இயற்பியல் :: ஒலியியல் - பக்கம் - 3
21. கேள்மானி என்றால் என்ன?
செவியுணர்வுகளை அளக்குங் கருவி.
22. கேள்-காண் கருவி என்றால் என்ன?
ஒலி-ஒளிக் கருவிகள். ஒரே சமயத்தில் கேட்கக் கூடியதும் பார்க்கக் கூடியதுமான கருவி. எ-டு வானொலி, தொலைக்காட்சி. சிறந்த பயிற்றுங் கருவிகள் இவை.
23. எதிரொலி என்றால் என்ன?
சுவர், பாறை முதலிய பொருள்களில் ஒலி மறிக்கப்படும் பொழுது உண்டாகும் விளைவே எதிரொலி.
24. எதிரொலிப்பான் என்றால் என்ன?
கப்பலுக்குக் கீழுள்ள நீரின் ஆழத்தைக் காணும் கருவி. இந்நெறிமுறை சோனார் கருவியில் உள்ளது.
25. எதிரொலிக் கூடம் என்றால் என்ன?
வானொலி நிலையத்திலுள்ள எதிரொலிக்கும் அறை. பதிவு செய்யப்படும் ஒலியோடு உண்டாக்கப்படும் எதிரொலி விளைவுகள் சேர்க்கப்படுகின்றன.
26. எதிரொலியால் இடமறிதல் என்றால் என்ன?
வெளவால்கள், டால்பின்கள் ஆகியவை மீஒலி மூலம் பொருள்கள் இருக்குமிடத்தை அறிதலுக்கு இப்பெயர்.
27. லேப்லாஸ் திருத்தம் என்றால் என்ன?
ஒலிபரவும் ஊடகத்தின் அழுத்தம் மற்றும் பரும மாற்றங்கள், மாறா வெப்பநிலை மாற்றங்களாக அமைவதில்லை. இக்கருத்தின் அடிப்படையில் இவர் நியூட்டன் தொடர்பை மாற்றியமைத்தார்.
28. இசை என்றால் என்ன?
ஒழுங்கானதும் சீரானதுமான அதிர்வுகளால் உண்டாகும் இனிய ஒலி.
29. இசை ஒலியின் பண்புகள் யாவை?
1. இசைப்பு.
2. வலிமை.
3. பண்பு.
30. ஓசை என்றால் என்ன?
ஒழுங்கற்றதும் சீரற்றதுமான அதிர்வுகளால் உண்டாகிறது. இதை இரைச்சல் என்றுங் கூறலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒலியியல் - பக்கம் - 3 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கருவி, எதிரொலி