தப்பட்ட கம்பியின் நீளம் (l) மாறா நிலையில், அதன் அதிர்வெண் (n) இழுவிசையின் இருமடிமுலத்திற்கு நேர்விதத்தில் இருக்கும். அதாவது என்பது மாறா எண்.
3. இழுத்துப் பொருத்தப்பட்ட கம்பியின் இழுவிசை (t) மாறாநிலையில், குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்குக் கம்பி நீளம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு ( ) எதிர்வீதத்தில் இருக்கும். அதாவது T என்பது மாறாஎண்.
12. கட்டிட ஒலிஇயல் என்றால் என்ன?
அரங்கு ஒன்றினுள் ஒலி தெளிவாகக் கேட்பதற்குரிய நிபந்தனைகளை இத்துறை கூறுகிறது.
13. மீஒலி அதிர்வெண் என்றால் என்ன?
20,000 ஹெர்ட்சுக்கு மேலுள்ள அதிர்வெண்.
14. மீஒலியியல் என்றால் என்ன?
கேளாஒலிஇயல். ஒலி அலைகளைப் பற்றி அறியும் இயற்பியலின் ஒரு பிரிவு.
15. அகடு என்றால் என்ன?
ஒர் ஒலி அலையிலுள்ள பள்ளம்.
16. முகடு என்றால் என்ன?
ஒர் ஒலி அலையிலுள்ள மேடு.
17. இசைக்கவை என்றால் என்ன?
கேட்டலை ஆய்ந்தறியப் பயன்படுங் கருவி.
18. உரப்பு (வால்யூம் என்றால் என்ன?
வானொலி அல்லது தொலைக்காட்சியின் ஒலித்திண்மை. இதைக் கூட்டிக் குறைக்க ஏற்பாடு உண்டு.
19. கேள்திறன் வரம்புகள் யாவை?
அதிர்வுறும் ஒலியலைகள் அனைத்தும் மனிதர் காதுக்குக் கேட்பதில்லை. 20-20,000 அதிர்வெண் கொண்ட அலைகளையே கேட்க இயலும் இந்த எல்லையே கேள்திறன் வரம்புகள்.
20. கேள்திறன் அதிர்வெண் என்றால் என்ன?
செவியுறு அதிர்வெண். 30-2000 ஹெர்ட்ஸ் எல்லையில் அடங்கும் அலைஅதிர்வெண். இது செவிக்குப் புலனாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒலியியல் - பக்கம் - 2 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, அதிர்வெண், கேள்திறன், மாறா, இருக்கும், பொருத்தப்பட்ட, கம்பியின், இழுத்துப், என்பது