இயற்பியல் :: ஒலியியல் - பக்கம் - 1
1. ஒலி என்றால் என்ன?
ஒர் ஊடகத்தினால் (காற்று) செலுத்தப்படும் அதிர்வுகள் அடங்கியது. இந்த அதிர்வுகள் மாறிமாறி நெருக்கங்களாகவும் நெகிழ்வுகளாகவும் அமையும். ஒலி அழுத்த அலை என்றும் கூறப்படுவது. இது நெட்டலை வடிவமாகும்.
2. ஒலியின் பண்புகள் யாவை?
உரப்பு, பண்பு, எடுப்பு.
3. காற்றில் ஒலியின் விரைவு என்ன?
0"செஇல் 331.3 மீட்டர் வினாடி!
4. நீரில் ஒலியின் விரைவு என்ன?
நீரில் 25 செ.இல் 1498 மீட்டர் வினாடி’
5. கண்ணாடியில் ஒலியின் விரைவு யாது?
கண்ணாடியில் 20o செ இல் 5,000 மீட்டர் வினாடி!
6. வெற்றிடத்தில் ஒலிபரவுமா?
பரவாது. அது பரவ ஒர் ஊடகம் தேவை. திங்களில் காற்று இல்லாததால் ஒருவருக்கொருவர் பேசுவதைக் கேட்கமுடியாது. ஒலிக்கருவிகள் மூலமே கேட்க இயலும்.
7. சோனார் என்றால் என்ன?
ரேடார் போன்றது. இதன் பொருள் ஒலியால் வழியறிதலும் எல்லை காணலும். இது ஒரு கருவி மட்டுமல்லாது துணுக்கமும் ஆகும்.
8. இக்கருவியின் பயன் யாது?
இது நீருக்குக் கீழுள்ள பொருள்களை எதிரொலித்தல் முறையில் கண்டறியப் பயன்படுகிறது.
9. ஒலிப்பகுப்பு என்றால் என்ன?
மீஒலிக் கதிர்வீச்சால் மூலக்கூறுகளைச் சிதைத்தல்.
10. ஒலிமானி என்றால் என்ன?
இழுத்துப் பொருத்தப்பட்ட கம்பிகளின் அதிர்வுகளைப் பற்றி அறிய உதவுங் கருவி.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒலியியல் - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், ஒலியின், மீட்டர், விரைவு